மரபின் மைந்தனின் 48 & 49 வது நூல்கள் வெளியீட்டு விழா
‘அபிராமி அந்தாதி’ – “வாழ்வில் நிரம்பும் வசந்தம்” (அந்தாதி விளக்கவுரை) மற்றும் ‘கோலமயில் அபிராமியே’ (அம்பாள் பற்றிய கவிதைகள்) கலைமாமணி. மரபின் மைந்தன் முத்தையாவின் 48 & 49வது நூல்கள் வெளியீட்டு விழா. அழைப்பிதழ் இத்துடன்….. அனைவரும் வருக …… ***ரசனை இலக்கிய முற்றம்*** ...
நாளை வெல்லும் நம்காலம்
பாண்டவர்களுடன் சற்குரு…. (ஈஷா யோகா மையத்தில் சத்குரு அவர்கள் மகாபாரதம் என்னும் நிகழ்ச்சியை பிப்ரவரி 12 முதல் 18 வரை நிகழ்த்தினார்கள். நிறைய இழப்புகளுக்கு நடுவிலும் நம்பிக்கை இழக்காத பாண்டவர்கள் மனநிலை குறித்து எழுதித் தந்த பாடல் இது. இசையமைத்துப் பாடியவர்கள் சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா குழுவினர்) நாளை வெல்லும் நம்காலம் அரண்மனை நிழலில் இருந்தாலென்ன மரங்களின் நடுவே துயின்றாலென்ன அன்னையின் மடியே ஆதாரம் அண்ணனின் சொல்லே நால்வேதம் ராஜ்ஜியம் நம்வசம் இருந்தால் என்ன? ஆரண்ய வாசம் நடந்தால் என்ன? காருண்யன் ...
சமயபுரத்தழகி
வாழ்க்கை வந்ததும் என்னவிதம்-அதில் வருபவை என்ன ரகம்? கேட்கும் கேள்விகள் அனைத்திற்கும்-பதில் கொடுப்பது சமயபுரம்! பார்க்கத் திகட்டாப் பேரழகில் -அன்னை பிரியம் வளர்க்குமிடம் தீர்க்க முடியா வினைகளெலாம்-அவள் தீயினில் எரியுமிடம் கன்னங் கரியவள் திருவிழிகள்- நமைக் காத்திடும் காலமெலாம் மின்னும் பார்வையில் மலர்ந்ததுதான்- அந்த விசும்பின் நீலமெலாம் இன்னும் எதுவரை போவதென்றே-மனம் எண்ணிடும் பொழுதுகளில் அன்னையின் திருக்கரம் வழிகாட்டும்-அங்கே ஆனந்தம் காத்திருக்கும் கோபத்தில் இருப்பதைப் போலிருக்கும்-அவள் கோலத்தைக் காண்கையிலே ஆபத்தும் சோர்வும் தொடுவதில்லை -அவள் ...
என்ன கொடுமை இது…..
திருஞானசம்பந்தர் குறித்து 700 பக்கங்களுக்கொரு நாவல் வெளிவந்துள்ளது. பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள இந்த நாவலை திரு.சோலை சுந்தரப்பெருமாள் எழுதியுள்ளார். தாண்டவபுரம் நாவலைப் படித்தபின்னர் இந்த மின்மடலை எழுதுகிறேன். திருஞானசம்பந்தரை இதைவிடக் கேவலமாக சித்தரித்து எழுத முடியாது. ஒன்றிரண்டு பகுதிகளை சுட்டிக் காட்டுகிறேன். சேக்கிழார் காட்டும் திருஞானசம்பந்தர் 3/4 வயதுக்குள்ளாக திருநனிபள்ளி செல்கிறார். திரு.சோலை சுந்தரப் பெருமாள் எழுத்திலோ பதினாறு வயது கட்டிளங்காளையாகச் செல்கிறார். திருநனிபள்ளியில் தாய்மாமன் மகளின் அழகு அவரை சலனப்படுத்துகிறது.உமா திரிபுரசுந்தரி என்று நாவலாசிரியர் உருவாக்கி ...
உயிரினில் நிறைபவன்
எத்தனை சாலைகள் இருந்தாலென்ன எல்லாம் ஒருவழிப் பாதை பித்தனும் சித்தனும் முக்தனும் சொல்லும் வார்த்தைகள் எல்லாம் கீதை கணபதி அவனே கர்த்தனும் அவனே ககனத்தின் மூலம் அவனே உருவம் இல்லாத் திருவும் அவனே உயிரினில் நிறைபவன் சிவனே ஏற்றிய சுமைகள் எத்தனை வினைகள் எல்லாம் சுமந்திட வேண்டும் மாற்றிட நினைத்து மண்ணுக்கு வந்தால் வழியினில் சுமைபெறத் தூண்டும் காற்றினை இழுத்து கடுஞ்சுமை குறைத்து கனம்விழ குருவருள் வேண்டும் தேற்றவும் ஆற்றவும் தெளிவுள்ள குருவின் துணைபெறத் திருவருள் வேண்டும் ...
சூட்சுமமாய் அவள்சொல்லும் சேதி
சூட்சுமமாய் அவள்சொல்லும் சேதி பிச்சிப்பூ மணம்வீசும் பேரழகி சந்நிதியில் பொன்னந்தி மாலையிலே நுழைந்தேன் உச்சித் திலகம்திகழ் பச்சை மரகதத்தாள் ஒளிவெள்ளப் புன்னகையில் கரைந்தேன் துச்சம்நம் துயரங்கள் தூளாகும் சலனங்கள் துணையாகும் திருவடியில் விழுந்தேன் பிச்சைதரும் பெண்ணரசி பெருங்கருணை விருந்தினிலே பேரமுதம் நான்பருகி எழுந்தேன் தூபத்தால் கலயரவர் தொழுதிருந்த கடவூரில் தூண்டாத தீபமவள் சிரிப்பு தாபத்தால் அமுதீசன் தழுவவரும் கைவிலக்கும் தளிர்நகையாள் திருமேனி சிலிர்ப்பு கோபத்தால் காலனையே கடிந்திட்ட இடதுபதம் கோமளையாள் கொண்டவொரு கொதிப்பு ஆபத்தே சேராமல் அரவணைக்கும் ...