அழுதால்…?
தகுதிகளைச் சொல்லித்தான் பதவிகளையோ சலுகைகளையோ பெறமுடியும்.மணமகள் தேவை விளம்பரங்களில் கூட மாப்பிள்ளையின் மெய்கீர்த்திகளைப் பட்டியலிட்டால்தான் கல்யாண யோகம் கைகூடுகிறது. ஆனால் தன் தகுதியின்மைகளைப் பட்டியலிடுகிறார் மாணிக்கவாசகர். அவருக்கு சிவபெருமான் வேண்டுமாம். “யானே பொய், என் நெஞ்சும் பொய்,என் அன்பும் பொய்” (இத்தனை தகுதியின்மைகளை வைத்துக் கொண்டு எந்த நம்பிக்கையில் சிவனைப் பெற சிந்திக்கிறேன் தெரியுமா) “ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே” என்கிறார் மாணிக்கவாசகர். திருமுறைச் செல்வர். மு.கணபதி அவர்கள் அருகில் ஒரு கூட்டத்தில் அமர்ந்திருந்தேன்.அவர் திருமுறைகளில் ...
வ.உ.சி. வாழ்வில் இரண்டுமுறை விளையாடிய காந்தி
தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் வ.உ.சி.க்காக அனுப்பிய பணத்தை தன்னிடமே வைத்திருந்து “அந்தப் பணத்தை நான் அனுப்பிவிட்டேனா”என்று வ.உ.சிக்கே 21.04.1915 ல் கடிதம் எழுதிய காந்தி,20.01.1916 வரை தொடர்ந்து கடிதம் எழுதிய பிறகு 347 ரூபாய் 12 அணாவை காந்திக்கு அனுப்பினார் என்பது பழைய கதை. அதற்குப் பிறகு வ.உ.சி.சிறையிலிருந்த காலத்தில் தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்து வந்த வேதியன் பிள்ளையும் அவரின் சகலை தண்டபாணிப் பிள்ளையும் 1912ல் ஐயாயிரம் ரூபாய்கள் வசூலித்து இந்தியா திரும்பியதும் வ.உ.சி.யிடம் தரும்படி காந்தியிடம் தந்தனுப்பினார்கள். 1920 ...
எல்லாம் அவனே
பொன்னிநதி தீரத்தில் புறப்பட்ட கங்கையென புனிதத்தின் அலைவீசி வந்தான் அன்புநதி கடலாகி ஆர்ப்பரிக்கும் விதமாக ஆனந்த அலையிங்கு தந்தான் துன்பநதி நடுவினிலே தூசாகி அலைபவர்க்கு திருவடிகள் படகாக்கித் தந்தான் இன்பநதி சிவமாக இருகரையே தவமாக “இதிலிருநீ மீனாக” என்றான் கண்ணீரின் சுகவெள்ளம் கங்குகரை காணாமல் கன்னத்தில் வழிந்தோடச் செய்தான் மண்ணெங்கும் உலவுகிற மூலிகைத்தேன் காற்றாக மனிதர்க்கு இதம்செய்ய வந்தான் விண்ணென்ற ஒன்றைநாம் வாழ்கின்ற வையத்தில் விரித்திடவே வழிசொல்லித் தந்தான் வண்ணங்கள் கதைபேசும் வானவில்லின் முதுகேறி வானுக்கும் புதுசேதி ...
முதன்முதலாய் காசி போன போது…3
“கங்கையிரு கரையுடையான் கணக்கிறந்த நாவாயான்” என்று குகனை அறிமுகப்படுத்துவார் கம்பர்.இன்றும் கங்கைக்கரையில் கணக்கில்லாத நாவாய்கள் நிற்கின்றன.படகுக்காரர்களும் வேட்டைக்காரர்கள் போல் வாடிக்கையாளர்களைக் குறிவைத்துக் காத்திருக்கிறார்கள் .இரண்டு மணிநேரப் படகுப்பயணத்திற்கு 250 ரூபாய் என்று பேசிப் படகேறினோம் .கங்கைக்கரையிலிருந்து நதிக்குள் படகு புகுமுகத்தில் போக்குவரத்து நெரிசல்.படகின் கயிறவிழ்த்த கையோடு முட்டிக் கொண்டு நிற்கும் பத்துப் பதினைந்து படகுகளைக் கைகளால் தள்ளிக்கொண்டே படகோட்டி கங்கைக்குள் பிரவேசம் நிகழ்த்தினார்.ஒவ்வொரு படித்துரைக்கும் “காட்” என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.உடன் வந்த நண்பர்கள் காட் கதைகள் கேட்கக் காதுகளைத் தீட்டிக் காத்திருக்க மனம் கங்கைக்குள் இறங்கியிருந்தது.ஆயிரமாயிரம் ஆண்டுகளாய்ப் பிரவாகத்தில் இருக்கும் நீர்த்தடத்தில் இறங்கியிருப்பது ,தொடர் பிறவிகளின் ஆன்மப் பயணத்தில் ஒரு மைல்கல் என்று பட்டது. இரவு ...
முதன்முதலாய் காசி போன போது…….2
பாலத்தின் மேல் தடதடத்த ரயிலிலிருந்து பார்த்த போது, கம்பீரமான பிரவாகத்தில் இருந்தாள் கங்காமாதா.வாரணாசி ரயில்நிலையத்தில்காலை எட்டரை மணிக்கு இறங்கும்போதே வெறித்தனமான பக்தியுடன் வெய்யில் காசியை வலம்வரத் தொடங்கியிருந்தது.நாட்டுக்கோட்டை நகரத்தார் காசி விசுவநாதரின் நித்திய பூஜைக்குப் பொறுப்பேற்றிருந்ததால் தஞ்சை நகரத்தார் சங்கத்திலிருந்து கடிதம் பெற்று வந்திருந்தார் நண்பர் செழியன்.நகரத்தார் சங்கம் என்றால் யாருக்கும் தெரிவதில்லை.”நாட்கோட் சத்ரம்” என்றால் வீதியில் வெறுமனே நிற்கும் மாடுகள் கூட வாலைச் சுழற்றி வழிகாட்டுகின்றன.எண்பது ரூபாய் கேட்டார் ஆட்டோக்காரர்.அவர் கடந்த தொலைவுக்கு நம்மூரில் நிச்சயம் இருநூறு ரூபாய் கேட்டிருப்பார்கள்.ஒற்றையடிப்பாதைதான் எல்லா வீதிகளும்.சென்னை ...
முதன்முதலாய் காசி போன போது…….
(சத்குரு அவர்களுடன் காசியில் நிகழ்ந்த உரையாடலின் ஒளிப்பதிவு தற்போதுஸ்டார் விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகி வருகிறது. அது நான்காவது முறையாய் காசி சென்றபோது கிட்டிய பெரும்பேறு.2009ல் முதன்முதலாய் காசி சென்ற அனுபவங்களை அப்போது இணையக் குழுமம் ஒன்றில் எழுதியிருந்தேன்.அவை இப்போது உங்களுக்காக..) கல்கத்தாவின் அவ்வளவு பெரிய விமான நிலையத்தில் என் கண்கள் வேறெதையும் தேடவில்லை. என் பெயர் எங்கே தட்டுப்படுகிறது என்றுதான் தேடினேன்.தேடுங்கள் கண்டடைவீர்கள் என்பதற்கேற்ப,என் பெயரையும்,உடன் வந்த நண்பர் மாரியப்பனின் பெயரையும்துவாலைச்சீட்டு ஒன்றில் (துண்டுச்சீட்டை விட ...