சொல்லாய் மலர்கிறவள்
ஏந்திய வீணையில் எழுகிற ஸ்வரங்கள் எண்திசை ஆண்டிருக்கும் மாந்திய அமுதம் பொய்யென தெய்வங்கள் மதுரத்தில் தோய்ந்திருக்கும் பூந்தளிர் இதழ்களில் பிறக்கிற புன்னகை புதுப்புது கலைவளர்க்கும் சாந்தமும் ஞானமும் சரஸ்வதி தேவியின் சந்நிதி தனில்கிடைக்கும் படைப்புக் கடவுளின் பத்தினித் தெய்வம் படையல் கேட்கிறது விடைக்கும் மனங்களின் அறியாமை தனை விருந்தாய்க் கேட்கிறது நடையாய் நடந்து நல்லவை தேடிட நிழல்போல் தொடர்கிறது படைகள் நிறைந்த மன்னவர் பணியும் பெருமிதம் தருகிறது பனையோலை முதல் கணினித் திரைவரை பாரதி ஆளுகிறாள் தனையே ...
இது இராமாயணம் அல்ல….
காத்துக் கிடந்தது குகன்படகு கள்ளத் தோணிகள் திடீர் வரவு…….. மோதிய அலைகளில் ஆடியபடியே பாதங்கள் படுமென ஏங்கியபடியே நாயகன் திருமுகம் தேடியபடியே தோழமை எனும்சொல் சூடியபடியே காத்துக் கிடந்தது குகன்படகு கள்ளத் தோணிகள் திடீர் வரவு…….. துடுப்புகள் ஏனோ அசையவுமில்லை திடுக்கிட்ட வேடன் தெளியவுமில்லை வழக்கத்தின் மாற்றம் விளங்கவுமில்லை இலக்குவன் ஏதும் அறியவுமில்லை காத்துக் கிடந்தது குகன்படகு கள்ளத் தோணிகள் திடீர் வரவு…….. சொந்த நதியிலா சொந்தம் தொலைவது எந்தத் திசையில் நாவாய் செல்வது வந்ததும் சென்றதும் ...
பரிபுரை திருவுளம்
அவள் தரும் லஹரியில் அவளது பெயரினை உளறுதல் ஒருசுகமே பவவினை சுமைகளும் அவளது திருவிழி படப்பட சுடரெழுமே சிவமெனும் சுருதியில் லயமென இசைகையில் சிறுமியின் பரவசமே புவனமும் அவளது கருவினில் தினம்தினம் வளர்வது அதிசயமே நதிமிசை பெருகிடும் அலைகளில் அவளது நெடுங்குழல் புரண்டு வரும் சிதைமிசை எழுகிற கனலினை அவளது சிறுவிரல் வருடிவிடும் விதியதன் முதுகினில் பதிகிற எழிற்பதம் வினைகளைக் கரையவிடும் மதியென எழுகிற திருமுக ஒளியினில் கதிர்மிசை சுடருமெழும் கனல்பொழி நுதல்விழி கருணையின் இருவிழி கயலென ...
சிரித்து நிறைகின்றாள்
மலைமகள் இரவுகள் நிகழ்ந்திடும் பொழுதுகள் மலேய நாட்டினிலே கலைமகள் அலைமகள் கடைவிழி பதிந்திடும் காவிய வீட்டினிலே நலம்பல வழங்கிடும் நாயகி எங்கெங்கும் நின்று ஜொலிக்கின்றாள்! சிலைகளில் மலர்களில் பனியினில் வெயிலினில் சிரித்து நிறைகின்றாள் மங்கலத் திருவடி நடமிடும் கொலுசொலி மழைவரும் ஒலிதானே! பங்கயத் திருமுகம் பொலிந்திடும் கலைநயம் பகலவன் ஒளிதானே! அங்கென இங்கென ஆயிரம் மாயைகள் அவளது களிதானே! எங்களின் அன்னையின் கைவிரல் தாயங்கள் எழுகடல் புவிதானே! வீசிய பாதங்கள் விசைகொள்ளும் விதமே வருகிற ...
சத்குரு ஞானோதயத் திருநாள்
தேதியிது !சாமுண்டி தேவி திருமலையில் ஆதி குருவின் அருளாலே-யாதுமாய் தன்னை உணருகிற தன்மையிலே சத்குருவும் பொன்னாய் மிளிர்ந்த பொழுது. பாறை மடியினிலே பூப்பூத்த நாளினிலே ஊறும் அமுதத்தின் ஊற்றொன்று-மீறும் புனலாய்ப் பெருகி புனிதத்தின் தூய அனலாய் எழுந்த அருள். பேசா மவுனத்தில் பேரருளின் அற்புதத்தில் ஈஷா உதயத்தின் இன்பநாள்- நேசத்தால் மானுடத்தைக் காக்கும் மகத்துவம் பொங்கவே வானிறங்கி வந்த வகை. சத்குரு என்றதுமே சட்டென்று கண்கலங்கி பக்தி பெருகுகிற பாங்கெல்லாம்-சக்தி வடிவாக வந்தவரின் வற்றாத அன்பு நடமாடும் ...
பாரதி வீட்டில் ஒரு மரம்
21.09.2013. திருவல்லிக்கேணி பாரதியார் இல்லத்தில் “மண்வாசனை” கூட்டத்தில் கவியரசு கண்ணதாசன் குறித்து உரை நிகழ்த்தப் போயிருந்தேன்.மண்வாசனையை எழுப்பும் விதமாய் மழை வெளுத்து வாங்கியது.கூட்ட அரங்கில் மேடைக்கு இடதுபுறம்நெடிய்துயர்ந்த மரமொன்றின் நிமிர்வுக்கு வாகாய் இடம்விட்டுக் கட்டியிருந்தார்கள். அந்த மரத்தை சுட்டிக்காட்டி திரு.இல.கணேசன் என்னிடம் சொன்னார்: “இந்த மரம் பாரதியார் காலத்திலிருந்தே இருக்கிறது”என்று. பாரதி பார்த்த மரம்.பாரதியைப் பார்த்த மரம் என்ற எண்ணம் மனதை மலர்த்தியது. பாரதியுடன் ஒரேவீட்டில் வாழ்ந்த உயிரல்லவா அது!! மேடையில் பேசும்போது குறிப்பிட்டேன்.”பாரதி வாழ்ந்த வீட்டில் ...