Blog

/Blog

வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்!-16

எழுச்சிப் பயணத்திற்கு எரிபொருள் உள்ளதா? இரு சக்கர வாகனம் ஒன்றுக்கான சமீபத்திய விளம்பரம் ஒன்று. பெட்ரோல் பங்கில் வந்து வாகனத்தை நிறுத்திவிட்டு, “அது குடுப்பா” என்பார். “எதை” என்பார் பெட்ரோல் பங்க்காரர். அதாவது, எரிபொருளையே மறந்துவிடும் அளவுக்கு எரிபொருள் சேமிக்க இந்த இரு சக்கர வாகனம் கை கொடுக்கிறதாம். உண்மையில், வாழ்க்கை என்கிற பயணத்தில் வேகமாகவும் தடையில்லாமலும் செல்ல எது நமக்கு எரிபொருள்? எண்ணங்கள்தான்! எண்ணங்கள் என்கிற எரிபொருளில் கலப்படம் இல்லாமல் இருந்தால்தான் இலட்சியத்தைத் தொடும் வேகத்தோடு ...

வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்!-15

15. முரண்பாடுகளில் இருந்து உடன்பாடு நோக்கி… மனித மனங்களில் அதிக பட்சம் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடியவை எவையென்று தெரியுமா? மற்றவர்களுடனான முரண்பாடுகள்தான். நம்முடைய கருத்துக்கு எதிராக ஒருவர் எதையாவது சொல்லிவிட்டால் முதலில் மெதுவாக மறுக்கிறோம். வாதம் தொடரத் தொடர உடல் பதறுகிறது. ரத்தம் கொதிக்கிறது. மூளை சூடாக வார்த்தை தடிக்கிறது. அந்தப் பதற்றம் பல மணி நேரங்களுக்கு நம்மைப் புரட்டிப்போடுகிறது. அது மட்டுமா? மீண்டும் அந்த மனிதரைப்பற்றி யோசித்தாலோ, எங்காவது பார்த்தாலோ நம்மை மறுபடியும் அதே பதற்றம் ஆட்டி ...

வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்!-14

எங்கிருந்து வருகின்றன எதிர்மறை எண்ணங்கள்? ஒரு செயலைத் தொடங்கும்போது, வெளியிலிருந்து வரும் எதிர்ப்புகளைக்கூட கையாள முடியும். உங்களுக்குள்ளேயே எழுகிற எதிர்ப்புகளைக் கட்டுப்படுத்தாவிட்டால் அவை எதிர்மறை எண்ணங்களாக உங்களுக்குள் பதிந்துவிடும். எதிர்மறை எண்ணங்கள் அடிமனதில் பதிவாகும்போது, அவை உங்களைப் பற்றிய பலவீனமான ஒரு பிம்பத்தை உங்களுக்குள் ஏற்படுத்துகின்றன. அவை, அந்தப் பிம்பத்தைத் திரும்பத் திரும்பக் காட்டி, அந்தப் பலவீனத்தை உங்கள் ஆளுமையின் ஓர் அங்கமாகவே மாற்றிவிடுகின்றன. உங்கள் ஆளுமையில் அந்த பலவீனமான அம்சம் இருந்தால், உங்களை சரியாக செயல்படவிடாது. ...

வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்!-13

கடவுளை வணங்கினால் காசு கிடைக்குமா? கடவுளைக் கும்பிடுபவர்கள் இரண்டு வகை. பயன் கருதாமல் கடவுளை வணங்க வேண்டும். தேவைகளின் பட்டியலைத் தூக்கிக்கொண்டு கோவிலுக்குப் போகக்கூடாது. இது சிலரின் வாதம். கடவுள் நம் பிரார்த்தனைகளுக்குக் காது கொடுப்பார். நாம் கேட்பதெல்லாம் கொடுப்பார். எனவே, தேவைகளைக் கேட்டால் தவறில்லை. இது இன்னும் சிலரின் வாதம். இந்த இரண்டில் எது சரி? முதலில், கடவுளிடம் பிரார்த்திப்பது என்றால் என்ன என்பதைப் பார்க்கலாம். கடவுள் என்று கூறினாலும் சரி, இயற்கை என்று கூறினாலும் ...

வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்!-12

மாற்றம் ஒன்றே முன்னேற்றம்! அந்த முதல் குரங்கு மட்டும் மனிதனாய் மாற மறுத்திருந்தால், இத்தனை முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்குமா என்ன? பழைய அணுகுமுறைகளையும், நம்பிக்கைகளையும் குரங்குப்பிடியாய்ப் பிடித்துக் கொண்டிருப்பவர்களைப் பார்த்து இந்தக் கேள்வியைக் கேளுங்கள். அப்புறம் அவர்களுக்குச் சொல்லுங்கள்… மாற்றம் ஒன்றே முன்னேற்றம்! புறாக்களில் கட்டி அனுப்பிய கடிதம் ஃபேக்ஸில் பறப்பது முதல், கல்லில் எழுதிய மனிதன் கணிப்பொறியில் எழுதுவது வரை, எல்லா முன்னேற்றங்களுமே முதல் மாற்றத்தை அனுமதித்ததால்தான் ஆரம்பமானது. இன்று வந்திருக்கும் நவீன கருவிகள் எல்லாம் அதிசய ...

வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்!-11

முதல் வெற்றிக்குப் பிறகு… முதல் வெற்றி கொடுக்கும் மனத்துணிவு, அபாரமானது. பாராட்டு மழை, பணம், புகழ் என்று முப்படைகளும் அணிவகுத்து மரியாதை செய்யும்போது, குதூகலத்திற்குக் கேட்கவா வேண்டும்? நிற்க முடியாத அளவு வெற்றியின் கனம் அழுத்தும் நேரத்தில், இதைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமே என்ற எச்சரிக்கை உணர்வு ஏற்பட்டவர்களுக்கு முதல் வெற்றியே முன்னேற்றப் பாதை. அந்த உணர்வை இழந்தவர்களுக்கு முதல் வெற்றியே மூழ்க வைக்கும் போதை! ஓங்கி ஒலிக்கும் பாராட்டுக் குரல்களுக்கு நடுவே, “இப்போதுதான் எச்சரிக்கையாய் இருக்க ...
More...More...More...More...