Blog

/Blog

ஓடாத்தூர்.மு.அர்ச்சுனன்

பெரிய கல்வி நிறுவனங்களை உருவாக்கி வைத்திருக்கும் ஒருவர்,மதுரைக்குப் போகும் வழியில் தன் அலுவலர் ஒருவரிடம் சிலவற்றை சொல்வதற்காக அலைபேசியில் அழைத்திருக்கிறார்.”மதுரைக்குப் போகாதேடீ”என்ற பாடல் ஒலித்ததும் அதிர்ந்து போன அவருக்கு சொல்ல வந்தது மறந்துபோனது. அவர் மதுரைக்குப் போனார்.அந்த அலுவலர் அடுத்த நிமிடமே அந்தப் பாட்டை மாற்றிக் கொடுக்குமாறு கேட்டு அந்த அலைபேசி நிலையத்துக்கே போனார்.ஒருகாலத்தில் நான் மதுரைக்கு மாதம் ஒருமுறையாவது போவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். அதாவது தொண்ணூறுகளின் தொடக்கத்தில்…. ஒரே நேரத்தில் கொத்துக் கொத்தாய் எனக்கு இலக்கிய நண்பர்கள் ஏகத்துக்குக் கிடைத்தது மதுரையில்தான்.மேலப்பெருமாள் மேஸ்திரி வீதியில் இருக்கும் ஹோட்டல் பிரேம்நிவாஸ் என் வழக்கமான வாசஸ்தலமாக மாறியிருந்தது. அப்போதெல்லாம் அங்கே அடிக்கடி வந்து தங்குபவர்களில் திரு.தமிழருவி மணியன் குறிப்பிடத்தக்கவர். பிரேம்நிவாஸ் ஹோட்டல் மனிதத்தேனீ இரா.சொக்கலிங்கம், திரு.பாபாராஜ்,திரு.வீரபாண்டியத் தென்னவன் என்று நீளுமந்தப் பட்டியலில் முக்கியமான இரண்டு பேர்கள் கவிஞர் மு.அர்ச்சுனனும் கவிஞர் இரா.பொற்கைப் பாண்டியனும். இவர்களில் அர்ச்சுனன் புதுக்கவிஞர்.சங்க இலக்கியம் தொடங்கி சமகால இலக்கியம் வரை நல்ல வாசிப்பும் விமர்சனமும் உள்ளவர்.பொற்கை ...

கோயம்புத்தூர் விழாவில் இலக்கிய மாலை

கோவையின் எழுத்தையும் பண்பாட்டையும் கொண்டாடும் திருவிழா….               கண்டிப்பா வாங்க!! ...

எம்.எஸ்.உதயமூர்த்தி-எழுத்தின் எழுச்சி

ஓவியம் :திரு.ஜீவா தமிழ்நாடு உணவகத்தின் கூட்ட அரங்கில் ஏராளமானவர்கள் கூடியிருந்தார்கள்.பெரும்பாலானவர்கள்கோவையையும் அதன் சுற்றுப்பகுதிகளையும் சேர்ந்த கல்லூரி மாணவர்கள்.அனைவரும் அடிக்கடி வாயிலைப் பார்த்துக் கொண்டிருந்தனர். வகுப்பறைக்குள் நுழையும் பேராசிரியர் போல் கால்சட்டைக்குள் உள்ளிடப்பட்ட மேல்சட்டையுடன் சிரித்த முகமாய் நுழைந்தார் எம்.எஸ்.உதயமூர்த்தி.சுற்றிலும் வெள்ளைச் சட்டையில் ஏராளமான பிரமுகர்கள்.மேடையின் பின்புலத்திலிருந்த எளிய பதாகையில் “மக்கள் சக்தி இயக்கம்”என்று எழுதப்பட்டிருந்தது. அப்போதே பிரபலமாயிருந்த கல்லூரி மாணவப் பேச்சாளர் ஜெயஸ்ரீ பத்ரிநாத் மேடைக்கு வந்து அறிவிக்க மற்ற பொறுப்பாளர்களுடன் மேடையேறினார் எம்.எஸ்.உதயமூர்த்தி. அவர் பேசுவதற்காக ...

வடிவழகி வெண்பா

புயல்நடுவே சிற்றகலும் புன்னகைக்கு மென்றால் கயல்கண்ணி பார்த்த கருணை-ஒயிலாக சந்நிதி யில்நிற்கும் சக்தியருள் பெற்றபின்னே நன்னிலைதான் சேரும் நமக்கு. பட்டுரசும் பாதங்கள் பூமி தனிலுரச மொட்டவிழும் கற்பகப்பூ மண்ணெங்கும்-எட்டுதிசை வீசும் வளைக்கரங்கள் வையமெலாம் காப்பதனைப் பேசும் பணியே பணி. மயிலானாள் கற்பகத்தாள் மாதேவன் ஆடக் குயிலானாள் கீதம் கொடுத்தாள்-துயர்தீரப் பாடும் அடியார்தம் பாட்டானாள் பொற்சபையான் ஆடும் ஜதியானாள் அங்கு மாயை வடிவானாள் மாயை தனைத்தொலைக்கும் தீயின் வடிவாகத் தானானாள்-தூய வடிவானாள் ஞான விடிவானாள் வேத முடிவானாள் அன்னை ...

இறைவன் விரும்பினால்…

என்முன் வருகிற காலங்களை இன்னும் திடமாய் எதிர்கொள்வேன் பொன்னினும் விலைமிகு பொருளென்றே பொழுதுகள் தம்மை மதித்திருப்பேன் இன்னமும் செய்ய ஏராளம் என்பதை உணர்ந்தே உழைத்திருப்பேன் இன்னொரு மனிதரை எண்ணாமல் என்னை நானே ஜெயித்திருப்பேன் எவர்க்கும் தந்தது போலேநான் எனக்கும் நேரம் ஒதுக்கிடுவேன் கவிதைக் கணங்களை சேகரித்து கருவூலத்தில் காத்திடுவேன் தவங்கள் முயல்கையில் வாழ்விங்கே தளிர்க்கும் என்பதை உணர்ந்திடுவேன் தவறுகள் செய்தால் பதறாமல் தாண்டி வரவே முயன்றிடுவேன் உள்ளம் பதறும் போதெல்லாம் உயிர்ப்பூ வாடும் என்றுணர்வேன் வெள்ளம் போலே ...

சூர்ய குண்டம்

சூர்ய குண்டம் சூர்ய குண்டம் சூர்ய குண்டம் சூர்ய குண்டம் கங்கையுடன் காவிரியும் சங்கமமாய் பொங்கும் எங்குமுள்ள தீர்த்தங்களும் இங்குவந்து தங்கும் வானமழை வந்துவந்து தேனமுதம் சிந்தும் ஞானியெங்கள் சத்குருவும் தந்தருளும் குண்டம் சூர்ய குண்டம் சூர்ய குண்டம் சூர்ய குண்டம் சூர்ய குண்டம் மூழ்கவரும் யாவருக்கும் நன்மைதரும் லிங்கம் பாதரசம் சக்திதரும் தூயரச லிங்கம் ஏழுலகும் காணவரும் காட்சியிந்த குண்டம் தீர்த்தமென்னும் அற்புதத்தின் சாட்சிசூர்ய குண்டம் சூர்ய குண்டம் சூர்ய குண்டம் சூர்ய குண்டம் சூர்ய ...
More...More...More...More...