Blog

/Blog

எழிலேயென் அபிராமியே-2

புகைப்படத்தை புகைப்படம் எடுத்தவர் இசைக்கவி முச்சந்தி நடுவிலொரு மலர்வீழ்ந்த தருணமந்த மென்காற்று பதறிடாதோ உச்சரிக்கும் சிறுமழலை ஒலிமிழற்ற வாணியின் உயிர்வீணை அதிர்ந்திடாதோ பச்சைமயில் கால்மாற்றி பூந்தோகை விரிக்கையில் பொன்னம் பலம் மிளிருமே உச்சம்நான் தொடும்நேரம் உள்ளபடி மலைச்சிகரம் ஓரங் குலம்வளருமே அச்சமிலை அழுகையிலை அத்தனைக்கும் ஏற்பாடு அன்றைக்கே செய்துவைத்தாய் இச்சையுடன் சிவன்பார்க்க இருவிழிகள் மண்பார்க்கும் எழிலேயென் அபிராமியே  வீசுமொரு கவரியுடன் விதம்விதமாய் உபசாரம்    விருப்பமுடன் ஏற்றவள் நீ  தேசுசுகனல் ஐந்தினிடை திகழுமருட் கனலாக  தூயதவம் நோற்றவள் ...

வித்தகக் குழந்தை

ஆவின் மடியில் மாயனின் இதழ்கள் அமுதம் பருகும் நேரம் தாவி யணைக்கும் கன்னியருக்கும் தாய்முலைகனிந்தே ஊறும் கோவில் சிலையாய் கோதையும் நின்றாள் கோலினை ஓங்கிய படியே நாவில் வருடும் பசுவிடம் பெருகும்.. பாலும் ஆயிரம் படியே பசுவின் காலைப் பற்றிய படியே பரமன் பருகும் அழகு கசியும் மடியில் கண்கள் பதித்த கோபிகை நெஞ்சம் மெழுகு திசைகள் எல்லாம் சலனம் இன்றித் தாய்மைத் தவிப்பில் கரையும் இசைக்கும் குழலும் இதழ்கள் பிரிந்த ஏக்கம் பெருகிப் பதறும் மதுரா ...

குருசிவ அந்தாதி

பின்ன முடியாத பொன்வலையை வீசியே என்னையும் உன்னையும் யார்பிடித்தார்?-சின்ன இழையும் சுமையாய் இறுகும்,நாம் செய்யும் பிழைகள் மலியும் பொழுது. பொழுது புலருங்கால் பூவின் அரும்பு தொழுதகை போலே திகழ -அழுததுளி வெண்பனியாய் மின்ன, வருமே விடியலும்; கண்பனித்தால் உள்ளே கனல் கனலெரிய உள்ளே களங்கம் எரியும் புனலொன்றும் ஊறிப் பெருகும்-அனலேந்தி ஆடும் அழகன் அருட்கழலை எண்ணியெண்ணிப் பாடும் பணியே பணி பணிப்பொன்னில் தூசாய் பரமாநான் உன்னில் அணியாயா வேனோ அறியேன் -பிணித்தவலை தள்ளாத என்னையும் தாங்குகிற உன்கருணை ...

தீபத்தில் கொஞ்சும் தயை.

லம்யம் எனுமோர் லயமும் அதிர்வுடன் நம்குரு நாதன் நவிலவே-செம்பிது பொன்னாய்ப் புடமாக பொன்னம் பலமாக அன்னான் நடமாடு வான். வான்மின்னல் கீற்றாய் வெயில்நிலவாய் நீர்த்தழலாய் தேன்மெல்ல உள்ளே துளிர்க்குமே-நானென்னும் ஒற்றைஅடை யாளம் உலகெங்கும் தானாக பற்றோ கரையும் பனி. பனிதங்கும் வேணியன்; பக்தை கரத்தே கனிதங்க வைத்தகா ருண்யன் -இனியிங்கு வந்துவந்து போகும் விதிமாற்றித் தன்கழலை தந்துவந்து காக்கும் திறம் திறம்தந்தான் பாடத் தமிழ்தந்தான் வாழ அறம்தந்தான் அத்தனையும் தந்தான்- விறண்மிண்டர் கோபத்துக் கஞ்சும் குணக்குன்றன் ஆரூரில் ...

நம்நோக்கம் மீறியும் நம்நாக்கு பேசினால்…..

சிற்றெறும்புப் பேரணியைசீர்குலைக்க ஒப்பாது சற்றுநின்று பார்க்கின்ற செங்கண் களிறேபோல் சொற்கள் பெருகி சலசலத்தல் பார்த்திருக்கும்… முற்றி முதிர்ந்தமௌ னம்!!  நம்நோக்கம் மீறியும் நம்நாக்கு பேசினால் நம்வாக்கு நம்வசம் இல்லையே-தன்போக்காம் காட்டுக் குதிரை கடிவாளம் நீங்கினால் வீட்டுக்கும் உண்டோ வழி. வழிப்போக்கர் நாமெல்லாம்; வீதி நம தில்லை குழிமேடு தாண்டுதல் கொள்கை-பழியென்னும் சேறு படாவண்ணம் செல்லட்டும் நம்பயணம் மாறுபா டெல்லாம் மறந்து. மறந்தும் பிறர்முன்னே முள்ளைப்போ டாது திறந்த திசைகளைத் தேடு-கறந்தபால் போல மனமிருந்தால் போதும் அதுவேதான் ஆலமுண்ட ...

ஆவேனோ ஆளாய் அவர்க்கு

காரைக்கால் அம்மைகை கொட்டிக் கவிபாட ஊரைவிட் டோரமாய் ஓமென்று-காரிருளில் தாண்டவம் ஆடும் திருவாலங் காட்டீசன் பூண்டகழல் தானே பொறுப்பு. இமயம் அதிர இமைகள் அசைப்பான் டமருகங் கொட்டிதிசை யெட்டும்-உமையும் இசைந்தாட ஆடும் இறைவனென் நெஞ்சம் அசையச்செய் வானோ அருள். தேகத்தில் யானையுரி தன்னிடையி லேபுலித்தோல் நாகங்கள் பூணும் நகைகளாம்-ஆகட்டும் மண்டயோ டேந்தும் மகேசனொரு மானிடனை அண்டவிடு வானோ அருகு. அந்தரத்தில் வாழும் அமரர் நெருங்குங்கால் நந்தி பிரம்பு நிறுத்துமாம்-வந்திக்காய் வாங்கிய ஓரடியை வாரி வழங்கியவர் ஆங்கும் தொடர்வார் ...
More...More...More...More...