வங்கம் வழங்கிய ஞானஒளி
(ஜூலை-4 சுவாமி விவேகானந்தர் நினைவு நாள்) எல்லாத் திசைகளும் என்வீடு-என இங்கே வாழ்ந்தவர்யார்? நல்லார் அனைவரும் என்னோடு-என நெஞ்சு நிமிர்ந்தவர்யார்? நில்லா நதிபோல் விசையோடு-அட நாளும் நடந்தவர் யார்? கல்லார் நாடெனும் கறையகற்ற-சுடர்க் கணையாய்ப் பாய்ந்தவர்யார் எங்கள் கிழக்கில் எழுந்தகதிர்-புகழ் ஏந்திடும் மேல்திசையில் பொங்கும் எரிமலை போலெழுந்தே-இருள் போக்கிடும் நம்முயிரில் வங்கம் வழங்கிய ஞானஒளி-நம் விவேகானந்த ஒளி சிங்கப் பிடரி சிலிர்த்தபடி-அவர் சென்றது ஞானவழி பூமியை உலுக்கும் புயலாக-அவர் புறப்பட்ட வேகமென்ன சாமி உனக்குள் எனசொல்லி -அவர் சமத்துவம் ...
சொல்லச் சொன்னாள் அபிராமி
(இன்று காலை இசைக்கவி ரமணனை அலைபேசியில் அழைத்தேன். எங்கிருக்கிறீர்கள் என்றார். திருக்கடவூரில் என்றேன். அவரிடமிருந்து பேச்சே இல்லை. பின்னர் சொன்னார், “எங்கே இருக்கிறாய் தேவி! நீ எப்படி இருக்கிறாய்” என்று இப்போதுதான் எழுதிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் திருக்கடவூரில் இருப்பதாய் சொல்கிறீர்களே!” என்று. அவர் எனக்கனுப்பிய கவிதைக்கு எழுதிய பதில் கவிதை இது.) இப்படி ஏன்கேட்டாய்- நான் எங்கும் இருக்கின்றேன்..-என செப்பிடச் சொன்னாளே-அந்த சுந்தரி உன்னிடத்தில் அற்புதப் புன்னகையால் -புவி ஆள்கிற அபிராமி-நமை எப்படி மறப்பாளாம்-மறந்தே எவ்விதம் இருப்பாளாம். ...
மகாபாரதம் அல்ல….
கூடிக் கலையும் நாடகக் கூடம் போடப்போவது கௌரவ வேடம் மர்ம வலையின் மனிதன் விழுவான் கர்ணன் மனதைக் கண்ணன் அறிவான் என்றோ தின்ற உப்புக்காக இங்கே இன்று நட்புக்காக அரசல் புரசலாய் ஆயிரம் சலனம் அரச சபையில் விகர்ணன் மௌனம் சபதக் கனலில் திரௌபதி மூச்சு தருமன் சபையிலோ சமரசப் பேச்சு பகடையாட்டம் பழகிப் பழகி சகுனியாட்டமே சிரிக்கிறான் தருமன் வில்லை முறித்தது விதுரனின் வேகம் சொல்லை மறைத்தது குந்தியின் சோகம் கட்டை விரலைக் கொடுத்தவன் வாழ்க ...
பாவேந்தர்-ஓர் இளங்கதிர்
(22 ஆண்டுகளுக்கு முன் சென்னைத் தொலைக்காட்சியில் வாசித்த கவிதை… பாவேந்தர் நினைவாக இன்று..) சதைக்கவிதை உயிரின்றிப் பிறந்த காலம் சகதியிலே மையெடுத்துப் புனைந்த காலம் எதைக்கவிதை என்போமோ எனுமேக்கத்தில் எந்தமிழர் உயிர்வாடி இளைத்த காலம் புதுத்தமிழை நவகவிதை ஆக்கித் தந்த பாரதியோ மூத்தகதிர்-அவன்சுவட்டில் உதித்தெழுந்த இளங்கதிராய் ஒளிபரப்பி உலவியவன் புதுவைநகர் கவிதைவேந்தன் தேயவுடல் மீதமின்றித் தினமுழைத்தும் தகுந்தபலன் அடையாத மனித மந்தை ஓய்ந்திருந்த புழுக்களென்ற நிலைமை மாறி ஓங்கார வேங்கைகளாய் எழுந்த விந்தை பாவேந்தன் செய்ததுதாநீனும் என்ன? ...
அங்குசத்தைக் கும்பிடும் ஆனை
கவியன்பன்.கே.ஆர்.பாபு இது நடந்து இருபது ஆண்டுகள் இருக்கும்.கோவை நானி கலையரங்கில் ஓர் இலக்கிய நிகழ்ச்சி. பார்வையாளர்கள் வரிசையில் கவியன்பன் பாபுவும் நானும். இருவருக்குமே வெண்பா எழுதுவதில் விருப்பம். ஆளுக்கு இரண்டு வரிகளாய் பாடும் இரட்டைப் புலவர்களின் உத்தியை நாங்களும் கடைப்பிடித்திருந்தோம். மேடையில் பேச்சாளர்கள் தூள் கிளப்பினார்கள். தூள் கிளப்பினார்கள் என்றதுமே பிரமாதமாகப் பேசினார்கள் என்று நீங்கள் நினைத்துவிடக்கூடாது. மரத்தை ரம்பத்தால் அறுக்கும் போது தூள் கிளம்பும் அல்லவா? அந்த தூள் இது. ஆர்வக் கோளாறில் முதலிரண்டு வரிசைகளில் அமர்ந்து விட்ட நாங்களிருவரும் ஒருவரையொருவர் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டோம். கவியன்பன் பாபு,விழா நோட்டீசின் பின்புறம் இரண்டு வரிகளை எழுதி நீட்டினார். “வேண்டாம் இவர்களெல்லாம் வாயால் விஷம்தெளிப்பார் மாண்டுவிடும் நம்பொறுமை வாபோவோம்” மீதி இரண்டுவரிகளை நான் எழுதினேன். –தீண்டவரும் ...