அழுதுவிடு! தொழுதுவிடு!
அர்ச்சனை நேரத்தில் இட்டமலர் அரைநாள் சென்றால் சருகாகும் உச்சி முகர்பவர் சொல்லொருநாள் உதறித் தள்ளும் பழியாகும் பிச்சியின் கூத்துகள் இவையெல்லாம் பாடம் நமக்கு நடத்துகிறாள் இச்சைத் தணலை அவித்துவிட்டு இலையைப் போடவும் சொல்லுகிறாள் மண்ணில் இறக்கி விட்டவள்தான் மழலை ஆட்டத்தை ரசிக்கின்றாள் கண்கள் கசக்கி அழுவதையும் கண்டு தனக்குள் சிரிக்கின்றாள் எண்ணி ஏங்கி அழுகையிலே இடுப்பில் சுமக்க மாட்டாளோ வண்ணப் பட்டால் விழிதுடைத்து விளையாட்டுகளும் காட்டாளோ படுவது பட்டுத் தெளிவதுதான் பக்குவம் என்பாள் பராசக்தி கெடு வைப்பதற்கு ...
கொலுவிலேறினாள்
கொட்டோடு முழக்கோடு கொலுவிலேறினாள் -அன்னை கொள்ளையெழில் பொங்கப் பொங்க மனதிலேறினாள் பொட்டோடு பூவோடு மாதர்வாழவே -அன்னை பூரணமாய் கருணைதந்து பரிவுகாட்டினாள் தீபத்தின் ஒளியினிலே தகதகக்கிறாள்-அன்னை திருவிளக்கின் சுடராகத் தானிருக்கிறாள் நாபிதனில் ஒலியாக நிறைந்திருக்கிறாள்-அன்னை நாதத்துள் மௌனமென மறைந்திருக்கிறாள் சாமரங்கள் வீசியுப சாரம்செய்கையில்-அவள் சிலையெனநாம் செம்பட்டு சார்த்தி நிற்கையில் நாமங்களோர் ஆயிரமும் நவின்றிருக்கையில்-அன்னை நேர்படவே மழலையாக வந்துநிற்கிறாள் கோடிமலர் பாதமிட்டும் தீரவில்லையே-அவள் கொலுவழகைப் பார்க்கும்வேட்கை ஆறவில்லையே தோடெறிந்த தேவதேவி தென்படுவாளே-வினை தானெரிந்து போகும்படி அருள்தருவாளே சந்தனமும் சரமலரும் சூட்டும் ...
மங்கலை கொண்டாள் மகாவெற்றி
சங்கல்பம் கொண்டு சமர்செய்ய வந்திங்கு மங்கலை கொண்டாள் மகாவெற்றி-எங்கெங்கும் நல்லவையே வென்றுவர நாயகி நாமங்கள் சொல்லிப் பணிந்தால் சுகம். புத்தி வலிவும் பொருள்பலமும் பாங்கான உத்தி பலமுமே உத்தமிதான் -சத்தியவள் போடும் கணக்கின் பதிலீட்ட வேண்டியே ஆடும் விதியாம் அரவு. வண்ணத் திருவடிகள் வையத்தின் ஆதாரம் கண்கள் கருணைக் கருவூலம்-பண்ணழகோ தேவி குரலாகும் தேடும் மனவனத்தே கூவி வருமே குயில். பொன்கயிலை ஆள்கின்ற பேரரசி மாதங்கி மென்மயிலைப் போற்ற மனம்மலரும்-மின்னொயிலை காணுதற்கும் நெஞ்சம் குழைவதற்கும் நாமங்கள் பேணுதற்கும் ...
துயரம் தீர்ப்பாள் மஹாலஷ்மி
அலைகள் புரண்டெழும் ஓசையிலே-ஓர் அழகியின் சிரிப்பொலி கேட்கிறது விலைகள் இல்லாப் புதையல்களில்-அவள் வண்ணத் திருமுகம் தெரிகிறது நிலைபெறும் பாற்கடல் பாம்பணையில்-அந்த நாயகி சரசம் நிகழ்கிறது வலைவிழும் மீன்களின் துள்ளலைப்போல்-அவள் விழிபடும் இடமெலாம் கொழிக்கிறது அறிதுயில் கொள்ளும் பரந்தாமன் -அவன் அமைதிக்குக் காரணம் மஹாலஷ்மி வறுமையைக் களையும் வரலஷ்மி-நல் வளங்கள் தருவாள் தனலஷ்மி மறுவே இல்லா நிலவாக-நம் மனங்களில் உதிப்பவள் கஜலஷ்மி மறுபடி மறுபடி வரும்பசியை-மிக மகிழ்வாய் தணிப்பாள் சுபலஷ்மி தானியக் களஞ்சியம் நிரம்பிடவும்-மிகு தங்கம் வைரம் நிறைந்திடவும் ...
நானிலம் காப்பாள் மடியில்
பச்சைப் பட்டின் முந்தானை -அந்தப் பரமனின் நெற்றியை ஒற்றும் பச்சை வண்ணத் திருமேனி-எங்கள் பரமனின் பாதியைப் பற்றும் பச்சைப் புயலாம் மயிலினிலே-ஒரு பிள்ளை பூமியை சுற்றும் பச்சை மாமலை திருமாலோ-அவள் பிறந்த வகையின் சுற்றம் மாம்பழம் பெற்ற முதல்பிள்ளை -எங்கள் மாதுமை மடியினில் துஞ்சும் தேம்பி யழுத பிள்ளைக்கோ-பால் திருஞானத்துடன் விஞ்சும் சாம்பல் மேட்டினில் சாம்பசிவம்-உடன் சாம்பவிக் கொடிநின்று கொஞ்சும் கூம்பிய உயிர்கள் மலர்ந்துவிட-அவள் குளிர்மலர் அடிகளே தஞ்சம் நாயகிஎங்கள் சிவகாமி -இந்த நானிலம் காப்பாள் மடியில் ...
அடக்கும் அங்குசம்
கட்டிவைத்தும் மனக்களிறு கட்டுப்படாது-அதுகாமங்கொண்டு பிளிறுவதை விட்டுவிடாதுதட்டிவைக்க அவள்வராமல் தலையடங்காது-எங்கள்தேவதேவி குரல்தராமல் நிலையடங்காதுஅங்குசத்தைக் கொண்டுநின்றாள் ஆலயத்திலே-நம்அகந்தையெல்லாம் தளரவைக்கும் ரௌத்திரத்திலேஅங்கயற்கண் பார்வைபட்ட ஆனந்தத்திலே-அடஆனையெல்லாம் பூனையாகும் சிவலயத்திலே!பாணமைந்தும் கரும்புவில்லும் பூங்கரத்திலே-ஒருபார்வையிலே மனமடங்கும் அவள்பதத்திலேகோணங்களோ ஒன்பதுஸ்ரீ சக்கரத்திலே-நவகோள்களெல்லாம் வணங்கிநிற்கும் ஸ்ரீபுரத்திலே சிந்துரத்தில் தோய்ந்தபாதம் சமர்க்களத்திலே-கொடும்சினமெழுந்து சூலமேந்தும் அமர்க்களத்திலேவந்தபகை மாய்க்கும் அன்னை ஒளிரதத்திலே-அவள்வைத்தசுடர் பற்றிக்கொள்ளும் வினைப்புனத்திலே ...