தாடிகளை நம்புவது…?
தாடிகளை நம்புவதே தேசத்துக்கு நல்லது மூடிவைத்துப் பேசவில்லை;மனம்திறந்து சொல்வது பாடினதார் திருக்குறளை? படத்தைநல்லாப் பாருங்க பாரதத்தின் நாட்டுப்பண்ணைப் படைத்தவர்யார் கூறுங்க குறுந்தாடி வளர்த்தவங்க கம்யூனிசம் வளர்த்தாங்க கைத்தடியும் எடுத்தவங்க பகுத்தறிவை வளர்த்தாங்க வெறுந்தாடி வளர்த்தவங்க வருத்தமுன்னு சொன்னாங்க வளரச்சொல்லி விட்டவங்க பரமஹம்சர் ஆனாங்க வெள்ளியலை தாடிக்காரர் யோக நெறி தந்தாங்க உள்ளம் அலை பாயாம வாழவழி சொன்னாங்க டெல்லியில தாடிக்காரர் தலைவருன்னு சொல்றாங்க உள்ளவரும் தாடியோட உலவுறதைப் பாருங்க நாட்டுக்குள்ளே ஒண்ணுரெண்டு தாடி தப்பாப் போகலாம் வீட்டுக்குள்ளே ...
லிங்க பைரவி
தூரத்து வெளிச்சம் நீதானா-எனைத் துரத்திடும் கருணை நீதானா பாரத்தில் தவிக்கிற நேரத்திலே சுமை தீர்ப்பது பைரவி நீதானா -என் திசைகளைத் திறந்தவள் நீதானா வழித்துணை யானவள் நீதானா விழுத்துணை யானவள் நீதானா பழிகள் நிறைந்தஎன் வழியினிலேஒளி தருபவள் பைரவி நீதானா-உடன் வருகிற திருவருள் நீதானா போகிற வழியெது தெரியாதே-இந்தப் பேதைக்கு வாழ்க்கை புரியாதே வேகிற விறகென ஆகிற தருணம் பாய்கிற கங்கை நீதானா-எனைப் பவித்திரம் செய்பவள் நீதானா நான்கொண்ட பந்தங்கள் வேதனைதான் -இந்த நாடக வாழ்க்கையும் வேதனைதான் வான்கொண்ட நிறமே ஆனந்த ஸ்வரமே ஆட்கொண்ட கருணை நீதானா-எனை ஆள்வது ...
பாரதிக்கு முந்தைய பாரதிகள்
மகாகவி பாரதிக்கு முன்பும் சமகாலத்திலும் பாரதி பட்டத்துடன் திகழ்ந்தவர்கள் குறித்து உவமைக்கவிஞர் சுரதா ஒரு பாட்டுப் பட்டியலை வழங்கியிருக்கிறார். 1) திருவதிகைக் கலம்பகம் எழுதிய வேலாயுத பாரதி 2)திருவிளையாடல் நாடகம் எழுதிய கிருஷ்ண பாரதி 3)சூடாமணி நிகண்டு இயற்றிய ஈஸ்வர பாரதி 4)ஆத்திசூடி வெண்பா வடித்த இராம பாரதி 5) விஸ்வபுராணம் இயற்றிய முத்துச்சாமி பாரதி 6)திருத்தொண்டர் மாலை,தேசிகர் தோத்திரம் போன்ற நூல்கள் தந்த புதுவை குமார பாரதி 7)கூடல் பதிகம் பாடிய குணங்குடி கோவிந்த பாரதி ...
ஊழி உலுக்கியவன்
கானமெழுப்பிய பேரிகை ஒன்றினைக் கட்டிலில் போட்டது யார்?அட கட்டிலில் போட்டது யார்? யானை உலுக்கிய ஆல மரமொன்றின் வேரை அசைத்தது யார்?அட வேதனை தந்ததும் யார்? ஏறிய நெற்றியை மீறிய மீசையை எங்கோ மறைத்தது யார்-அட எங்கோ மறைத்தது யார் கீறிய சூரியப் பிஞ்சின் சுடர்கொண்டு ககனம் நிறைத்தது யார்-யுகக் கதவை உடைத்தது யார்? வந்த நெருப்பிடம் வாஞ்சை வளர்த்தவன் வற்றிய மேனிதந்தான் -வாடி வற்றிய மேனிதந்தான் சொந்த நெருப்பினை செந்தமிழ் ஆக்கியே ஜோதி வடிவுகொண்டான் -புது ...
சிவலயம்
எதிர்பார்த்து நின்றவர்க்கோ ஏதொன்றும் புரியவில்லை ஏறெடுத்தும் பாராதார் எல்லாமே அறிந்திருந்தார்: புதிர்போட்ட மனிதருக்கே பதில்மறந்து போயிருக்க விதியெல்லாம் கடந்தவர்தான் விடைதாண்டிப் போயிருந்தார் விதைபோட்டு வளர்த்தவரோ வெய்யிலிலே காய்ந்திருக்க பதறாமல் இருந்தவரே பழம்பறித்துப் புசித்திருந்தார் முதல்போட்ட வணிகருக்கோ மூலதனம் கரைகையிலே முதல்-ஈறு தெரிந்தவரே முழுசெல்வம் அடைந்திருந்தார் சதையெலும்பே சதமென்றோர் சஞ்சலத்தில் அலைபாய சிதைநெருப்பின் நடுவினிலும் சிவனாண்டி சிரித்திருந்தார் நதிபாய்ந்த நேரத்தில் நனையவந்தோர் ஏமாற நதிகாய்ந்த வேளையிலும் நிர்மலரே குளித்திருந்தார் மூடிவைத்த கைபோன்ற முழுவாழ்வின்சூனியத்தில் பாடிவந்த பரஞானி பிரிந்தவிரல் அறிந்திருந்தார் ...
ஆடிக்கு வந்தாள் அபிராமி
உற்சவக் கோலத்தில் உலாப்போகும் நேரத்தில் உற்சாக அலங்காரமோ கற்பகத் தாருவாம் கடவூராள் எழில்பார்க்க கண்கோடி இனிவேண்டுமோ பொற்பதம் மலர்க்கரம் பூமுகம் எங்கெங்கும் பூவாரம் எழில்சிந்துமோ கற்பனைக்கெட்டாத காருண்ய நாயகி கடைக்கண்கள் எமைத்தீண்டுமோ மின்னாயிரம் சேர்ந்த மலர்மேனி நிறமென்ன? மைவண்ணக் கறுப்பல்லவோ இந்நேரம் உற்சவத் திருமேனி எழில்மட்டும் இதமான சிகப்பல்லவோ பெண்ணாகப் பிறந்தார்க்கு புறப்பாட்டு நேரத்தில் பூச்சொன்றும் புதிதல்லவோ கண்ணான மாதரசி கவின்மஞ்சள் வண்ணத்தில் கிளம்புவதே அழகல்லவோ பெருவீதி நான்கினிலும் பெண்ணரசி வருகின்றாள் பொன் ஆடிப் பூரத்திலே ஒருநீதி ...