எது சுதந்திரம்…..எது நிர்ப்பந்தம்?
“தெற்கிலிருந்து சில கவிதைகள்”என்னும் நூலில் என் கல்லூரிப்பருவத்தில் ஒரு கவிதை படித்தேன். எத்தனையோ முறை மேற்கோள் காட்டியும் அந்த வரிகளின் தாக்கம் மாறவேயில்லை. “பறவையான பிறகுதான் தெரிந்தது… பறத்தல் என்பது சுதந்திரம் அல்ல… நிர்ப்பந்தம் என்று” இதை எழுதியவர் கவிஞர் சமயவேல் என்று ஞாபகம். சரியாகத் தெரியவில்லை. வீட்டிலிருந்து பத்து நிமிட நடைத்தூரத்தில் இருக்கிறது, பந்தயச்சாலை. நடைப்பயிற்சிக்கு மிகவும் உகந்த இடம். பந்தயச்சாலைக்கு நடந்துபோய் அங்கே நடைப்பயிற்சி மேற்கொள்வது வழக்கம். காலைப்பொழுதில் கால்வீசி நடந்து பந்தயச்சலையின் இரண்டரை ...
ஸ்ஸாப்பிடணும்
மின்கம்பிகளில் இறங்கி, கம்பிமேல் நேர்க்கோட்டில் ஓடி, சர்வ ஜாக்கிரதையாய் தரையிறங்கிக் கொண்டிருந்த மழைத்தாரைகளைப் பார்த்துக் கொண்டிருந்தபோது கடந்து போன இருசக்கர வாகனமொன்றை இயக்கிய வண்ணம், ஜெர்கினில் புதைந்த கையை வீசிப்போன வில்லியம்ஸை எனக்கு அடையாளம் தெரிந்தது. அவன் என் பள்ளித் தோழன். பக்கத்து வகுப்பில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். அன்று ஏதோ காரணத்தினால் பள்ளி மூன்று மணிக்கெல்லாம் விட்டுவிட்டார்கள். பள்ளிக்கு அருகிலிருந்த நாஸி காபி பாரில் சமோசாவும் டீயும் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். நாலு சமோசா இரண்டு ...
என்னை எழுதெனச் சொன்னது வான்
பாவேந்தர் பாரதிதாசனின் கம்பீரமான வரிகளில் இதுவும் ஒன்று. உண்மையில் மனிதனிடம் ஆகாயம்,பூமி காற்று,நெருப்பு,கடல், கதிர், நிலா எல்லாமே பேசிக்கொண்டுதான் இருக்கின்றன. பிரபஞ்ச பாஷை மனிதனுக்குப் புரிபடுவதில்லை. பாவேந்தரின் இந்த வரிக்கு நெருக்கமாக் வைத்துப் பார்க்கத் தக்க வரி, கவிஞர் வைரமுத்துவின் “வானம் எனக்கொரு போதிமரம், நாளும் எனக்கது சேதிதரும்”என்ற வரி. பூமியைப் பரிச்சயப்படுத்திக் கொண்ட அளவுக்கு மனிதன் ஆகாயத்துடன் அறிமுகமாகவில்லை. மனிதன் சலனங்களையும் சப்தங்களையும் சார்ந்தே இருக்கிறான். விரிந்து கிடக்கும் வான்வெளியின் நிர்ச்சலனம் மனிதனை ஒருவித அச்சத்தில் ...
தட்சிணாமூர்த்தி மாடம்
“உங்கள் அலுவலக அறையில் தென்முகமாக தட்சிணாமூர்த்தி படம் வைத்து தீபமேற்றுங்கள்”. பாலரிஷி ஸ்ரீ விஸ்வசிராசினி சொன்னதுமே செய்ய வேண்டுமென்று தோன்றிவிட்டது. எங்கள் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமைகளில் வழிபாடு நடக்கும். நான் வழிபாட்டுக் கூடத்துக்குப் போகும் முன்னரே தீப தூபங்கள் தயாராக இருக்கும். இது தெரிந்தோ என்னவோ,”இந்த தீபத்தை நீங்கள்தான் ஏற்ற வேண்டும்,நீங்கள் ஊரில் இல்லாதபோது மற்றவர்கள் ஏற்றலாம் என்று சொல்லியிருந்தார் பாலரிஷி. முதல் வேலையாய் தட்சிணாமூர்த்தி படத்துக்கேற்ற மாடம் வாங்கப்பட்டது. விசேஷ காலங்களில் நெய்தீபமும், மற்ற நாட்களில் எண்ணெயும் ...
யானை தப்பித்து வந்தால்…..
“மிருகக்காட்சி சாலையில் இருந்து ஒரு யானை தப்பித்து விட்டது. அங்கே ஒரு பள்ளிக்கூடம் வேறு. இப்போது யானையைப் பிடிக்க என்ன செய்வீர்கள்?” அந்த இளைஞர்கள் மத்தியில் இந்தக் கேள்வியை விசியபோது யானைகள் பற்றிய எத்தனையோ எண்ணங்கள் எனக்குள் ஓடத் தொடங்கின. வனப்பகுதிகளை இழந்த யானைகள் நகர்ப்புறப் பகுதிகளில் நுழையத் தொடங்கி நீண்ட காலம் ஆகிவிட்டது. அநேகமாய் அடுத்த தலைமுறைக்குள் இது பழகி விடலாம். “உன் வேலையை நீபார் என் வேலையை நான் பார்க்கிறேன்” என்று யானைக்கும் மனிதனுக்கும் ...
நவராத்திரி கவிதைகள்……….10
அந்தமில்லாச் சுகமடைந்தோம் கோட்டைகள் நடுவே ஸ்ரீபுரத்தில்-அவள் கொலுவீற்றிருக்கும் சாம்ராஜ்யம் மீட்டிடும் வீணைகள் மத்தளங்கள்-இளம் மெல்லியர் நடனத்தில் சிவலாஸ்யம் ஏட்டினில் எழுதும் வரியிலெல்லாம்-அவள் எழில்திரு வடிகளின் ரேகைகளே நீட்டிய சூலத்தின் நுனியினிலே-பகை நடுங்கச் செய்திடும் வாகைகளே பூரண கன்னிகை திருவருளே-இந்தப் பிரபஞ்சம் தோன்றிய கருவறையாம் காரண காரியம் யாவையுமே-எங்கள் காளி சமைத்த வரைமுறையாம் தோரண மாவிலை அசைவுகளில்-அந்தத் தோகையின் சுவாசம் தென்படுமாம் நாரணி நான்முகி நாயகியாள்-நம் நாபிக் கமலத்தில் அமர்ந்தனளாம் ஆயிரம் அசுரர்கள் எதிர்ப்படினும்-விழி அசைவினில் யாவரும் ...