உளிகள் நிறைந்த உலகமிது-2
விளம்பரங்கள் எழுதுகிற வேலைக்கு காப்பி ரைட்டர் என்று பெயர். சினிமாவில் திரைக்கதை/காட்சி அமைப்பு/ வசனம் எழுதுவதை ஸ்க்ரிப்ட் என்று சொல்வதுபோல விளம்பரங்கள் எழுதுவதை காப்பி என்று சொல்கிறார்கள். பார்த்து எழுதுவது என்றும் படியெடுத்து எழுதுவது என்றும் தவறாகப் புரிந்து கொள்ளப்படக்கூடியஅத்தனை அபாயங்களும் அந்தப் பெயருக்கு உண்டு. அவ்வளவு பெரிய நிறுவனத்தில் ஜெராக்ஸ் மெஷின் இல்லையா?அதற்கென்று ஆள் வைத்திருக்கிறார்களே என்று கவலையுடன் என்னைக் கேட்டவர்கள் உண்டு. தினம் மாலை 4-6 வேலை நேரம்.மாதம் 750/ரூபாய் சம்பளம் என்றதும் எனக்கு ...
உளிகள் நிறைந்த உலகமிது – 1
“அந்தப் பையனையே வரச்சொல்லீடுங்களேன்”. இப்படித்தான் எங்கள் பள்ளித் தலைமையாசிரியர் சொல்லியிருக்க வேண்டும்.எனக்கு அழைப்பு வந்தது.உடனே நீங்கள் நான் பள்ளி மாணவனாக வகுப்பில் இருந்தபோது பள்ளி உதவியாளர் வந்து “தலைமையாசிரியர் அழைக்கிறார்”என்று சொன்னதாய் எண்ணினால் அது தவறு. நான் அப்போது பி.எஸ்.ஜி.கலை அறிவியல் கல்லூரியில் மாஸ் கம்யூனிகேஷன் முதுகலை படித்துக் கொண்டிருந்தேன். ஏழாம் வகுப்புவரை ஏ.எல்.ஜி.மெட்ரிகுலேஷன் பள்ளியிலும்,அதன்பின் மணி மேல்நிலைப் பள்ளியிலும்படித்தேன்.ஐந்தாம் வகுப்போ ஆறாம் வகுப்போ படிக்கும்போது, கவிதை என்று கருதி நான் எழுதிய சில வரிகளை வகுப்பில் ...
அடையாளம்
ரயிலில் என் பக்கத்து இருக்கையில் அந்தப் பெரியவர் அமர்ந்திருந்தார் என்றுதான் முதலில் நினைத்தேன்.உண்மையில் அந்த இருக்கையில் அவர் ஒரு தம்பூரைப்போல் சாய்த்து வைக்கப்பட்டிருந்தார்.சீரான இடைவெளியில் அவரிடமிருந்து ஹ்க்கும் ஹ்க்கும் என்று சுருதி சேராத முனகல்கள் வெளிப்பட்டுக் கொண்டிருந்தன. அடுத்த இருக்கையில் அவருடைய மனைவி.இவருக்கு வயது எண்பத்தைந்துக்கு மேலிருக்கும்.அந்த அம்மையாருக்கு எழுபது வயதிருக்கும். ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒரே வரிசையில் இடம்தரலாகாது என்னும் ரயில்வே விதிகளின்படி என்னிடமிருந்து இரண்டு மூன்று இருக்கைகள் தள்ளி அவர்கள் குடும்பத்தினர் இருந்தனர். திடீரென்று ...
கண்ணதாசன் விருதுகள்-2011
கோவையில் இயங்கி வரும் கண்ணதாசன் கழகம் சார்பாக 2011 ஆம் ஆண்டுக்கான கண்ணதாசன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எழுத்தாளர் திரு.எஸ்.இராமகிருஷ்ணன் அவர்களும், கவியரசர் கண்ணதாசனின் உதவியாளரும்-“என் அண்ணன் கண்ணதாசன்” நூலின் ஆசிரியருமான திரு.இராம.முத்தையா அவர்களும் விருதுகள் ஏற்கின்றனர். ரூ.50,000/ பணமுடிப்பும்,பட்டயமும் கொண்ட இந்த விருதுகளை, இலக்கிய ஆர்வலர் திரு.கிருஷ்ணக்குமார் தன் சொந்தப் பொறுப்பில் வழங்கி வருகிறார். இந்த விருதுகள் 26.06.2011 ஞாயிறன்று கோவை மணிமேல்நிலைப்பள்ளி நானி கலையரங்கில் நிகழவுள்ள முழு நாள் விழாவின்போது வழங்கப்படவுள்ளன. 2009 ஆம் ஆண்டுக்கான ...
இங்கே அவர்கள் இருந்தார்கள்
கைரேகை படிந்த கல் கவிதை நூலின் ஆசிரியர் யாழி,அவ்வப்போது குறுஞ்செய்திகளாய் சில கவிதைகள் அனுப்புவார். பெரும்பாலும் அவருடைய கவிதைகள்.மற்றபடி அவர் ரசித்த வரிகள்-யார் எழுதினார் என்ற குறிப்புடன். எனவே அவர் அனுப்பும் குறுஞ்செய்திகளை, “இது யார் கவிதை”என்று அறிந்து கொள்ள முதலில் கீழே பார்ப்பேன். இன்று காலை அவர் அனுப்பிய குறுஞ்செய்தியில் க.முருகனுக்கு கண்ணீர் அஞ்சலி என்ற குறிப்பும் இருந்தது.யாழியை அழைத்து , க.முருகன் யாரென்று கேட்டேன். திண்டுக்கல்லை சேர்ந்த இளைஞராம். குறுஞ்செய்தியில் கவிதை அனுப்பும் வட்டத்தைச் ...
அந்த ரசிகர்கள் அப்படித்தான் -எஸ்பிபி குட்டி-நூல் விமர்சனம்
இசை,இலக்கியம்,இயக்கம்.இந்தத் திரிவேணி சங்கமத்தில் கால் நனைத்துசில சமயம் கடலிலிறங்கி,அலைகள் காலுக்குக் கீழ் பள்ளம் பறிப்பதைப்போல் உணர்ந்தால் கரைக்கு வந்து சுண்டல் சாப்பிட்டபடியே ஏக்கமாய்முக்கடலின்உப்புக்காற்றுக்கு முகங்காட்டி அமரும் விதமாகத்தான் கோவை மாவட்டத்தில் பெரும்பாலான இளைஞர்களின் வாழ்க்கை அமைந்திருந்தது. ஆலைப்பணியாளர்கள் குடும்பத்திலிருந்து வந்த காரணத்தால் மார்க்சீயப் பார்வையும்,அரையிரவு-முழு இரவு பணிநேர மாற்றங்கள் தரும் போதிய கால அவகாசமும்,அதிலெழுந்த வாசிப்புப் பழக்கமும், தொலைக்காட்சி முழு ஆட்சி செய்யாத எண்பது-தொண்ணூறுகளில் இடையறாமல் கேட்டுக்கொண்டிருந்த திரையிசையும் சேர்ந்து ஒரு ரசிகனாய், ஒரு படைப்பாளனாய், சமூக ...