கண்ணகி குறித்தொரு கலகல சர்ச்சை
டிசம்பர் 2011 ஓம் சக்தி இதழில் கண்ணகி மானுடப்பெண் அல்ல என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியானது. அதனை எழுதியவர் பேராசிரியர் இராம.இராமநாதன் அவர்கள். அந்தக் கட்டுரையில் பேராசிரியர், கண்ணகி மானுடப்பெண் அல்லள் என்பதால் திருமணம் நடந்தாலும் கண்ணகியும் கோவலனும் இல்லற இன்பம் துய்க்கவில்லை என்பதாக ஒரு கருத்தைப் பதிவு செய்திருந்தார். அவருடைய வாதங்களை ஓரோவழி தொகுத்து நோக்கலாம். 1) மாநகர்க்கீந்தார் மணம் என்று கோவலன் கண்ணகி திருமணத்தை இளங்கோவடிகள் சொல்கிறார். எனவே அது ஊர்மெச்ச நடந்த ...
சாம்பல் வாசனை
பாம்பின் கண்களில் பதட்டம் பார்க்கையில் பச்சைத் தவளையின் ஆறுதல் மொழியாய் தீப்பற்றும் உன் தீவிரத்தின் முன் முழக்கங்கள் முயன்று முனகவே செய்கிறேன்: காட்டு நெருப்பு கலைத்த கலவியில் உக்கிரம் பரப்பி ஓடும் விலங்காய் எல்லாத் திசையிலும் எரிதழல் பரப்பும் உன் பார்வையில் எனக்கென பனியும் சுரக்கும் அடுத்த விநாடியே அரும்பு கட்டும் – புன்னகைக்குள்ளே புதையும் எரிமலை சமதளமாகி சந்தனமாகி எரிந்த சுவடுகள் எல்லாம் தணிந்திட எழுந்து நதியாய் என்னை நனைக்கும்.. தேம்பும் எனனைத் தழுவுமுன் கைகளின் சாம்பல் வாசனை சர்ப்பத்தை எழுப்பும் நீங்கா நிழலின் நீட்டக் குறுக்கம் தீரா வியப்பைத் தருவது ...
பாவை பாடிய மூவர்
மார்கழி மாதத்தின் மகத்துவங்களில் முக்கியமானவை அறிவால் சிவமேயாகிய மாணிக்கவாசகரின் திருவெம்பாவையும், சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாம் ஆண்டாள் பாடிக் கொடுத்த திருப்பாவையும். அவற்றின் ஆன்மத் தோய்வும் பக்தி பாவமும் அளவிட முடியா அற்புதங்கள். இந்து சமயத்திற்கு சைவமும் வைணவமும் இரண்டு கண்கள் எனில் அந்தக் கண்களின் இரண்டு பாவைகளே திருப்பாவையும் திருவெம்பாவையும் எனலாம். “குத்து விளக்கெரிய, கோட்டுக்கால கட்டில்மேல் மெத்தென்ற பஞ்ச சயனத்தின்மீது கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா” என்னும் ஆண்டாளின் சொல்லோவியமும், “மாதேவன் ...
ஆதியோகி வந்தமர்ந்த ஆலயம்
ஆதியோகி வந்தமர்ந்த ஆலயம்- நம் ஞானயோகி ஆக்கிவைத்த ஆலயம் ஜோதியாக நின்றொளிரும் ஆலயம்- இதைத் தேடிவந்து சேர்பவர்க்கு ஆனந்தம் யோகமென்னும் கொடைநமக்குத் தந்தவன்-இந்த தேகமென்றால் என்னவென்று சொன்னவன் ஆகமங்கள் தாண்டியாடும் தாண்டவன் -இந்த ஆதியோகி அனைவருக்கும் ஆண்டவன் சத்குருவின் சக்திமிக்க தந்திரம்- அட சொல்லிச் சொல்லித் தீரவில்லை மந்திரம் பக்திகொண்டு பொங்கியதே நம்மனம்- அந்தப் பரமனுக்கும் இங்குவரச் சம்மதம் சாம்பசிவம் நீலகண்டன் என்றவன் -கரும் பாம்பின்நஞ்சில் பால்கலந்து உண்டவன் வீம்புகொண்டு மீண்டும்மண்ணில் வந்தவன் – நாம் வாழ்வதற்குக் காரணங்கள் தந்தவன் கண்ணெதிரே கடவுள்வந்த ...
கமலத்தாள் கருணை
தேனமுதம் அலைவீசும் தெய்வீகப் பாற்கடலில் வானமுதின் உடன்பிறப்பாய் வந்தாய்- வானவரின் குலம்முழுதும் வாழவைக்கும் மாலவனின் வண்ணமணி மார்பினிலே நின்றாய் சீதமதி விழிபதித்து செல்வவளம் நீகொடுத்து சோதியெனப் புதுவெளிச்சம் தருவாய் வேதமுந்தன் வழியாக வெண்ணிலவு குடையாக வளர்திருவே என்னகத்தே வருவாய் மூன்றுபெரும் அன்னையரின் மூளுமெழில் கருணையிலே மண்ணுலகம் இயங்குதம்மா இங்கே தோன்றுமுங்கள் துணையிருந்தால் தோல்வியென்றும் வாராது தொட்டதெல்லாம் துலங்கிடுமே நன்றே கலைமகளும் வார்த்தைதர அலைமகள்நீ வாழ்க்கைதர கவலையெலாம் நீங்கிடுமே நொடியில் மலைமகளும் சக்திதர முயற்சியெலாம் வெற்றிதர மணிவிளக்கை ஏற்றிவைப்பாய் ...
அன்னபூரணி-( நவராத்திரி – 8)
தள்ளிநிற்கும் படித்துறையைத் தாவித்தொடும் கங்கைநதி தாளமிடப் பாடுபவளாம் அள்ளிவைத்த பூக்களிடை உள்ளுறையும் விஸ்வேசன் உள்ளமெங்கும் ஆடுபவளாம் கள்ளமுற்ற நெஞ்சினையும் வெண்பளிங்காய் மாற்றியதில் கோயில்கொண்டு வாழுபவளாம் விள்ளலன்னம் கையில்விழ விம்மிவிம்மி நெஞ்சமழ வினைதீர்க்கும் அன்னையவளாம் பேசுமொழி உள்ளிருந்து பாட்டின்பொருளாயிருந்து பூரணத்தை சுட்டுபவளாம் வீசுதென்றல் ஊடிருந்து சுவாசத்திலே உட்புகுந்து சக்கரங்கள் தட்டுபவளாம்? ஆசையின்மேல் கனலுமிட்டு ஆட்டமெலாம் ஓயவிட்டு ஆனந்தமே நல்குபவளாம் காசிஅன்னபூரணியாம் தேசுடைய பேரழகி காவலென்று காக்கவருவாள் அத்தனை உயிர்களுக்கும் அன்னமிடும் தாயவளை அண்டியபின் என்ன கவலை? பித்தனை உருகவைக்கும் ...