Blog

/Blog

அற்புதர் – 9

அற்புதரின் பிரதேசத்திற்குள் புதிதாய் வந்தார் அந்த மனிதர். அவர் புதியவர் என்ற எண்ணம் அவருக்கு மட்டுமே இருந்தது. அற்புதரின் அங்க அடையாளங்களை அவர் ஏற்கெனவே விசாரித்தறிந்திருந்தார். அற்புதர் ஆடைகள் அணியும் பாங்கு பற்றி, அவர் கேள்விப்பட்டிருந்தார்.யாரையும் கேட்காமலே அற்புதரை அடையாளம் கண்டுவிட வேண்டுமென்று அவர் கங்கணம் கட்டிக் கொண்டிருந்தார். முதிய தோற்றமுள்ள எளிய மனிதர் ஒருவர் அந்த மனிதருக்கு சற்று முன்பாக சென்று கொண்டிருந்தார். சுயதேடலின் பாதையில் செல்வதாலேயே சுடர்பொங்கும் வடிவுடைய இளைஞர்கள் சிலர் அந்த முதியவர் ...

அற்புதர் – 8

அற்புதருக்கு வாகனங்கள் ஓட்டப் பிடிக்கும். கரடுமுரடான சாலைகள் என்றால் மிகவும் பிடிக்கும். அவர் அடிக்கடி பயணம் செய்யும் முரட்டு சாலையொன்றில் ஒருநாள் ஓர் அறிவிப்புப் பலகை இருந்தது..” ஆட்கள் வேலை செய்கிறார்கள்”என்று.அந்தப்பலகையைப் பார்த்ததும் அற்புதரின் இதழ்களில் குறுநகை அரும்பியது. அடுத்த சில மாதங்களில் கண்ணாடிபோல் வழுக்கிக் கொண்டு போன அதே சாலையில் அற்புதர் வெகுவேகமாக சென்று கொண்டிருந்தார். அந்த நெடுஞ்சாலையில் அவருடைய விரல்கள் மானசீகமாய் ஒரு வரியை எழுதிப் பார்த்தன,” ஆட்கள் வேலை செய்தார்கள்”. சிறிது தொலைவிலேயே ...

முடிவில்லாத கணங்கள்

எழுதித் தீராக் கணங்களை எல்லாம் எப்படித் தாண்டுவது எழுத்தில் சேராக் கணங்களை எல்லாம் எங்கே தொடங்குவது பழுதாய்ப் போன பழைய கணங்களை எங்கே வீசுவது முழுதாய் வாழ மறந்த கணங்களை எங்கே தேடுவது கணையொன்று வில்லைக் கடக்கும் கணத்தின் கணக்கெங்கு காணுவதோ இணைப்பறவைகளில் ஒன்றை வீழ்த்தும் நொடியெங்கு தோன்றியதோ அணையினைக் கண்ணீர் தாண்டி நடக்கும் அபூர்வ கணமெதுவோ கணங்களில் நடக்கும் காலத்தின் கால்களில் துணைமுள் குத்தியதோ ஒவ்வொரு நொடியையும் உள்ளே வாங்கி உயிரில் சேமித்தேன் கவ்வி இழுக்கும் ...

வெத்தல வெத்தல வெத்தலயோ

மலேசியா வாசுதேவனின் ஆகிருதிக்குப் பொருந்தாத அப்பாவிக் குரலில், சிவக்குமாரின் வெள்ளந்தி முகத்திற்கு மிகவும் பொருந்தும் பாவத்தில் கங்கை அமரனின் வரிகளில் விளைந்த அற்புதமான பாடல் ‘வெத்தல வெத்தல வெத்தலயோ”. கிராமத்து மனிதர்களையே சார்ந்து வாழ்ந்து அவர்களுக்குப் பயன்கருதாமல் கைங்கர்யம் செய்யும் எளிய மனிதர்களின் பிரதிநிதியான வண்டிச்சோல செம்பட்டையின் குரல் அந்தப் பாடலில் துல்லியமாய் ஒலிக்கும். ஆதுரமாய் அழைத்து வேலைவாங்கும் யாரோ ஒரு பாட்டி,கல்யாணம் முடித்ததும்””மொத ஆசீர்வாதத்துக்கு” அழைக்கும்யாரோ ஒரு தாத்தா,அதட்டி வேலைவாங்கும்போதே அக்கறையை உணர்த்திவிடும் பயில்வான், இவர்களிடம் ...

அற்புதர்-7

தன் கனவில் அற்புதர்வந்ததாய் பரவசமாகச் சொன்னார் ஒரு சீடர். அற்புதர் தங்கள் கனவுகளிலும் வந்ததுண்டென்று ஏனைய சீடர்களும் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினர். அற்புதரைக் கனவில் காண்பது நனவில் கண்டது போலவே இருந்ததென்று சொன்னார் ஒருவர். நனவில் அற்புதரைக் காண்கிறபோதே அது கனவு போலத்தான் இருக்கிறது என்றார் இன்னொருவர். எது கனவு எது நனவு என்ற குழப்பம் பற்றி ஒரு ஜென்கதை உண்டு தெரியுமா என்று தொடங்கினார் இன்னொருவர்.சங்-சூ என்ற ஜென்குரு ஒருநாள் காலையில் குழப்பத்துடன் குடிலின் வாயிலில் ...

இரு சம்பவங்கள்….ஒரே படிப்பினை

திரு.சுகிசிவம் அவர்கள் சேலத்தில் ஒருமுறை தொடர் சொற்பொழிவு நிகழ்த்தினார்.தொடர்ந்து வருகை தந்த பல்லாயிரம் பேர்களில் ஒருவர் தயங்கித் தயங்கி வந்து திரு.சுகிசிவத்தின் கால் அளவைக் குறித்துக் கொண்டு போனார்.நிறைவுநாளன்று கைகளில் ஒருஜோடி செருப்புடன் வந்தார்.”அய்யா! நான் செருப்பு தைப்பவன். உங்கள் பேச்சு எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. எனவே நான் உங்களுக்காக இந்த ஜோடி செருப்பைக் கொண்டு வந்திருக்கிறேன்.” என்றார். அவர் நிலையறிந்து பணம் கொடுக்கலாம்.கொடுத்தால் மனம் புண்படுவார்.அவர் அன்புக்கு விலைவைத்ததுபோல் ஆகிவிடும். திரு.சுகிசிவம் சிலவிநாடிகள் யோசித்தார். தான் ...
More...More...More...More...