சத்குருவின் மஹாபாரத்-வாழ்க்கை வலியா?வரமா?
சத்குருவின் மஹாபாரத் நிகழ்ச்சிக்காக, மகாபாரதக் கதையைப் பின்புலத்தில் கொண்டு வாழ்வின் அடிப்படைகளை வினவும் விதமாய் ஒரு பாடல் வேண்டுமென சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா குழுவினர் கேட்டிருந்தார்கள். அவர்களுக்குத் தந்த பாடல் இது: யாரும் போடாத பாதை- இது எங்கோ போகின்ற சாலை வேர்கள் இல்லாத மரமா-இந்த வாழ்க்கை வலியா வரமா முடிவே இல்லாத பயணம்-அட முனிவன் நெஞ்சிலும் சலனம் விடிந்த பின்னாலும் இருளா-இந்த வாழ்க்கை புதிரா பதிலா தர்மம் வனத்தினில் பதுங்கும்-இங்கு தலைக்கனம் ஆட்சியைத் தொடங்கும் மர்மம் ...
சத்குருவின் மஹா பாரத் நிகழ்ச்சி…அரங்கேறாத பாடல்
(2012 ல் சத்குரு ஈஷாவில் நடத்திய மஹாபாரத் நிகழ்ச்சியில் பாட சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா குழுவினருக்கு சில பாடல்கள் எழுதினேன். அவற்றில் அரங்கேறாத பாடல் இது ) வீணைகள் உறங்கிய இரவினிலே ராகங்கள் உறங்கவில்லை சேனைகள் தூங்கிய வேளையிலும் கோபங்கள் தூங்கவில்லை போர்க்களம் சிவந்தது போதாதோ பாண்டவர் கௌரவரே வாள்களின் பசியென்ன தீராதோ வீரர்கள் மாண்டனரே குருதியின் நதியில் குளிக்கிறதே இதற்கா குருஷேத்ரம் அருகினில் இறைவன் இருக்கின்றான் சாட்சி நிலைமாத்ரம் உங்களின் வன்மம் தீர்வதற்கே உயிர்கள் மாளுவதோ ...
போதிதர்மர்- அகலாத மர்மங்கள்
அறிய வேண்டிய ஆளுமைகள் ஆயிரமாயிரம் என்றாலும் அறிந்தே ஆக வேண்டிய ஆளுமைகளாக காலம் முன்னிறுத்தும் கம்பீரமான ஆளுமைகளில் ஒருவர், போதிதர்மர்.ஜென் தியான மார்க்கத்தின் பிதாமகர்களில் ஒருவராகக் கருதப்படும் இவரை வண்ணத்திரை புதிய தலைமுறையின் பார்வைக்குக் கொண்டு வந்தது. போதிதர்மர் பற்றிய முரண்பட்ட பல தகவல்கள் கலவையாகக் கலந்து கிடக்கின்றன.அப்படியிருந்தாலும் தமிழகத்திலிருந்து சென்ற இளவரசர் சீன மண்ணின் வழிபாட்டுக்குரிய குருவாய் வளர்ந்தார் என்பது எல்லா வகையிலும் பிரம்மிக்கத்தக்க வரலாறுதான். ஏழாம் அறிவு படத்தில் வருகிற அம்சங்களையும் கடந்து சில ...
படுவதே பாடம்
வாழ்க்கையின் அபத்தம் புரிந்துவிட்டால் அது வாழ்வின் அற்புதம் ஆகும் கூக்குரல் அழுகைகள் அடங்கிவிட்டால்-வரும் மௌனம் நிரந்தரம் ஆகும் கேட்கிற கதைகள் புரிவதில்லை-யாரும் கேளாதிருப்பதும் இல்லை வேட்கையும் பசியும் வளர்த்ததன்றி-ஒன்றும் வெட்டி முறிக்கவும் இல்லை மமதையில் ஆடிடும் வேளைகளில்-விதி முகமூடிக்குள் சிரிக்கும் நமதெனும் மிதப்பில் இருக்கையிலே-அதன் நிழலும் பதுங்கிக் கிடக்கும் திமிறிய மனிதன் நிமிருமுன்னே -அடி தலைமேல் விழுந்து தொலைக்கும் குமுறல்கள் கதறல்கள் பயனுமில்லை-அதன் கணக்குகள் மட்டும் நிலைக்கும் உற்றவர் பாதையில் தென்படலாம்-அவர் உடன்வரப் போவதும் இல்லை ...
அவனது கணக்கு
குதிரைகள் லாயத்தில் கூடும்-ஒரு கணத்திலே நரியாக மாறும் புதிரைப் போட்டவன் சிவனே -இதன் பதிலும் தெரிந்தவன் அவனே வித்துகள் நடுவோம் வயலில் -அவை வளர்வதும் சிதைவதும் மழையில் எத்தனை எத்தனை பார்த்தோம்-அட இருந்தும் வாழ்ந்திடக் கேட்டோம் மணநாள் வேள்வியும் புகைதான் -அந்த மயான வேள்வியும் புகைதான் குணமும் பணமும் பொய்யே-அட கண்கள் கசக்குதல் மெய்யே எத்தனை உயிர்கள் படைப்பான் -அவன் எத்தனை ஓலைகள் கிழிப்பான் பித்தன் என்றதும் சரிதான் -அவன் பிழைகள் எல்லாமே சரிதான் கூட்டல்தெரியும் நமக்கு-அதில் ...
ஜெயமோகனும் ராஜேஷ்குமாரும்..
ஜெயமோகனும் நானும் பேருந்தொன்றில் பயணம் செய்து கொண்டிருக்கிறோம். அது வித்தியாசமான பேருந்து.உணவு வகைகள் ஆர்டர் செய்யலாம். அசைவ உணவு வகைகளின் பட்டியல் கொண்ட மெனுகார்டை பேருந்தில் உள்ள சர்வர் நீட்டுகிறார்.கேட்கும் உணவு ரகங்கள் எதுவுமில்லை.அதற்குள் நாங்கள் இறங்க வேண்டிய நிறுத்தம் வருகிறது. இறங்கியதும் ஜெயமோகனின் வாசகர் ஒருவர் எதிர்ப்படுகிறார். அவரிடம் நல்ல உணவகம் எங்கே என்று விசாரிக்கிறோம்.அவர் வழி சொல்லிக் கொண்டே அருகிலுள்ள வீட்டைக் காட்டி “இதுதான் எழுத்தாளர் ராஜேஷ்குமார் வீடு” என்று காட்டுகிறார். உடனே நான்,”இல்லையே! ...