உளிகள் நிறைந்த உலகமிது – 8
உருவாக்கத்திலும் உள்ளடக்கத்திலும் புதுமை இருந்தால் போதாது என்பார் கணேஷ் பாலிகா. உருவானதை முன்வைப்பதிலும் அதே புதுமை அவசியம் என்று நினைப்பார். படைப்பாக்க முன்வைப்பு Presentation என்பது, விளம்பர நிறுவனங்களைப் பொறுத்தவரை ஒரு பெரிய வைபவம். எனக்குத் தெரிந்து க்ளையண்ட்டின் இடத்திற்குப் போவதை விட தங்கள் இடத்திற்கு அவர்களை அழைத்து புதுமையான ஏற்பாடுகள் செய்வதில் கணேஷ் பாலிகா கைதேர்ந்தவர். ஒருமுறை உணவகம் ஒன்றின் விளம்பரங்களுக்கான முன்வைப்பு சந்திப்பை அவர் மிகப் புதுமையாகத் திட்டமிட்டார். அலுவலக மொட்டை மாடியிலேயே உணவகச் ...
உளிகள் நிறைந்த உலகமிது-7
தொழில்நுட்பத் தகவல்கள் சார்ந்த செய்திப்படம் ஒன்றை சுவாரசியம் மிக்கதாக்க வேண்டுமென்றால் அதில் பிரபலங்களை சேர்க்கலாம் என்பது முதல் விதி. பிரபலங்களை சேர்க்கும் அளவு பட்ஜெட் இல்லையென்றால் பிரபலங்களின் சாயலில் உருவாக்கலாம் என்பது இரண்டாவது விதி. இதற்கு காபிரைட் விதிகளும் இடம் கொடுப்பதுதான் முக்கியமான விஷயம். கட்டிடத்திற்கு எந்த சிமெண்ட்டை உருவாக்கலாம் என்று தீர்மானிக்கும் சக்திகள் யார் யார் என்ற ஆய்வில் நான்குபேர் அந்த முடிவை எடுக்கிறார்கள் என்பதைச் சுற்றித்தான் செய்திப்படத்தின் கரு இயங்க வேண்டும். அதற்கு ராம்கி ...
உளிகள் நிறைந்த உலகமிது – 6
தொண்ணூறுகளின் தொடக்கம், காட்சி ஊடகங்களின் ஆட்சி தொடங்கிய காலம். தனியார் தொலைக்காட்சிகள் தலையெடுக்கத் தொடங்கிய நேரம். தொலைக்காட்சி விளம்பரங்களை உருவாக்கும் பணிகளிலும் பிஃப்த் எஸ்டேட் நிறுவனம் ஈடுபட்டது. சசியில் இருந்தபோது, காட்சி ஊடகங்கள் மூலம் கவனம் ஈர்க்கும் விளம்பரங்களை உருவாக்குவதில் கைதேர்ந்தவரான சந்திரசேகர் துடிப்பும் துள்ளலுமாக பல வெற்றிகளைக் குவித்துக் கொண்டிருந்தார். நடிகை ஹீராவைக் கொன்டு தயாரிக்கப்பட்ட ஏவிடி பிரீமியம் டீக்கான “பார்த்தீங்களா! பார்த்தீங்களா!, கேட்டீங்களா! கேட்டீங்களா! சாப்டீங்களா? சாப்டீங்களா?”என்ற விளம்பரம் பெரும்புகழ் பெற்றது. அப்போது சசியில் ...
உளிகள் நிறைந்த உலகமிது-5
கடிதம் எழுதியவர் கணேஷ் பாலிகா என்றாலும், சென்னை மாபோஸேல் நிறுவனத்திலிருந்து அவர் எனக்கு எழுதவில்லை. அவர் கையொப்பத்திற்குக் கீழே மேனேஜிங் டைரக்டர்-பிஃப்த் எஸ்டேட் கம்யூனிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்று இருந்தது. நேரில் வரசொல்லி எழுதியிருந்தார். மா போஸேல் சென்னையில் சந்திக்க முடியாததில் வியப்பில்லை. முன்னனுமதி பெறாமல் போயிருந்தேன். இப்போது வேறொரு முகவரியில் இருந்து வரச்சொல்லி கடிதம் போட்டிருக்கும் மர்மமென்ன? நேரில் போனபோதுதான் விஷயம் விளங்கியது. என்னுடன் நேர்காணல் மேற்கொண்ட பிரசாத் பரவசமாய் என்னைப்பற்றிச் சொல்லி, “உங்களை சந்திக்க ...
உளிகள் நிறைந்த உலகமிது-4
ஆடிய காலும் பாடிய வாயும் நிற்காது என்பார்கள்.எ ழுதிய கையும் அப்படித்தான். விளம்பர எழுத்தாளராய் வாழ்வை நடத்துவது ஒருவகையில் சுகமானது. ஒற்றைப்பொறி தட்டி ஒரு கருத்துரு தோன்றிவிட்டால் நல்ல பணம். சிரமமில்லாத வேலை. பிடி கிடைக்கும் வரை பிடிவாதமாக இருந்துவிட்டால் நிலைகொண்டுவிடலாம். இந்த நம்பிக்கை ஆழமாக இருந்தது. உள்ளூர் விளம்பர நிறுவனங்களில் நல்ல தொடர்பும் இருந்ததால் சமாளித்துவிடலாம் என்று தோன்றியது. அந்தப் பருவத்தில் சம்பாதித்து வீட்டுக்குப் பணம் தர வேண்டிய அவசியமில்லை.எனவே சுதந்திரமாய் பரிசோதனை முயற்சிகளை மேற்கொள்ள ...
உளிகள் நிறைந்த உலகமிது-3
கோவையில் நான் எழுதிய தமிழ் விளம்பரங்கள் பரவலான கவனிப்பைப் பெற்றன. பொதுவாகவே,பெரிய நிறுவனங்களின் விளம்பர உருவாக்க வாய்ப்புகளைப் பெற, விளம்பர நிறுவனங்கள் போட்டி போடுவதுண்டு. தாமாகவே முன்வந்து விளம்பர டிசைன்களை உருவாக்கி வணிக ஒப்பந்தம் பெற முயல்வதும் உண்டு. அதற்கு ஸ்பெகுலேடிவ் கேம்பெய்ன் என்று பெயர். சக்தி குழுமங்களின் அங்கமான சக்தி நிதி நிறுவனம்,ஆறு ஆண்டுகளில் நூறுகோடி ரூபாய்களுக்கான வணிகநிலையை எட்டியிருந்தது. இதற்காக சசி விளம்பர நிறுவனம், ஸ்பெகுலேடிவ் கேம்பெய்ன் ஒன்றை மேற்கொண்டது. அந்தத் தொடர் விளம்பரத் ...