Blog

/Blog

பைரவி திருக்கோலம்

குங்குமத்தில் குளித்தெழுந்த கோலமடி கோலம் பங்கயமாய் பூத்தமுகம் பார்த்திருந்தால் போதும் அங்குமிங்கும் அலைபாய்ந்து அழுதநிலை மாறும் தங்குதடை இல்லாமல் தேடியவை சேரும் கைகளொரு பத்தினிலும் காத்தணைக்க வருவாள் நெய்விளக்கின் நடுவினிலே நித்திலமாய் சுடர்வாள் வெய்யில்மழை சேர்த்ததுபோல் வெப்பமாகிக் குளிர்வாள் பைரவியாள் தேரிலேறி பவனிவந்து மகிழ்வாள் ஆயகலை யாவுமவள் வாயிலிலே கூடும் தாயவளின் பார்வையிலே நின்றுவிளையாடும் ஓயும்வினை ஓடவரும் ஓங்கார ரூபம் வேய்குழலில் வீணையினில் வித்தகியின் நாதம் பக்தரெல்லாம் பரவசத்தில் பாடியாடி சிலிர்க்க முக்தரெல்லாம் மூன்றுவிழி மோகனத்தில் லயிக்க ...

வியாச மனம்-4 (ஜெயமோகனின் முதற்கனல் நூலை முன்வைத்து..)

கடலின் அக அடுக்குகளிடையே உப்புச்சுவையின் திண்மையிலும் பாசிகளிலும் பவளங்களிலும் ஊடுருவி வெளிவரும் மீனின் அனுபவம்,ஒரு நீச்சல் வீரனுக்கு ஒருபோதும் வாய்க்காது. வாழ்வின் அத்தனை அம்சங்களுக்கும் தன்னை முழுமையாக ஒப்புக் கொடுத்துவிட்ட ஒருவன் கணங்களின் சமுத்திரத்தில் மீனாகிப் போகிறான். தனக்கான இரையையும் தனக்கான வலையையும் அவன் ஒன்றே போல் அறிகிறான். இந்த மனோலயத்திற்கு மிகச்சிறந்த உதாரணம்,பீஷ்மர்.விதம்விதமான மனப்போராட்டங்களில் தன்னை முன்னிலைப்படுத்தாமல் காலம் முதுகில் சுமத்தும் காரியத்தை மட்டுமே முன்னெடுத்துச் செல்பவர் அவர். பீஷ்மரின் பிரம்மச்சர்யமும்,அரசபதவியில் அமர்வதில்லை என்னும் சங்கல்பமும் ...

கண்திறக்கும் கருணை

வைத்திருக்கும் கொலுநடுவே வைத்திடாத பொம்மையொன்று மைத்தடங்கண் விழிதிறந்து பார்க்கும் கைத்ததிந்த வாழ்க்கையென்று கண்கலங்கி நிற்பவர்பால் கைக்கரும்பு கொண்டுவந்து சேர்க்கும் மெய்த்தவங்கள் செய்பவர்கள் பொம்மையல்லஉண்மையென்று மேதினிக்குக் கண்டறிந்து சொல்வார் பொய்த்ததெங்கள் பாழும்விதி பேரழகி பாதம்கதி பற்றியவர் பற்றறுத்து வெல்வார்   மான்மழுவை ஏந்துகரம் மாலையிட நாணும்முகம் மாதரசி போலழகி யாரோ ஊன்பெரிதாய் பேணியவர் தேன்துளியைஉள்ளுணர்ந்தால் உத்தமியைத் விட்டுவிடு வாரோ வான்பெரிது நிலம்பெரிது வாதமெல்லாம் எதுவரையில்? வாலைமுகம் காணும்வரை தானே! நான்பெரிது என்றிருந்த பேரசுரன், நாயகியாள் நேரில்வர சாய்ந்துவிழுந் தானே! ...

வியாச மனம்-3 (ஜெயமோகனின் முதற்கனல் நூலை முன்வைத்து..)

ஆளுமைகள் மீது நாம் கட்டமைக்கும் பிம்பங்கள் அளவில்லாதவை. அவர்களின் எல்லா பக்கங்களையும் கணக்கிலெடுத்துக் கொள்வதென்பது, அவர்களின் படுக்கையறையில் எட்டிப் பார்ப்பதல்ல. அவர்களை நிறைகுறைகளுடன் புரிந்து கொள்வது. மகத்துவம் பொருந்தியவர்களாய் மட்டுமே சித்தரிக்கப்படுபவர்கள் ,மறுவாசிப்பில் பகிரங்கமாகிற போது நம்முடன் இன்னும் நெருக்கமாகிறார்கள். சந்தனு தன் மகன் தேவவிரதனின்  இளமையை வாங்கிக் கொண்டு வாழ்ந்தார் என்பதும் ஒர் உபசார வழக்குதான். ஒருவகையில்.தேவவிரதனின் பிரமச்சர்யம் அவனை என்றும் வளரிளம் சிறுவனாக மட்டுமே கற்பனை செய்து தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொள்ளும் சலுகையை சந்தனுவுக்கு ...

வியாச மனம்-2 (ஜெயமோகனின் முதற்கனல் நூலை முன்வைத்து..)

சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவம் இது.நண்பர் ஒருவரின் அலுவலகத்தில் விஜயதசமி பூஜை.அவர் வைதீக மரபில் வந்தவர். அவருடைய குடும்பத்தினரும் அவருடைய சகோதரர் குடும்பத்தினருமாக வந்து பூஜை ஏற்பாடுகளை ஒழுங்கு செய்து கொண்டிருந்தனர். இரண்டு வயது முதல் பதினான்கு வயதிலான குழந்தைகள் இருந்தனர். நிவேதனத்திற்காக வைக்கப்பட்டிருந்த இனிப்புகளையும் சுண்டல் வடைவகையறாக்களையும் பழங்களையும் தொடக்கூடாதென்று அந்த நண்பர் குழந்தைகளை எச்சரித்த வண்ணம் இருந்தார். அதேநேரம் அவருடைய சகோதரரின் இரண்டு வயதுக் குழந்தை இலையில் வைக்கப்பட்டிருந்த இனிப்பை எடுத்து வாயில் ...

சத்குரு ஞானோதயத் திருநாள்

திசையெங்கும் பொன்னொளிரத் திறந்ததொரு கதவு அசைவின்மை எனும்நதியில் அசைந்ததொரு படகு கசிகின்ற கண்ணிரண்டும் கங்கைநதி மதகு இசைதாண்டும் மௌனத்தில் எழுந்தசுக அதிர்வு பாறையின்மேல் பூவொன்று பூத்ததிந்த தருணம் மாறாத ஞானத்தின் மூலம்மேல் கவனம் கீறாமல் கீறிவிட்ட ஆக்ஞையிலே  சலனம் ஆறாகப் பெருக்கெடுக்கும் ஆனந்த அமுதம் சாமுண்டி மலையிலந்த சாகசத்தின் பிறப்பு தாமென்ற எல்லையினைத் தாண்டியதோர் இருப்பு ஓமென்னும் அதிர்வினிலே ஒப்பற்ற லயிப்பு நாமெல்லாம் கரையேற நாயகனின் சிலிர்ப்பு முன்னமொரு பிறவியிலே மலர்ந்ததந்த ஞானம் பின்னுமொரு பிறப்பினிலே பெருகிவந்த ...
More...More...More...More...