துப்பாக்கி எப்போது பூப்பூப்பது
என் பால்ய நண்பன் அருண் அமெரிக்காவின் காதலன்.அவன் பாஸ்டனில் இருந்த நாட்களில் அவனுடன்காரில் டி.எம்.எஸ் பாடல்களைக் கேட்டுக் கொண்டே நயாகரா சென்றபோது அவன் சொன்னது இன்றும் நினைவிருக்கிறது.” America is an Idea”.மனித சமூகம் ஒவ்வொன்றுமே தன் இலட்சிய வாழ்முறையை வடித்தளிக்க முற்பட்டுக் கொண்டேயிருக்கிறது.அப்போது தனக்கிருக்கும் அமெரிக்கக் காதலையும் மீறி அருண் கவலைப்பட்ட விஷயம் தனிமனிதர்களும் பாதுகாப்பு கருதி துப்பாக்கி வைத்துக் கொள்ளக் கூடிய உரிமை. அநேகமாக அந்த சட்டம் 2005ல்தான் முன்வரைவு கண்டதாக ஞாபகம். யாரேனும் ...
12.12.12.மதியம் 12 மணிக்கு சத்குருவுடன்…!!
ராதே பரதநாட்டிய நிகழ்ச்சிக்கு சத்குரு வருவாரா என்கிற கேள்வி எல்லோருக்கும் உண்டு. ஊரிலிருந்தால் வருவார் என்ற பதில் வரும், “ஊரிலிருக்கிறாரா?”என்ற அடுத்த கேள்வி எழும். அவரையே நேரில் பார்த்து அழைப்பிதழ் தந்தால் உண்மை தெரிந்துவிடும் என்பதால் சத்குருவை சந்திக்க நேரம் கேட்டிருந்தோம். தோம் என்றால் திரு.கிருஷ்ணனும் நானும். புதன்கிழமை மதியம் 12.00 மணிக்கு சத்குருவை நீங்கள் சந்திக்கலாம் என்று தகவல் வந்தது. புதன்கிழமை 12.12.12 என்பது நினைவுக்கு வந்தபின்தான் மதியம் 12.00 மணி என்பதன் பொருத்தமும் புத்தியைத் ...
அற்புதர் – 18
அற்புதரின் பிரதேசம் மௌனத்தால் ஆனது. அங்கெழும் அத்தனை ஓசைகளும் மௌனத்தின் மடியில். நிகழ்பவை. மண்ணில் மழைத்துளி விழுகிற ஓசையும், புல்லில் பனித்துளி படிகிற ஓசையும் துல்லியமாகக் கேட்கும் விதமாய் அங்கே நிலைகொண்டிருந்தது மௌனம். அற்புதரின் மௌனமோ சுழலும் வாளின் கூர்மைகொண்டது. நாலாதிசையிலும் சுழலும் அந்த வாளின் முனைபட்டு விம்மி வெடிக்கும் உயிர்களின் வெற்றுக் கவசங்கள் விழுந்தன. கெட்டிப்பட்ட அழுக்கையே கவசமென்று கருதிய அறியாமை பொடியாகும் ஆனந்த கணங்களை அற்புதர் நிகழ்த்திக் கொண்டேயிருந்தார்.அவருடைய மௌனத்தின் மேற்பரப்பில் முத்துதிர்த்த சொற்களின் ...
வைகையைப் பாடிய வைரமுத்து
கோவையில் படைப்பாளர்கள் கலந்துகொண்டு தங்களுக்குள் பல்வேறு விஷயங்களை விவாதிக்கும் ஊஞ்சல் என்னும் அமர்வு ஒவ்வொரு வாரமும் முதல் செவ்வாயன்று நடைபெறும் 20 முதல் 25 பேர்கள் மட்டும் கலந்துரையாடி விருந்துண்டு விடைபெறுவார்கள். ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் விருந்தோம்பலில் இந்நிகழ்ச்சி சில ஆண்டுகளாய் நடைபெறுகிறது. இவர்களில் தங்கவேல் சரவணன் என்றோர் இளைஞர். மரபாளர்களுக்கே மறந்து போன பழந்தமிழில் திருமுகம் வரைவது தொடங்கி வெண்பா கட்டளைக் கலித்துறை என்று வெளுத்து வாங்குவார். அம்பாசமுத்திரம் அருகிலுள்ள விக்கிரமசிங்கபுரம் அவருடைய சொந்த ஊர். ...
சித்தர்கள் அருளும் சிவானந்தம்
மிகச்சமீபத்தில்,முகநூலில் ஒருவரி வாசித்தேன்.”மறைவாகக் கடவுள் அப்படி என்னதான் செய்து கொண்டிருக்கிறார்?” இந்தக் கேள்வி ஏறக்குறைய எல்லோருக்குமே உண்டு. கடவுள் நமக்கு என்ன செய்வார் என்ற சுயநலக் கேள்வியில் தொடங்குகிற இந்தத் தேடல், கடவுள் என்ன செய்கிறார் என்ற சுயத்தேடலாக வளர்வதே பெரிய வரம். இதற்கு விடைகாணும் வழியே தவம். சில நாட்களுக்கு முன் பாலரிஷி அவர்களிடம் “நீங்கள் சித்தர்கள் பற்றியொரு புத்தகம் எழுதலாமே” என்று கேட்டேன். கேள்வியின் கடைசிச்சொல்லை பதிலாக்கினார்..”எழுதலாமே!நான் சொல்கிறேன். நீங்கள் எழுதுங்கள்”. அதற்குப்பின் நடந்ததுதான் சுவாரசியம். அந்த விநாடியிலேயே அவர்சொல்லத் தொடங்கியிருந்தார்.நல்லவேளையாய் காகிதமும் எழுதுகோலும் கையருகே இருந்தன.முன்னொரு முறை பாலரிஷி குறித்து,மந்திரமழை என்றொரு புத்தகம் ...
அற்புதர்-17
அற்புதரின் வீட்டு முற்றத்தில் அதிர்ந்து கொண்டிருந்தன கால்சதங்கைகள்.பதங்களுக்கேற்ற அபிநயத்தில் அசைந்தாடிக் கொண்டிருந்தன பிஞ்சுப் பாதங்கள். அற்புதரின் பாகம்பிரியாள் விதைத்த விதைகளில் இதுவும் ஒன்று. வான்முகிலாய் மாறி அவர் வார்த்த அமுதத்தில் மலர்ந்திருந்தது அந்த ஆனந்த மலர். பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்த காலங்களில் மேற்கொண்ட சங்கல்பங்களில் ஒன்று இன்று கண்ணெதிரே களிநடம் புரிந்ததில் அற்புதருக்கு மகிழ்ச்சி. தன்னுள் ஒலிக்கும் தாண்டவ அதிர்வுகளையே வருபவர் மூச்சில் வைத்து அவரவர் உயிரையே பொன்னம்பலமாக்கித் தந்து கொண்டிருக்கும் அற்புதரின் முற்றத்தில் அருள்மணம் ...