Blog

/Blog

காலைவரை காத்திருக்க….(நவராத்திரி 7)

காலைவரை காத்திருக்கத் தேவையில்லையே-அவள் கண்ணசைத்தால் காலைமாலை ஏதுமில்லையே நீலச்சுடர் தோன்றியபின் வானமில்லையே-அவள் நினைத்தபின்னே தடுப்பவர்கள் யாருமில்லையே சொந்தமென்னும் பகடைகளை உருட்டச் சொல்லுவாள்-அதில் சோரம்போன காய்களையும் ஒதுக்கச் சொல்லுவாள் பந்தமென்னும் கம்பளத்தைப் புரட்டச் சொல்லுவாள்-இனி படுக்க உதவாதெனவே மடிக்கச் சொல்லுவாள் உள்ளபசி என்னவென்றும் உணர்ந்துகொள்ளுவாள்-அவள் உரியநேரம் வரும்பொழுதே உணவு நல்குவாள் அள்ளியள்ளி உண்ணக்கண்டு சிரித்துக்கொள்ளுவாள்-நாம் அழ அழவும் பந்தியினை முடித்துக் கொள்ளுவாள் சூத்திரங்கள் வகுத்தபின்தான் ஆடவிடுகிறாள்-அவள் சுருதியெல்லாம் சேர்த்துத் தந்து பாடவிடுகிறாள் சாத்திரங்கள் நடுவில்தன்னைத் தேட விடுகிறாள்-மனம் சாயும்போது ...

சந்ததம் தொடர்பவள் அபிராமி (நவராத்திரி – 6)

திக்குகள் எட்டிலும் தெரிந்திருப்பாள்-என் திகைப்பையும் தெளிவையும் கணக்கெடுப்பாள் பக்கத்தில் நின்று பரிகசிப்பாள்-என் பார்வையில் படாமலும் ஒளிந்திருப்பாள் நிர்க்கதியோ என்று கலங்குகையில்-அந்த நாயகி நேர்பட நின்றிருப்பாள் எக்கணம் எவ்விதம் நகருமென்றே -அவள் என்றோ எழுதி முடித்திருப்பாள் அழுதால் அவளுக்குப் பிடிக்காது-நான் அழாவிடில் தரிசனம் கிடைக்காது விழுதாய்க் கண்ணீர் இறங்குகையில்-எந்த வீழ்ச்சியும் துரோகமும் வலிக்காது தொழுதால் அவளைத் தொழவேண்டும்-அட விழுந்தால் அவள்முன் விழவேண்டும் எழுதாக் கவிதைகள் எழுதவைத்தாள்-அவள் என்னுயிர் புதிதாய் ஒளிரவைத்தாள் வாழ்க்கை நாடகம் தொடர்ந்துவரும்-அதில் வரவுகள் செலவுகள் நிகழ்ந்து ...

அடிக்கடி வருகிற காட்சி – (நவராத்திரி-5)

நாவல் பழநிறப் பட்டுடுத்தி-மின்னும் நகைகள் அளவாய் அணிந்தபடி காவல் புரிந்திட வருபவள்போல்-அன்னை காட்சி அடிக்கடி கொடுக்கின்றாள் ஆவல் வளர்க்கும் காட்சியிதும்-என் அரும்புப் பருவத்தில் தொடங்கியது வேவு பார்க்க வந்தவள்போல் -எங்கள் வீட்டு முற்றத்தை வலம்வருவாள் பின்னங்கைகளில் தவழ்கிறதே-அது பிரம்பா கரும்பா தெரியவில்லை பின்னல் இடாத மழைக்கூந்தல் -அது புரள்கிற அழகுக்கு நிகருமில்லை கன்னங் கரியவள்- ஆறடிக்குக் கொஞ்சம் குறைவாய் அவளுயரம் மின்னல், மேகத்தின் நிறங்கொண்டு-வரும் மாயத் தோற்றமாய்த் தெரிகின்றாள் கட்டிய பின்னங் கைகளுடன் -அவள் காலடி அளந்து ...

சந்நிதி வாரீரோ – நவராத்திரி கவிதை – 4

அயன்விரல் பிடித்தன்று அரிசியில் வரைந்தாள் அரிநமோத்து சிந்தம் கயல்விழி திருமுகக் கலைமகள் சிணுங்கலே கவிபாடும் சந்தம் உயர்வுற அவளருள் உடையவர் தமக்கோ உலகங்கள் சொந்தம் மயிலவள் மலர்ப்பதம் மனந்தனில் வைத்தால் வேறேது பந்தம் வெண்ணிறத் தாமரை வெய்யிலைச் சுமக்கும் விந்தையைக் காணீரோ பண்ணெனும் தேன்மழை பாதத்தில் பிறக்கும் பரவசம் கேளீரோ விண்ணவர் அமுதம் வீணெனும் அறிவின் விருந்திடம் சாரீரோ எண்ணொடும் எழுத்தெனும் சிறகுகள் தருபவள் சந்நிதி வாரீரோ ஏட்டினில் எல்லாம் எத்தனை லிபியாய் ஏந்திழை மிளிர்கின்றாள் பாட்டினில் எழுகிற பரம சுருதியில் பாரதி தெரிகின்றாள் நாட்டினில் மழலைகள் நாவினில் எல்லாம் நடனம் புரிகின்றாள் காட்டினில் பறவைகள் கூட்டினில் ...

பதங்களைத் தேடு (நவராத்திரி 3)

ஆயிரம் சூரியன் பார்வையில் சுடர்விடும் அன்னையின் திருமுகம் நிலவு தாயவள் கருணையின்பாய்படுத் துறங்கிட துன்பமும் இன்பமும் கனவு பாய்மரக் கப்பலில் போகிற பிள்ளைக்கு பயமில்லை சமுத்திர விரிவு தேய்வதும் வளர்வதும் தன்னியல் பெனும்மனம் தானாய் உணர்ந்தது தெளிவு சாமரம் வீசிடும் அரம்பையர் நடுவினில் சாகசச் சிரிப்புடன் தெரிவாள் காமனின் அம்பினைக் கைப்பற்றும் கன்னிகை குமரியில் நெடுந்தவம் புரிவாள் ஊமையின் மனதிலும் ஊற்றெழும் பாட்டுக்கு ஊர்த்துவ தாண்டவம் இடுவாள் தீமைகள் சூழ்கையில் தாவி எடுத்துதன் தாளெனும் தொட்டிலில் இடுவாள் எல்லாம் சலிக்கையில் ...

முதல்துளி அபிராமி (நவராத்திரி-2)

ஒருகுரல் கொடுத்தால் மறுகுரல் கொடுக்கும் உண்மை அபிராமி ஒருவரும் அறியாத் திசையிலும் உடன்வரும் அண்மை அபிராமி வரும்பகை எதையும் வற்றிடச் செய்யும் வன்மை அபிராமி நெருநலும் இன்றும் நாளையும் நிகழும் நன்மை அபிராமி காலனை உதைத்த கால்களும் சிவக்கும் நடனம் அபிராமி காலங்கள் உருட்டும் கைகளின் அழகிய நளினம் அபிராமி நீலமுணர்த்தும் தியானத்தின் நிறைவில் சலனம் அபிராமி தூலமும் துச்சம் என்கிற தெளிவின் தருணம் அபிராமி பட்டரின் நாவில் பதங்கள் மலர்த்தும்   புலமை அபிராமி தொட்டது துலங்க துணையென ...
More...More...More...More...