அவளே அறிவாள் (நவராத்திரி 1)
அடர்ந்த வனந்தனில் ஒற்றைத் தடம்விழும் அழகாய்-வினை படர்ந்த மனந்தனில் பைரவி நீநடை பழகாய் தொடர்ந்து வருந்துயர்க் கனலில் உருகிடும் மெழுகாய்-மனம் இடரில் கரைகையில் திடம்தனைத் தந்திட வருவாய் ஏற்றிய தீபத்தில் இளநகை செய்பவள் யாரோ-பலர் சாற்றிய மறைகளில் சாரமென்றிருப்பவள் யாரோ காற்றினில் வருகிற கீதத்தில் அவளது பேரோ-திரு நீற்றினில் தகிக்கிற நெருப்பினில் அவளெழு வாளோ காலத்தின் பேரிகை கைகளில் தாங்கினள் காளி-ஒரு மூலத்தின் மூலத்தில் மூண்டெழும் சுடரெங்கள் தேவி நீலத்தை கண்டத்தில் நிறுத்தினள் எங்களின் நீலி-இடும் ஓலத்தைக் கேட்டதும் உடன்வருவாள் திரி சூலி தாங்கிய கனவுகள் திடுமெனக் கலைகிற போது -மனம் ஏங்கிய ஏக்கத்தில் எல்லாம் கனக்கிற போது நீங்கிய உறுதியை நிர்மலை மறுபடி தருவாள்-மடி தூங்கிடச் செய்து தூக்கத்தில் விழிப்பொன்று தருவாள் ஆயிரம் பந்தங்கள் அலைபோல் வந்திங்கு போகும்-அதில் காயங்கள் இன்பங்கள் காலத்தின் போக்கினில் ஏகும் மாயங்கள் யாவையும் ...
சொல்லவா… சொல்லவா… வெண்ணிலாவே!
இசையமைப்பாளர் யானிதேஷின் இசையில் “இன்னிசைக் காவலன்” என்ற திரைப்படத்துக்காக எழுதப்பட்ட பாடல் இது…… பல்லவி: சொல்லவா சொல்லவா வெண்ணிலாவே என்னவோ என்னவோ என்கனாவே கன்னிப்பெண் ஆசைகள் ஆயிரம் நெஞ்சுக்குள் என்னவோ ஊர்வலம் சின்னதாய் மோகங்கள் ஆரம்பம் மன்னவன் அல்லவோ காரணம் சரணம்-1 யாரோடும் சொல்ல இங்கு வார்த்தையில்லை சொல்லாத போதுநெஞ்சம் தாங்கவில்லை ஆனாலும் இந்தக்காதல் ரொம்பத் தொல்லை தள்ளாடும் பாவமிந்த ஜாதிமுல்லை ஏதேதோ ஆசைபொங்க இன்பமான நடகம் உல்லாச ஊஞ்சலாடும் வாலிபம் தீராத தாகம்தீர காமன்தானே காரணம் ...
மனிதம் வாழ்க!
காலத்தால் பண்படுதல் மனித நீதி கருணைதான் நீதிக்குள் குலவும் சோதி கோலங்கள் மாறுகையில் திட்டம் மாறும் கொள்கைகள் வளர்கையிலே சட்டம் மாறும் வேலெடுத்து நாட்டியதும் வீரம் அன்று வெண்கொடியைக் காட்டுவதும் விவேகம் இன்று நூலறிவும் நுண்ணறிவும் வளரும் போது நேற்றிருந்த சட்டங்கள் இன்றைக்கேது? தூக்கிலிடும் சட்டத்தை பலதேசங்கள் தூக்கியெறிந்தே இங்கு தூய்மை ஆச்சு ஆக்கமுடன் அகிம்சையினைத் தந்த நாட்டில் அடிப்படைகள் மாற்றிவைத்தால் என்ன பேச்சு? தூக்கமில்லா சிறைவாழ்க்கை நெடுநாள் தந்தார் தொலைந்துவிட்ட காலத்தைக் கணக்கில் பார்த்தால் ஆக்கிவைத்த தண்டனையும் முடிந்த தென்று ஆணையினைத் தருவதுதான் நியாயமாகும் மூவருக்கு மட்டுமல்ல நம்தேசத்தில் மூண்டபல குற்றங்கள் புரிந்துவிட்ட யாவருக்கும் சிறைவாசம் தரலாம் ஆனால் ...
