Blog

/Blog

அற்புதர்-1

எல்லோரின் மனவெளிகளிலும் விரிக்கப்பட்டிருந்த மானசீகக் கம்பளங்கள், அற்புதரின் பாதங்கள் பதியும் பொற்கணத்திற்காகக் காத்திருந்தன.பாதங்கள் பதியும் அந்தக் கணத்திலேயே அற்புதங்கள் நிகழுமென்ற எதிர்பார்ப்பும் சுடர்விட்டுக் கொண்டிருந்தது.வந்து சேர்ந்த அற்புதரின் பாதங்கள் பூமியின் ஸ்பரிசத்திற்குப் பழகியவை. உலகுக்குத் தர வேண்டிய வரங்கலையெல்லாம் தாவரங்களிலிருந்தும் செம்மண்ணிலிருந்துமே அவருடைய பாதங்கள் பெற்றுக் கொண்டிருந்தன. மனவெளியில் மண்ணின் இயல்புத்தன்மையும் ஈரத்தன்மையும் பரவியிருக்கும் என்ற நம்பிக்கையில் பக்தர்களின் மானசீகக் கம்பளங்களை மடிக்கத் தொடங்கினார் அற்புதர். ஆங்காங்கே இருந்த அவநம்பிக்கைப் பள்ளங்கள் வெளிப்பட்டதில் பக்தர்கள் அதிர்ந்து நிற்க அந்தப் பள்ளங்களில் மண்ணள்ளிப் போட்டார் அற்புதர். மிகச்சாதாரணராய் இருப்பதைக் காட்டிலும் ஓர் அற்புதம் ...

மணிகர்ணிகை

எனக்கேது தடையென்று எல்லார்க்கும் சொல்வதுபோல் கணக்கேதும் இல்லாமல் கங்குகரை காணாமல் கைகால்கள் விரித்தபடி கங்கை வருகின்றாள்: நெய்து முடியாத நீள்துகிலாய் வருகின்றாள் நிசிகாட்டும் மையிருளின் நிறம்நீங்கி, செம்பழுப்பாய் அசிகாட்டில் இருந்தவளும் ஆர்ப்பரித்து வருகின்றாள்; புடவைக்குள் குழந்தைகளைப் பொத்துகிற தாய்போல படித்துறைகள் மூழ்கடித்து பாகீரதி வருகின்றாள்; பாம்புச் சீறலுடன் புரண்டெழுந்து காசியெங்கும் தாம்பு வடம்போலத் தான்நெளிந்து வருகின்றாள் வானமகள் வரும்வழியில் வழிபடவே தான்வாழ்ந்த மேனியையே சிலரெரிக்கும் மணிகர்ணிகைவழியே கால்சதங்கை அதிர்ந்தபடி கண்ணெடுத்தும் பாராமல் மேல்விழுந்த சாம்பலுடன் மாதரசி நடக்கின்றாள்: ...

கங்கையின் மடியில்…கருணையின் பிடியில்

சத்குரு விட்ட பட்டம்”Oh! Its a long time since i flew a kite” என்று சத்குரு சொன்னபோது ஒளிப்பதிவுக்கருவிகளின் கோணங்களை மாற்றிக் கொண்டிருந்தார்கள். கங்கைக்கு மேலே பறந்து கொண்டிருந்த பட்டங்களைப் பார்த்துக்  கொண்டிருந்த சத்குருவின் வலக்கரம் பட்டத்தின் நூலை விடுவது போலவும் சுண்டியிழுப்பது போலவும் சில விநாடிகள் பாவனை செய்தன. மிகவும் இயல்பாக நிகழ்ந்த அந்த உரையாடலில் சத்குரு கங்கையாகப் பெருகிக் கொண்டிருந்தார். சிவனையும் காசியையும் சுற்றிப் பின்னப்பட்டிருந்த புராணத்தின் பட்டுக் கயிறுகளை அநாயசமாய் ...

மரபின் மைந்தனின் 50வது நூல்கள் வெளியீட்டு விழா

மரபின் மைந்தன் முத்தையாவின்  50ஆவது படைப்பு திருக்கடவூர்  & மரபின் மைந்தனின்  “எழுத்து கருவூலம் (50 நூல்களின் முத்திரை பகுதிகள் ) வெளியீட்டு விழா அழைப்பிதழ் இத்துடன்….. அனைவரும் வருக …… தங்களை அன்புடன் அழைக்கும் விழா குழுவினர் ...

கண்ணதாசன் விருதுகள்

கோவை கண்ணதாசன் கழகம் வழங்கும் 2012 ஆம் ஆண்டுக்கான கண்ணதாசன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கவிஞர் கலாப்ரியா, திரு, ஆர்.பி.சங்கரன் ஆகியோர் விருதுகள் பெறுகின்றனர். ரூ.50,000 ரொக்கப்பரிசும் பட்டயமும் கொண்ட இந்த விருது  கவியரசு கண்ணதாசன் நினைவாக திரு.கிருஷ்ணகுமார் என்பவரால் நிறுவப்பட்டு கோவை கண்ணதாசன் கழகம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. விருது வழங்கும் விழா கவியரசு கண்ணதாசன் பிறந்தநாளாகிய 24.06.2012 ஞாயிறு காலை 10.00 மணிக்கு கோவை கிக்கானி மேல்நிலப்ப்பள்ளி சரோஜினி நடராஜ் கலையரங்கில் நடைபெறுகிறது. திரு. இல.கணேசன் ...

வாசனைத் திரவியமே

உன்சுவாசம் என்மூச்சில் இடம்மாறுமே உன் நேசம் என்வாழ்வின் நிறமாகுமே உன் பாஷை நான்கேட்கும் இசையாகுமே உன்வாசம் என்மீது உறவாடுமே வாசனைத் திரவியமே…வா வாலிப அதிசயமே…வா நான்போகும் வழியெங்கும் நிழலாகிறாய் நான்காணும் கனவெங்கும்  நீயாகிறாய் நான்மூடும் போர்வைக்குள் துணையா கிறாய் நான்பாடும் கவிதைக்குள் பொருளா கிறாய் மன்மத மதுரசமே….வா மஞ்சத்தின் ரகசியமே…வா மீட்டாத பொன்வீணை நான்மீட்டவா சூட்டோடு சூடாக சுதிகூட்டவா தீட்டாத வண்ணங்கள் நான்தீட்டவா காட்டாத சொர்க்கங்கள் நான்காட்டவா சித்திரை முழுநிலவே…வா முத்தத்தின் முழுசுகமே…வா கையோடு நானள்ளும் நேரங்களே மெய்யோடு புயல்வீசும் வேகங்களே கொய்யாத மலர்கொய்யும் மோகங்களே பெய்யாத மழைபெய்யும் மேகங்களே மதுபொங்கும் மலர்ச்சரமே….வா புதையலில் புதுரகமே…வா ...
More...More...More...More...