Blog

/Blog

பட்சி சொன்னால் சரியாயிருக்கும் (மொரீஷியஸ் பயணப் பதிவுகள்)

தைப்பூசம் முடிந்துஒருநாள் இடைவெளிக்குப் பின் மகாத்மா காந்தி நிறுவனத்தில் நான் உரை நிகழ்த்த வேண்டும்.அந்த நாளை அனைவருமே வெகு ஆவலாய் எதிர்பார்த்திருந்தனர்.ஏதோ என்னுடைய உரைக்காக அப்படி காத்திருந்தனர் என்று நீங்களாக நினைத்துக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பில்லை.மொரீஷியஸில் தமிழர்கள் மட்டுமின்றி இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் தைப்பூசத்திற்காக நெடுநாட்கள் நோன்பு நோற்கின்றனர். மொரீஷியஸ் நாட்டின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சருடன் அந்த நோன்பை அவர்கள் நிறைவு செய்வது கொடியிறக்கத்திற்குப் பின்புதான் என்பதால் அந்தநாள் அவ்வளவு முக்கியம்.அந்த நாளும் வந்தது.ச்னிக்கிழமை காலை 10.30 ...

கண்டதுண்டோ இவன் போலே

கவிதையின் உயரம் ஆறடி-எனக் காட்டிய மனிதனைப் பாரடி செவிகளில் செந்தேன் ஊற்றிய கவிஞன் சேய்போல் வாழ்ந்ததைக் கேளடி எடுப்பார் கைகளில் பிள்ளைதான் -அவன் எதிர்கொண்ட தெல்லாம் தொல்லைதான் தொடுப்பான் சொற்களை சரம்சரமாய் அதில் நிகராய் ஒருவர் இல்லைதான் நெற்றியில் நீறுடன் குங்குமம்-அவன் நிற்கும் கோலமே மங்கலம் பற்றுகள் ஆயிரம் உற்றிருந்தாலும் பரம்பொருளுடனவன் சங்கமம் அழுததும் சிரித்ததும் ஆயிரம்-அவன் அவஸ்தையும் மகிழ்ச்சியும்காவியம் பழுதுகள் அறியாப் பாடல்கள் தந்தவன் பொன்மனம் தமிழின் ஆலயம் மண்மிசை  கவிஞர்கள் தோன்றுவார்-தங்கள் மேதைமை மிளிர்ந்திடப் ...

கோவையில் கண்ணதாசன் விழா

கோவை கண்ணதாசன் கழகம் சார்பில் வழங்கப்படும் கண்ணதாசன் விருது இசைக்கலைஞர் வாணிஜெயராம் அவர்களுக்கும் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கும் வழங்கப்படுகிறது. கண்ணதாசன் கழகம் மற்றும் கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் கவியரசு கண்ணதாசன் அவர்களின் 87ஆம் பிறந்ததினத்தை முன்னிட்டு 22.06.2014 அன்று மாலை 5.30 மணியளவில் கண்ணதாசன் விழா கோவை கிக்கானி மேல்நிலைப்பள்ளியில் நிகழ்கிறது. இவ்விழாவில் எழுத்தாளர் ஜெயமோகன், பாடகி வாணிஜெயராம் ஆகியோருக்கு கண்ணதாசன் விருதுகள் சமர்ப்பிக்கப்படவுள்ளன. ஒவ்வொருவருக்கும் ரூ.50,000 பொற்கிழியும்பட்டயமும் கொண்ட இவ்விருது கண்ணதாசன் கழகத்தின் நிறுவனர் திரு.கிருஷ்ணகுமார் அவர்களால் நிறுவப்பட்டுள்ளது.  இவ்விழாவிற்கு மதுரை தியாகராஜர் குழு நிறுவனங்களின் ...

சத்குரு சத்சங்கம்

ஸ்வரங்களில் எழாத சங்கீதம்-உன் அருளெனும் ராக சஞ்சாரம் குரல்கள் அதன்சுகம் காட்டவில்லை-எந்த விரல்களும் அதன்லயம் மீட்டவில்லை மேகங்கள் தொடாத முழுவானம்-எந்த மேதையும்பெறாத திருஞானம் யோகங்கள் உணர்த்தும் சிவரூபம்-இங்கு யாரறிவார் உன் முழுரூபம் உந்திய கருணையில் ஓடுகிறேன் -நான் உன்பேர் சொல்லிப் பாடுகிறேன் விந்தைகள்நிகழ்த்தும் விடுகதையே-உன் விரல்தொடும் போதிலென் விடுதலையே பன்னிரு திருமுறை பாடுவதை-அருள் பரமானந்தர்கள் நாடுவதை உன்னிரு கண்களில் காணுகிறேன் -இந்த உன்னதம் உயிரினில் பேணுகிறேன் விந்தியம் இமயம் கைலாயம்-அந்த வேதவேதன் இருக்குமிடம் உந்தன் இதயம் அவைபோலே-அந்த ...

பட்சி சொன்னால் சரியாயிருக்கும்-4 (மொரீஷியஸ் பயணப் பதிவுகள்)

மொரீஷியஸ் பற்றி எழுதுகிற போது தலைப்பிலேயே பட்சியைக் கொண்டு வந்ததும் ஒருவகையில் பொருத்தமாகத்தான் இருக்கிறது.மொரீஷியஸின் சின்னமே டோடோ என்கிற பட்சிதான்.இந்த டோடோ பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன்பாகமொரீஷியஸின் பின்புலம் பற்றி நாம் அறிந்து கொள்வது அவசியம். மொரீஷியஸ் தீவு எரிமலையின் எச்சம்.அரிய வகை தாவரங்களும் பறவைகளும் மொரீஷியஸில் தோன்றின. அவற்றில் ஒன்றுதான் பழுப்புநிற டோடோ.வெவ்வேறு நாடுகளிலிருந்து அடிமைகளும் புலம் பெயர்ந்தோரும் மொரீஷியஸில் குடியேறினர். பதினாறாம் நூற்றாண்டில் டச்சு தேசத்தின் கிழக்கிந்திய கம்பெனி மொரீஷியஸில் காலூன்றியது.தொடர்ந்துகாலனிகளால் கைமாற்றப்பட்ட நாடு ...

அன்பும் சிவம்

புவனங்கள் எல்லாமே சிவசந்நிதி பிரபஞ்சங்கள் முழுமைக்கும் அவனேகதி தவறென்றும் சரியென்றும் சுழலும்விதி சுடர்வீசும் மலர்ப்பாதம் சரணாகதி அன்பேதான் சிவமென்று சிலர்பாடுவார் அழிப்பேதான் தொழிலென்று சிலர்கூறுவார் கண்மூன்று கொண்டானை யார்காணுவார் கண்மூடி அமர்ந்தோரே சிவம்பேணுவார் அடங்காத இருளோடு அவன்ராஜ்ஜியம் அலைபாயும் மனதோடும் அவன்நாடகம் ஒடுங்காத வரைதானே நவகாவியம் ஒடுக்கத்தில் அசைவில்லா உயிரோவியம் சங்கீதம் எல்லாமும் சிவன்பாடலே சங்காரம் உயிர்ப்பெல்லாம் அவனாடலே ஓங்காரப் பெண்ணோடு அவன் கூடலே நீங்காத துணையிங்கு அவன்நீழலே சித்தர்க்கும் முத்தர்க்கும் நெறிசொன்னவன் பித்தேறும்  நரிதன்னைப் பரியென்றவன் ...
More...More...More...More...