Blog

/Blog

விசையைத் தட்டினால் வெளிச்சம் வருமா? நெய்வேலியில் கேள்வி

நெய்வேலி ஈஷா அன்பர்களின் அன்புமிக்க ஏற்பாட்டில் ஞானத்தின் பிரம்மாண்டம் நூல் விளக்கவுரை நிகழ்த்தினேன். ஒருமணிநேர உரையின் நிறைவில் ஒரு மனிதனின் வாழ்வில் குரு நுழைவதற்கு முன்பும் பின்பும் தெளிவு நிலையில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் பற்றி இப்படிச் சொன்னேன்… “உங்கள் அறைக்குள்ளேயே இருட்டில் நுழைகிறீர்கள். எது எங்கே இருக்குமென்று தெரியும் என்றாலும் எடுக்க வேண்டியதை எடுக்க நேராகப் போய் நேராக வர முடிவதில்லை.தட்டுத் தடுமாற வேண்டி வருகிறது. ஆனால் விசையைத் தட்டி வெளிச்சம் அறை முழுவதும் பரவினால் கவலையே ...

போகன்வில்லா

தொட்டிக்குள் இருக்கும் பாதுகாப்பை அசல் தாவரங்கள் அங்கீகரிப்பதில்லை. போகன்வில்லாவுக்கு ஏனோ இது புரிவதில்லை கொட்டிவைத்த மண்ணுக்குள் காலூன்றி நிற்பது மண்கிழிக்கும் வித்தையில்லை போகன்வில்லாவுக்கு ஏனோ இது புரிவதில்லை பூவா இலையா என்று புரியாமல் இருப்பதொன்றும் பெருமையில்லை. போகன்வில்லாவுக்கு ஏனோ இது புரிவதில்லை பூக்காமல் காய்க்காமல் கனியாமல் உயிர்ப்பற்று உயிர்தரித்தல் தாவர தர்மமில்லை போகன்வில்லாவுக்கு ஏனோ இது புரிவதில்லை புதராகவும் மண்டாமல் மரமாகவும் திமிராமல் கணக்குப் போட்டு கவிவதில் சாரமில்லை போகன்வில்லாவுக்கு ஏனோ இது புரிவதில்லை கூர்க்காக்களின் விறைத்த சட்டைநுனி மட்டும் ஸ்பரிசிக்கும் செடியாய் இருப்பதில் அர்த்தமில்லை போகன்வில்லாவுக்கு ஏனோ இது புரிவதில்லை கத்திரிக்கோல்களின் கட்டுக்குள் கிடந்தபடி தன்னை கற்பகவிருட்சமாய் கருதுவது சரியில்லை போகன்வில்லாவுக்கு ஏனோ இது புரிவதில்லை வெயிலோ மழையோ தெரியாமல் செயற்கைக்  குளிரில் விறைத்து நிற்பதன்பெயர் செடியில்லை போகன்வில்லாவுக்கு ஏனோ ...

ஜெயமோகன் என்மேல் வழக்கு போடவில்லை

( இணையத்தில் எழுதினாலே வழக்கு பாய்கிற காலமிது. எழுத்தாளர் ஜெயமோகன் பால் கொண்ட நட்புரிமையால் 2009 ஜனவரியில் நான் இதனை எழுதினேன்.அவர் என்மேல் வழக்கேதும் போடவில்லை) தேமே என்று நடந்து போய்க்கொண்டிருந்த தன்னை ஏன் ஆட்டோவில் கடத்தினர்கள் என்று குழம்பிக் கொண்டே ஆட்டோவில் ஆடியவண்ணம் போய்க் கொண்டிருந்தார் எழுத்தாளர் புயல்வேகன்.கூச்சலிடுவதும் எட்டிக் குதிப்பதும் நவீன எழுத்தாளருக்கழகல்ல என்பதுடன் அவருக்கு குதிக்கத் தெரியாது என்பதும் அவர் வாளாவிருந்ததன் காரணங்கள்.ஆனாலும் அவரின் நுண்மனம் வாள் வாள் என்று கத்திக் கொண்டிருந்தது. கண்கள் இரண்டும் கட்டப்பட்ட ...

விஸ்வரூபம்

“எப்போ வருவாரோ”நிகழ்ச்சியில் மகாகவி பாரதி பற்றிப் பேச வந்திருந்தார் ஜெயகாந்தன். ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம்  ஒவ்வொரு ஜனவரியும் கோவையில் நிகழ்த்தும் உன்னதமான தொடர் நிகழ்ச்சி அது.விழாவில் முகவுரை நிகழ்த்திய கவிஞர் பெ.சிதம்பரநாதன், “இன்று ஜெயகாந்தன் தன் விஸ்வரூபத்தைக் காட்டுவாரா என்று வந்திருக்கும் நண்பர்களெல்லாம் எதிர்பார்த்திருக்கிறார்கள்” என்றார். வழக்கம் போல,’நண்பர்களே!” என்று தொடங்கிய ஜெயகாந்தன், மடை திறந்தார்.மகாகவியின் அரிய பாடல்கள், பலரும் தாண்டிச் சென்ற பாடல்கள்,நின்றுகாணாத நுட்பங்கள் எல்லாம் மழைபோல் வந்து விழுந்தன. நாற்பது நிமிடங்கள்கடந்திருக்கும். இடையில் ...

தேதி தெரிந்த கவிதை

பல கவிஞர்கள் தங்கள் ஒவ்வொரு கவிதையும் எப்போது பிறந்ததென்று குறித்து வைப்பார்கள்.அல்லது அந்த நாளில் நடந்த சம்பவமே முக்கியமானதாய் அமைந்து அந்தத் தேதியை நினைவூட்டிக்கொண்டே இருக்கும். என் கவிதைகளில் பெரும்பாலானவற்றுக்கு ஜாதகமோ பிறந்த தேதியோ கிடையாது. இன்று பழைய கோப்பு ஒன்றினைப் புரட்டிக் கொண்டிருந்த போது, தேதியிடப்பட்ட கவிதை ஒன்று கிடைத்தது. 26.07.2010 அன்று இந்தக்கவிதையை மலேசியாவில் இருந்தபடி எழுதியிருக்கிறேன். ஆனால் இந்தக் கவிதைக்கு தலைப்பிடப்படவில்லை.பிறந்த தேதி தெரிந்துவிட்டது.நேரம் ஞாபகமிருந்தால் ஜாதகம் கணித்து பெயர்சூட்டி விடலாம். பிறந்து ...

இது ரஜினியின் கடமை எனலாமா?

நெய்வேலி மின் நிலையத்தின் உயர் அலுவலர்கள் மத்தியில் “நமது வீட்டின் முகவரி” என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினேன். சிறந்த பயிற்சியாளராக அறியப்படுபவரும் அந்நிறுவனத்தின் பொது மேலாளர்களில் ஒருவருமான திரு. ஒய்.எம்.எஸ். பிள்ளை, கேள்வி நேரத்தில் ஒரு கேள்வி எழுப்பினார். “சுய மதிப்பீட்டுக்கும் சுய பிம்பத்துக்கும் என்ன வித்தியாசம்?” சுயபிம்பம் என்பதை கண்ணாடியில் தெரியும் பிம்பத்துக்கு ஒப்பிடலாம்.நாம் எவ்வாறு தோற்றமளிக்க விரும்புகிறோம் என்பதற்கேற்ப நம் தோற்றத்தில் நாம் செய்யும் சீர்திருத்தங்களை அந்த பிம்பம் பிரதிபலிக்கிறது. ஆனால் அந்த பிம்பம்தான் நாமென்று ...
More...More...More...More...