அற்புதர்-14
ஆண்டின் மிக இருண்ட இரவை அற்புதரின் முன்னிலையில் அணுஅணுவாய் உள்வாங்க பல இலட்சம்பேர் வந்துகொண்டிருந்தனர். மிகநீண்ட மலைப்பாம்பாய் வந்து கொண்டிருந்த அந்த வரிசையைப் பார்த்த அற்புதர் புன்னகைத்த வண்ணம் வணங்கினார்.அவருக்கு அன்றிரவு முழுவதும் தன் பங்குதாரருடன் ஒரு பணியிருந்தது.. ஒவ்வொருவருக்குள்ளும் உறங்கும் உயிர்ச்சுருளை உசுப்பிவிட்டு சீண்டிவிட்டு சீறவிட்டு வேடிக்கை பார்ப்பதில் அற்புதருக்கு அளவிட முடியாதஆனந்தம். தங்களுக்குள் இருக்கும் அந்த உயிர்ப்பை உணர்ந்தவர்கள்,உணராதவர்கள் அனைவருக்கும் அற்புதரின் சபையில் ஆசனங்கள் இர்ருந்தன.உலகின் வெவ்வேறு திசைகளிலிருந்தும் குழலோடும் யாழோடும்முரசுகளோடும் அங்கமெங்கும் தாண்டவத் துகள்களோடும் ...
அற்புதர்-13
அற்புதரின் இரவுகள் ஏகாந்தமானவை.அவரின் அறிதுயில் பொழுதுகளில் அகலத் திறந்த அவரின் ஆன்மவாசல்வழி தங்களுக்கானசொர்க்கவாசல் தென்படுகின்றதா என்று வடிவிலாத் துளிகள் வந்து நிற்பதுண்டு. பெருவழிக்கான பாதை திறக்க நெடுங்காலமாய் காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்கள் மீது அற்புதரின் கண்ணோக்கம் படும்போதே அவர்களின் பயணப் பொழுது முடிவாகிவிடும். கையிலிருக்கும் மூட்டை முடிச்சுகளைக் களவு கொடுப்பதே அந்தப் பயணத்துக்கான அடிப்படைத் தகுதி என்றறிந்தவர்கள் அற்புதர் அவற்றைக் களவாடும் கணத்திற்கென்று ஆவலுடன் காத்திருப்பார்கள்.நெடுங்காலமாய் சுமக்கும் அந்த மூட்டை முடிச்சுகளை அவர்களிடமிருந்து தனியே பிரித்தறியும் அற்புதமே ...
அற்புதர்-12
சின்ன வயதிலிருந்தே சிகரங்கள் என்றால் அற்புதருக்கு மிகவும் பிரியம்.அவரது பாதங்களிலும் பாதுகைகளிலும் வாகனச்சக்கரங்களிலும் மலைவாசனையும் வனவாசனையும்வந்து கொண்டேயிருக்கும்.முன்பொரு காலத்தில் பரமனின் பாதங்கள் பதிந்த மலைத்தடங்களில் அற்புதர் தன் குருநாதரை தரிசித்தார்.எனவே மலைகளின் தரிசனம், அவருக்கு தாய்முலை கரிசனம். அன்று தொடங்கி எல்லாச் சிகரங்களிலும் அவருக்கான பாதைகள் விரியத் தொடங்கின.சமவெளிகளில்அற்புதர் நடந்து வரும்போதெல்லாம் ஒரு சிகரம் நடந்து வருவதைப்போலவே இருக்கும். மலையேறும் மனிதர்கள் அடிவாரங்களில் இளைப்பாறி அதன்பின் தொடங்குவதுபோல் அவருடைய திருவடிகளில்இளைப்பாறி ஆன்மீகச் சிகரங்கள் நோக்கி ஆயிரமாயிரம்பேர் தங்கள் ...
