நிலா வாசனை
வண்ண நிலவுக்கு வாசனை உண்டுன்னு பாடிடத் தோணுதே சின்னப்பொண்ணு -அது மின்னும் அழகினைப் பாக்குறப்போ நெஞ்சில் மின்னல் கிளம்புதே செல்லக்கண்ணு புத்தக அறிவைத் தொட்டுப்புட்டா -அது கண்ணில் தெரிகிற கோளு நித்தமும் வந்து போவதனால்-அது நம்ம வீட்டிலொரு ஆளு கண்ணன்திருடிய பாற்குடமா-கடல் தந்த அமுதத்தின் பாத்திரமா சின்னக் கொழந்தைக்கு வேடிக்க காட்டணும் மேல வரச்சொல்லு சீக்கிரமா-அத மேல வரச்சொல்லு சீக்கிரமா *சரணம்-1* ஆயிரம் ஆயிரம் காலங்களா-அது ஆகாயத்தில் நடக்குதம்மா தேஞ்சு வளரும் கணக்கிலதான் -அட சாஸ்திரம் எல்லாம் ...
சித்த பீடம்
பொன்னைத் தேடிப் பொருந்தும் ஒளிபோல் உன்னைத் தேடி உன்குரு வருவார் தன்னைத் தேடித் தனக்குள் சென்றபின் இன்னும் தேட எதுவும் இல்லையே நீண்ட கிளைகளின் நிழலுக் கடியில் மூண்ட கனல்போல் முனிவர்கள் பிள்ளை தூண்டா விளக்காய்த் தண்ணொளி பரப்ப வேண்டா இருளும் விலகி ஓடுமே ஓசையின் மௌனம் ஓங்கும் இடத்தினில் காசியின் மௌனம் காணும் தலத்தினில் பேசும் மௌனம் பொருள்கடந் தேகிட ஈசனின் மௌனம் எளிதில்கை கூடுமே காற்றின் மந்திரம் ககனம் உலுக்க ...
பாரம்பரியத் திருமடங்களும் நவீன குருமார்களும்
இந்து சமயத்தின் இணையிலா அம்சங்களில் குறிப்பிடத்தக்கவை குருபீடங்கள்.முப்பதாண்டுகளுக்கு முன்புவரை பெரும்பாலான இந்துக்கள் தங்களை ஒரு குருபீடத்துடன் இணைந்திருந்தனர். குலமரபு வழியாகவோ தீட்சை பெற்ற முறையிலோஅத்தகைய தொடர்புகள் அமைந்திருந்தன. அந்தணர்கள் சிருங்கேரி பீடத்துடனோ காமகோடி பீடத்துடனோ வழிவழியாக ஆட்பட்டிருந்தனர். சைவர்களுக்கு தருமையாதீனம்,திருவாவடுதுறை ஆதீனம், திருப்பனந்தாள் ஆதீனம்,மதுரை ஆதீனம் போன்ற தொன்மையான மடாலயங்கள் குருபீடங்கள். குருபரம்பரைக்குக் கூடுதல் முக்கியத்துவம் தரும் வைணவர்களுக்கும் தொன்மையும் பெருமையும் மிக்க ஜீயர்களின் பீடங்கள் உள்ளன. மேற்கூறிய அமைப்புகள் இன்றளவும் போதிய ஆளுமையுடனும் திகழ்கின்றன எனிலும், ...
சிதம்பரம்….நிரந்தரம்…
வானம் முழுவதும் தங்கம் வேய்ந்த வைகறை நேரம் ஒன்றினிலே தேனின் ஒருதுளி தேடி நடந்தேன் தில்லை நகரின் வீதியிலே கானம் பிறந்திட அசையும் திருவடி காணக் காண இன்பமடா ஞானம் பெருகும் ஆனந்த தாண்டவன் நம்பிய பேருக்கு சொந்தமடா மூவரும் தேடி மலரடி சூடி திருமுறை பாடிக் கனிந்தஇடம் யாவரும் காண மணிவாசகத்தை இறைவன் ஒருபடி எடுத்த இடம் தேவரும் வணங்கும் பதஞ்சலியோடு திருமூலருமே அடைந்த இடம் தாவர சங்கமம் யாவினுக்கும் இந்தத் தில்லைதானே தலைமையகம் காலம் ...
மதுரை வாராய் மகேசா
மதுரைநகர் வீதிகளில் மகேசா நீவா மறுபடியும் நெற்றிக்கண் திறக்க நீவா குதிரைவிற்க வந்தவனே கிளம்பி நீவா குடிமுழுகப் போகுதய்யா உடனே நீவா உதிரிகளை பீடத்தில் ஏற்றிவைக்க உளுத்தகட்டை துணிந்ததய்யா இறைவா நீவா புதிர்களுக்கு விடைகாணப் புனிதா நீவா பரமேசா விடையேறி விரைவாய் நீவா மாடத்தில் ஒளிர்கின்ற விளக்கின் மேலே மண்ணள்ளிப் போட்டால்தான் ஒளிரும் என்று மூடத்தின் முழுவெல்லை கண்டவர்கள் முதலறிக்கை தந்துவிட்டார் முதலே நீவா பீடத்தின் அரும்பெருமை புரிந்திடாமல் பிட்டத்தை இதுவரையில் வைத்துத் தேய்த்தோர் ஓடத்தைக் கவிழ்க்குமுன்னே ஓடி நீவா உத்தமனே உன்பெருமை காக்க நீவா ...
அபிராமி அந்தாதி – வாழ்வில் நிரம்பும் வசந்தம் – 1
1. பேசி முடியாப் பேரழகு பொன்புலரும் காலைகளிலோ,முன்னந்தி மாலைகளிலோ நெடுந்தொலைவில், ஏதோவோர் ஆலயத்திலிருந்து காற்றில் கலந்துவரும் தெய்வீக கானங்கள் சில நம்மை காலக்கணக்குகள் மறக்க வைக்கும். மற்றவற்றை விட்டு சற்றே விலகி மனம் லயிக்கச் செய்யும். அதற்குமுன் பலமுறை கேட்டிருந்தாலும் முதல்முறை கேட்கும் மலர்ச்சியைத் தரும் பாடல்கள் அவை.அவற்றில் ஒன்று, சீர்காழியின் கணீர்க்குரலில் வரும் இந்தப் பாடல்… “சின்னஞ்சிறு பெண்போலே சிற்றாடை இடையுடுத்தி சிவகங்கைக் குளத்தருகே ஸ்ரீதுர்க்கை சிரித்திருப்பாள்” முன்பின் சிவகங்கை சென்றிராத சின்னஞ்சிறுவர்களை சுற்றிலும் அமரவைத்துக் கொண்டு அங்கே போய்வந்த கதையை ஒரு பாசக்கார மாமா சொல்வதுபோல் இருக்கும் அந்தப் பாடல். வரிகளுக்கிடையிலான நிறுத்தங்களும் நிதானமும் ...