Blog

/Blog

எது குற்றம்? எது சட்டம்?

“தலைவர் மாறுவர் ! தர்பார் மாறும்! தத்துவம் மட்டும் அட்சய பாத்திரம்” என்றார் கவியரசு கண்ணதாசன். ஒரு கட்சியின் ஆட்சியில் தலைவர்களும் தர்பார்களும் மாறலாம். தத்துவம்மாறலாமா? மாறலாம் என்கிறது காங்கிரஸ். இலங்கை மீதான போர்க்குற்றத்தை இலங்கையே பார்த்துக் கொள்ளும், விசாரித்துக் கொள்ளும் என்கிறார் எஸ்.எம்.கிருஷ்ணா. அப்படியானால் அவர் அங்கம் வகிக்கும் காங்கிரஸின் ஆட்சியில்சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய அமைதிப்படை இலங்கைக்குப் போனது ஏன்? தன்னுடைய பிரச்சினையை இலங்கையே பார்த்துக்கொள்ளும் என்ற நிலைப்பாட்டை ஏன் அப்போது எடுக்கவில்லை? இலங்கையின் ...

உளிகள் நிறைந்த உலகமிது – 15

எந்தத் துறையில் இருந்தாலும் அந்தத் துறை சார்ந்த நல்ல புத்தகங்கள் கையில் கிடைப்பதும் ஒருவகை கொடுப்பினைதான். அப்படியொரு கொடுப்பினையின் பேரில் எனக்குக் கிடைத்த புத்தகங்கள் ஓ&எம் என்று அழைக்கப்படும் விளம்பர நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான டேவிட் ஒகில்வியின் இரு புத்தகங்கள். ஓகில்வி ஆன் அட்வர்டைசிங் மற்றும் தி அன்பப்ளிஷ்ட் டேவிட் ஒகில்வி. இவை கல்லூரிப் பருவத்தில் எனக்குக் கிடைத்த புத்தகங்கள். நல்ல வேளையாக பாடமாக இல்லை. டேவிட் ஒகில்வி (David Ogilvy) இவை சமைத்துப் பாருங்கள் வகையறா ...

கமலாம்பா

(17.08.2011.திருவாரூர் கமலாம்பிகை சந்நிதி .இரவு 9 மணி.தரிசனத்துக்கு வந்திருந்ததொரு தளிர்.இரண்டு கமலாம்பிகைகளின் இணைந்த தரிசனம்) சந்நிதி முன்வந்த சின்னஞ் சிறுமியின் கண்களில் கமலாம்பா பொன்னிதழ் மின்னும் புன்னகைச் சுடரில் பொலிந்தவள் கமலாம்பா மின்னல்கள் விசிறும் தாடங்க அசைவில் மிளிர்ந்தவள் கமலாம்பா என்னெதிர் நின்றவள் என்னுள் புகுந்தவள் இவள்தான் கமலாம்பா சிற்றாடைக்குள் சித்த சொரூபமாய் சிரித்தவள் கமலாம்பா உற்றார் நடுவினில் உறவின் கனிவாய் உதித்தவள் கமலாம்பா கற்றார் கல்வி கனிந்தே உருகக் கனிந்தவள் கமலாம்பா பெற்றார் உடனே பிள்ளை ...

உளிகள் நிறைந்த உலகமிது – 14

வாடிக்கையாளர்களின் உணர்வுகளும் அபிமானங்களும் விளம்பரங்களின் அடித்தளங்கள்.ஒரு மனிதனை அறிவு ரீதியாய் அணுகுவதை விட உணர்வு ரீதியாய் நெருங்குவது மிகவும் எளிது. பார்த்த மாத்திரத்தில் புன்னகையை உருவாக்குவது வெற்றிகரமான விளம்பரத்தின் இலக்கணம். மனிதனின் மென்னுணர்வுகள் நோக்கி வீசப்படும் எந்த மலரையும் யாரும் புறக்கணிப்பதில்லை. திருமணம், குழந்தை வளர்ப்பு கிரஹப்பிரவேசம் போன்ற சந்தோஷமான சூழல்களை மையப்படுத்தும் விளம்பரங்கள் வெற்றிபெற இதுதான் காரணம். தனியார் தொலைக்காட்சிகள் அதிகமுள்ள இந்தக் கால கட்டத்தில் இத்தகைய விளம்பரங்களை உருவாக்குவது எளிது மட்டுமல்ல. அவை வெகு ...

உளிகள் நிறைந்த உலகமிது – 13

புதியமுத்தூரிலிருந்து ஒருவர் என்னைச் சந்தித்தார். தன்னை அவர் அறிமுகப்படுத்திக் கொண்ட விதமே அலாதியானது.”வணக்கம் சார்! என் பேரு கணேசன். தமிழாசிரியர். எங்க ஊர்லே பெரிய ஆளுங்ககிட்டே நன்கொடைகள் வாங்கி, எலக்கிய விழாக்கள் விடாம நடத்தறேன். எங்கூர்லே கூட கேப்பாங்க..உம்ம பேரு கணேசனா? டொனேசனான்னு”. நன்கொடை வாங்கப் போகிறவர்கள் கையில் எலுமிச்சம்பழம் கொண்டு போவது வழக்கம். அதற்குக் காரணம் மரியாதை மட்டுமல்ல. அங்க இலக்கண சாஸ்திரமும் அதிலே இருக்கிறது. சந்திக்கப்படும் பெரிய மனிதர் எலுமிச்சம்பழத்தை கைநீட்டி வாங்கும்போது மணிக்கட்டின் ...
More...More...More...More...