அற்புதர்-11
ஆகாயத்தைக் குறிவைப்பவர்களில் அற்புதரும் ஒருவர். ஆனால் அவர் குறிவைப்பது, தான் ஏற்கெனவே வென்றுவிட்ட ஆகாயத்தை. நெற்றிப் புருவங்கள் நடுவே வந்து நின்ற வெட்டவெளியின் விரிவை வெளியிலும் காண்பதால் அவர்பார்க்கும் ஆகாயம், அவருடைய ஆகாயம். ஆனால் ஆகாயத்தைக் குறிவைத்து அவர் எய்யும் அம்புகள் எதையும் கிழிக்கும் அம்புகளல்ல.கிழிந்த ஆகாயத்தைத் தைக்கும் அம்புகள்.பூமியை நாணாக்கி மேல்நோக்கி மெல்ல மெல்ல எழும் அம்புகளை அவர் எய்த வண்ணம் இருக்கிறார். அற்புதரின் படைவீரர்கள் அல்லும்பகலும் அந்த அம்புகளை எய்தவண்ணம் இருக்கிறார்கள். அகஆகாயத்தின் ஆனந்தம் ...
தமிழக முதல்வர் ம.கோ.இரா.
இப்படித்தான் உலகத்தமிழ் மாநாட்டின்போது எம்.ஜி.ஆர்.தனித்தமிழ் ஆர்வலர்களால் அன்புடன் அழைக்கப்பட்டார். அவருக்கு தமிழறிஞர்களுடன் நெருங்கிய தொடர்பும் பற்றும் இருந்தது. சில தமிழ்ச்சொற்களைப்பற்றி அவர் வேடிக்கையாகக் கேட்டதையும் அதற்கு முதல்வர் மனம் புண்படாமல் தான் விடைதந்த விதம் குறித்தும் அவ்வை நடராசன் அவர்கள் பலமுறை பகிர்ந்து கொண்டிருக்கிறார். ஓட்டுநரை “காரோட்டி”என்று சொல்வதை எம்.ஜி.ஆர். ஒருமுறை கிண்டல் செய்தாராம்.”அது என்ன காரோட்டி கா..ரோட்டி” என்று கேலி செய்ய உடனே அவ்வை நடராசன்,”எனக்கென்னங்க தெரியும்? எனக்கு படகோட்டிதான் தெரியும்” என்று சொல்ல, ஒருகணம் திகைத்த எம்.ஜி.ஆர், வெடித்துச் சிரித்திருக்கிறார். அவர் முதல்வராக இருந்த காலத்தில் தமிழ்ப்பல்கலைக்கழகம் உருவாவதில் காட்டிய அக்கறை,பாரதியார் ...
அற்புதர்-10
வானம் வைக்கும் வண்ண வண்ண வரவேற்பு வளைவுகளும் மேகங்கள் தெளிக்கும் பன்னீர்த் துளிகளும் அற்புதரின் குடிலுக்கு கடவுள் வருவதை உலகுக்கு உணர்த்தின.அற்புதரின் செயல்கள் அனைத்திலும் அறிவிக்கப்படாத பங்குதாரராகிய கடவுள்,அற்புதரின் குடிலில் நுழையும்முன் வரிசையாய் அடுக்கப்பட்டிருந்த காலணிகளின் வரிசையில் தன் காலணிகளையும் கழற்றி வைத்தார். அப்புறம் அற்புதரின் குடிலில் வரவேற்பறையிலிருந்த விருந்தினர் பதிவேட்டில் மின்னல் கொண்டு வெளிச்சக் கிறுக்கல் கிறுக்கினார் எழுத்தேதும் அறியாமல் எல்லாம் அறிந்த பல ஞானியரின் பெருவிரல் ரேகைப்பதிவுகளும் அந்த வருகைப்பதிவேட்டில் இருப்பதைக் கண்ட கடவுள்அந்த ரேகைகளை வாஞ்சையுடன் வருடிக் கொடுத்தார். கடவுள் வருகிற தேதியறிந்து கூட்டம் கூட்டமாய் திரண்டிருந்த பல்லாயிரம் மனிதர்கள் வெள்ளாடையணிந்து ...