ஆதி சிவனின் அரசாங்கம்
(நீயே சொல் குருநாதா – கவிதை தொகுப்பிலிருந்து….) பெளர்ணமி நிலவின் பால்வழிந்து பாருங்கள் மலைமேல் அபிஷேகம் வெள்ளித் தகடொன்று வேய்ந்ததுபோல் வெள்ளியங்கிரியின் திருக்கோலம் அடடா அழகிய இரவினிலே ஆதி சிவனின் அரசாங்கம் வேண்டும் வரங்கள் வழங்கிடவே தியான லிங்கத்தின் திருக்கோலம் தங்கம் இழைத்த கலசத்திலே தகதகக்கிறது மேற்கூரை லிங்கம் தோன்றிய பரவசத்தில் சலசலக்கிறது நீரோடை மெளனம் பேசும் வனங்களெல்லாம் மூழ்கியிருக்குது தியானத்தில் கவிதை பாடும் பறவைகளும் கூட்டில் அடங்குது மோனத்தில் பாறையில் கசிகிற நீர்த்துளிகள் பக்தியில் இளகிடும் ...
செப்டம்பர் 3 சத்குரு பிறந்தநாள்
Sadguru பல்லவி உள்ளம் ஒன்று கொண்டு வந்தேன் உன்னை வைக்கத்தான் வெள்ளம் போலே நீநுழைந்தாய் நானும் மூழ்கத்தான் கள்ளங்கள் விழுங்கிய கனலே கனலே கண்ணெதிர் வருகிற கனவே கனவே எல்லை இல்லா இன்பம் இங்கே உன்பேர் சொல்லித்தான் சத்குரு பாதங்கள் சரணடைந்தேன் சருகெனப் போனவன் உயிர்மலர்ந்தேன் சரணம் 1 எத்தனை பிறவிகள் என்னைச் சுமந்தே எல்லாத் திசையிலும் நடந்தேனோ எத்தனை தவங்கள் எப்படிச் செய்தேன் எவ்விதம் உன்னை அடைந்தேனோ மூச்சினில் கலந்தது உன்கருணை பேச்சினில் வருவது உன்கவிதை காட்சியில் தெரிவதும் கணத்தினில் மறைவதும் கேட்டதைத் தருவதும் ...
நன்மை பயக்கும் எனின்…..
“பிள்ளையார் பெப்ஸி குடிக்கிறார் தெரியுமா? அங்கே நிக்கறேன்” செல்ஃபோன் இல்லாத காலத்தில் தங்கள் அலுவலர்கள் இடையில் உரையாடலுக்காகத் தரப்பட்டிருந்த வாக்கி டாக்கியைக் கையில் வைத்துக் கொண்டுபேசிக்கொண்டிருந்தார் தினமலர் மார்க்கெட்டிங் பிரிவில் பணிபுரிந்து கொண்டிருந்த ஐயப்பன். கோவையில் கல்கி நூற்றாண்டு விழாவிற்கு வந்த அனைவருமே அந்த சிலையை ஆச்சரியமாகவும் ஆர்வமாகவும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். மணிமேல்நிலைப்பள்ளியின் முதல் தளத்தில் கலையரங்கம். தரைதளத்தில்,அலங்காரப் பந்தலின் கீழ் சாய்விருக்கையில் சாய்ந்தபடி, படு தீவிரமாக “கல்கி” வாசித்துக் கொண்டிருந்தார் பிள்ளையார். அவர் எதிரே இருந்த ...