வியாச மனம்-8 (ஜெயமோகனின் முதற்கனல் நூலை முன்வைத்து..)
படிக்கும் போதெல்லாம் சற்றே நெருடக்கூடிய திருக்குறள் ஒன்றுண்டு.”நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம்”என்பதே அது.பிறருக்கு துன்பம் செய்தவர்களே நோய்வாய்ப்படுகிறார்கள் என்பது உண்மையாகவே இருக்கட்டும்.அதற்காக,ஏற்கெனவே நோயில் நொந்து நொம்பலப்படுபவனை இப்படி மறுபடியும் குத்தலாமா என்று திருவள்ளுவரிடம் கேட்கத் தோன்றும்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஒருவனை திருவள்ளுவர் பார்க்கப் போனால் அவன் என்ன கதிக்கு ஆளாவான் என்பதை யோசித்துப் பாருங்கள். ஹிரோஷிமா குண்டு வெடிப்பு பற்றிய ஓர் ஆவணப்படமுண்டு.உடலெல்லாம் காயமாய் துவண்டு கிடக்கும் சிறுவன் ஒருவனை மருத்துவமனைக்குத் தூக்கி வருவார்கள்.ஏற்கெனவே காயங்களால் துடிக்கும் அந்தச் சிறுவனுக்கு ...
பேசவே முடியாதபெருமை
ஒளிமஞ்சள் பூச்சிலே ஓங்காரப் பேச்சிலே ஒய்யாரி நிற்கின்ற கோலம் களிதுள்ளும் கண்ணிலே கதைபேசும் போதிலே கலியெல்லாம் தீர்கின்ற ஜாலம் கிளிசொல்லும் சொல்லிலே கமலத்தின் கள்ளிலே கொஞ்சிவரும் பைரவியாள் நாமம் எளிவந்த அன்பிலே ஏங்கிடும் நெஞ்சிலே “ஏனெ”ன்று வருகின்ற மாயம் வீரத்தின் விளைநிலம் வெற்றியின் தாய்மடி வற்றாத கருணையின் ஊற்று ஈரத்தின் குளிரென இளங்காலைத் தளிரென இதயத்தை வருடிடும் காற்று நேரத்தின் கணங்களாய் காலத்தின் துளிகளாய் நொடிதோறும் ஒலிக்கின்ற பாட்டு பாரத்தில் வாடினால் பாதங்கள் தேடினால் புலனாகும் நம்பிக்கைக் ...
வியாச மனம்-7 (ஜெயமோகனின் முதற்கனல் நூலை முன்வைத்து..)
பீஷ்மருடனான முந்தைய சந்திப்பில் எவ்வளவு ஆற்றாமையும் சினமும் அம்பைக்கு இருந்ததோ இப்போது அதே அளவு அம்பையின் மனதில் பீஷ்மர் மீதான பிரியம் எழுந்து படகில் வழிந்து நதியை நிரப்பியது என்றே தோன்றுகிறது. அவளுக்குள் தூண்டப்பட்ட சுடர் வழியெங்கும் எப்படி விகசித்தது என்பதை ஜெயமோகன்,ஒளிமிகும் உவமை ஒன்றினால் விளக்குகிறார். “நெய்விழும் தீப்போல அவ்வப்போது சிவந்தும்,மெல்லத் தணிந்தாடியும்,சுவாலையென எழுந்தும் படகுமூலையில் அவள் அமர்ந்திருக்கையில்,படகு ஒரு நீளமான அகல்விளக்காக ஆகிவிட்டதென்று நிருதன் எண்ணிக் கொண்டான்.இரவு அணைந்தபோது, வானில் எழுந்தபலகோடி விண்மீன்களுடன் அவள் ...
வியாச மனம்-6 (ஜெயமோகனின் முதற்கனல் நூலை முன்வைத்து..)
இராமன் தோன்றுவதற்கு முன்னரே வான்மீகி இராமாயணத்தை எழுதிவிட்டார் என்று சொல்லப்படுவது பற்றி ஓஷோவிடம் அவருடைய சீடர்கள் கேட்டார்கள்.”முன்னரே எழுதப்பட்டது என்று பொருளல்ல. முன்னரே எழுதிவிடக்கூடிய அளவு கணிக்கக்கூடிய வாழ்க்கைமுறைதான் இராமனுடைய வாழ்க்கை.அவர் ஒரு சூழலில் எத்தகைய முடிவுகளை எடுப்பார் என்று கணித்துவிட முடியும் என்கிற பொருளிலேயே இவ்வாறு சொல்லியிருக்கக் கூடும்” என்றார் ஓஷோ. ஆனால் மகாபாரதம் ஒழுங்கின்மைகளின் கருவூலம். ஆதி பருவம் தொடங்கி வேறெங்கும் கேள்வியுறாத உறவுமுறைகளும் பிள்ளைப்பேறுகளும் நிகழ்களம்.அதிலும் மேலோட்டமாகக் காணும்போது புலப்படாத அம்சங்களையும்,பல நிகழ்வுகளைப் ...
ஈடாக ஒருதெய்வமோ?
பெருங்கொண்ட வனந்தனில் பசிகொண்ட வேங்கையின் பார்வைக்குக் கனல்தந்தவள் கருக்கொண்ட சிசுவுக்கு பசிதாகம் போக்கவே கொடியொன்று தருவித்தவள் உருக்கொண்டு வந்தாலும் அருவமாய் நின்றாலும் உயிருக்குத் துணையானவள் சரக்கொன்றை சூடுவோன் சரிபாதி மேனியில் சரசமாய் அரசாள்பவள் சுடர்வீசும் தீபத்தில் சுந்தர நகைகாட்டி சூழ்கின்ற ஒளியானவள் இடரான பிறவியும் இல்லாமல் போகவே இறுதிநாள் இரவானவள் கடலாடும் அலையெலாம் கைநீட்டும் நிலவினில் கலையாவும் அருள்கின்றவள் படையோடு வரும்வினை அடியோடு சாயவே பாசாங்குசம் கொண்டவள் நாமங்கள் ஆயிரம் நாவாரச் சொன்னாலும் நாயகி பேராகுமோ ஆமெந்த ...
வியாச மனம்-5 (ஜெயமோகனின் முதற்கனல் நூலை முன்வைத்து..)
21 ஆண்டுகளுக்கு முன்னர் எங்கள் நெருங்கிய உறவில் ஒரு திருமணம்.என் ஒன்றுவிட்ட சகோதரர்தான் மணமகன். திருமணம் முடிந்து மறுநாள் மாலை வேறோர் ஊரில் வரவேற்பு.மணமகளுக்கு அப்பா மட்டும்தான்.அம்மா இல்லை. அவர் மணமகன் வீட்டிற்கு வரவில்லை.மறுநாள் நேராக வரவேற்புக்கு வந்துவிடுவதாகச் சொல்லியிருந்தார். வரவேற்பு மேடைக்கு போவதற்கு முன்னர்,இப்போது எனக்கு அண்ணியாகிவிட்ட மணமகள்(பெயர் வண்டார்குழலி) தலைவலிக்கிறது என்று சொல்ல,பொறுப்புள்ள கொழுந்தனாய் மாத்திரை வாங்கிக் கொண்டு வருவதற்குள் மணமக்கள் மேடையேறியிருந்தனர். அப்போதுதான் உள்ளே நுழைந்திருந்த மணமகளின் தந்தைமண்டப வாயிலில் இருந்து தொலைவிலிருந்த ...