Blog

/Blog

நிகழ்வதாகுக

கதவைத் திறந்து கோடை நுழைந்து கனலால் கோலம் போடும் நேரம் மதகைத் திறந்து பெருகும் வியர்வை முதுகில் பாடும் கவிதை ஈரம் கண்னை உறுத்தும் காலை வெய்யில் மண்ணைக் கொளுத்தும் மதிய வெய்யில் சாலை தகிக்கும் மாலை வெய்யில் காலம் சுருளும் இரவின் கையில்! தாகம் எடுத்த தாவர வகைகள் ஈழத் தமிழராய் எரிந்து கருகும்! விரித்த பாயை சுருட்டியதைப் போல் வறண்ட நீர்நிலை வாடிச் சுருங்கும் தேகம் வற்றிய கணிகையின் மீது மோகம் வற்றிய வாடிக்கையாளனாய் ...

கள்ள ஓட்டு போட்டேன்

“அண்ணே ! எங்க கட்சிக்கு ஓட்டு போட்டுடுங்க!” உறவோடும் உரிமையோடும் கேட்ட அந்தக் கட்சித் தொண்டர் எனக்கு நன்குஅறிமுகமானவர்.எப்போதும் லுங்கியிலும் எப்போதாவது எட்டுமுழ வேட்டியிலும் தென்படுவார்.தழையத் தழைய எட்டுமுழ வேட்டியில் எதிர்ப்பட்டால் கட்சி வேலையாய் வெளியே போகிறார் என்று பொருள்.கான்ஸ்டபிள் யாராவது எதிரே வந்தால், வணங்கிவிட்டு, மரியாதையி ன் அடையாளமாய் தன் வேட்டியின் முன்புறத்தைப் பற்றிக் கொண்டு ஒதுங்கி நிற்பார். வீடுகளுக்கு வண்ணம் பூசுவது, தண்ணீர் குழாய்களைப் பழுது பார்ப்பது என்று பலவிதமான வேலைகள் பார்ப்பார் என்றாலும் ...

அவள் ஒரு தொடர்கதை

குணச்சித்திர வேடம் என்று சொன்ன மாத்திரத்தில் நம் நினைவுக்கு வருகிற முகங்களில் நடிகை சுஜாதாவின் முகமும் ஒன்று. தளும்பாத உணர்ச்சிகளும் தரமான நடிப்பும் அவருடைய பலங்கள். அளந்து ஊற்றின மாதிரி அளவான முகபாவங்களைக் காட்டக்கூடியவர் சுஜாதா. காதல் காட்சிகளில் கூட நாணமோ, மோகமோ பொங்கி வழிந்ததில்லை. அதீத  முகபாவனைகளால் சில  நடிகைகள் படுத்தியெடுப்பார்கள். அப்படியொரு நடிகை பற்றி ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளர் திரு கிருஷ்ணன்  ஒருமுறை   சொன்னார், “அந்த அம்மா பாட்டுப் பாடி நடிச்சா கண்ணை மூடீட்டு பார்க்கலாம் சார்”. மிகையம்சம் இல்லாத மிதமான நடிப்பு சுஜாதாவின் சிறப்பம்சம். நிறைய பாடல்களை வானொலியில் கேட்டு நமக்குள் சில கற்பனைகள் வரும். அந்தக் கற்பனைகளுக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாத காட்சி அமைப்பைக் கண்டால்  “சப்” பென்று ...

அம்பின் கண்ணீர்

கூடு திரும்பிய பறவையின் மனதில் நிரம்பிக்கிடக்கும் ஆகாயம்போல் நிர்மலமாய் இருந்தது இராமனின் திருமுகம். சிரசை அலங்கரித்த மகுடமும் திசைகளை அதிரச்செய்த எக்காளமும் அன்னையர் தூவிய அட்சதைகளும் அந்த நிர்க்குணனைச் சலனப்படுத்தவில்லை. வசிட்ட மகான் வாழ்த்திய மொழிகள் எந்தக் கிளர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை. தார்கள் அலங்கரித்த தடந்தோள்களில் மீதமிருந்தது அனுமனின் அணைப்பில் விளைந்த சிலிர்ப்பு. ஒரு குழந்தையின் தீண்டல் மென்மையும் தந்தையின் பரிவும் பக்தனின் பணிவும் கலந்த கலவையாய் அமைந்திருந்தது அனுமனின் தொடுகை. “பொருந்துறப்புல்லுக” என்று தான் அழைத்தபோது இராம ...

காட்டுச் சுனை

சித்திரம் தீட்டிட விரும்பிவந்தேன் -திரைச் சீலையில் உன்முகம் தெரிகிறது எத்தனம் இன்றியென் தூரிகையும்-உன் எழில்முகம் தன்னை வரைகிறது எத்தனை தேடல்கள் என்மனதில்-அவை எல்லாம் குழைத்தேன் வண்ணங்களாய் நித்திலப் புன்னகை தீட்டுகையில்-அந்த நிலவொடு விண்மீன் கிண்ணங்களாய்!! கண்களின் பாஷைகள் வரைவதற்கு-அந்தக் கம்பனின் எழுதுகோல் வாங்கிவந்தேன் பண்ணெனும் இன்சொல் வரைவதற்கோ-நல்ல புல்லாங்குழலொன்று கொண்டுவந்தேன் மண்தொடும் புடவை நுனிவரைய-அந்த மன்மதன் அம்புகள் தேடிவந்தேன் பெண்ணுன்னை முழுதாய் வரையவென்றே-இந்தப் பிறவியைக் கேட்டு வாங்கிவந்தேன் பொன்னில் நனைந்தநல் வளைவுகளும்-எனைப் பித்தெனச் செய்யும் அசைவுகளும் மின்னில் எழுந்தவுன் ...

தோடுடைய செவியள்

 நிசப்தம் நிறைந்த அரங்கத்தில் தம்பூரின் மீட்டலாய்த் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தது அந்தக் குழந்தையின் அழுகை.தாங்கொணா அமைதிக்கொரு மாற்றாய்,மெல்லிய இசையின் கீற்றாய் ஒலித்த அந்தக் குரலுக்குரிய குழந்தைக்கு மூன்று வயதிருக்கும்.எத்தகைய சதஸில் தாம் இடம்பெற்றிருக்கிறோம் என்பதை அறியாப் பருவமென்று தமக்குள் சிரித்துக் கொண்டனர் அவையோர்.மன்னிக்க.சபையோர். இராம சரித்திரம் எத்தனை மொழிகளில் எழுதப்பட்டாலும் அத்தனை மொழிகளிலும் படித்து,கரைத்துக் குடித்து,ஒரு படலம் கூட பாக்கி வைக்காமல் செரித்து,விருந்துக்குப் பின்னர் புசிக்கும் பலமூல வகைகள் போல் உபநிஷதங்களையும்,அதன்பின் பருகும் பால் போல் தோத்திர நாமாவளிகளையும்,தரிக்கும் தாம்பூலம் போல் சில தமிழ்ப்பாடல்களையும் உட்கொண்டு,அவற்றின் சங்கமத்தை ஏப்பமாய் வெளிப்படுத்தும் ஏழிசையாசி,சண்டப் பிரசண்ட பிரசங்க சக்ரவர்த்தினி, அருளானந்த மேதா சரஸ்வதியின் உபந்யாசக் கூடம் அது. எந்த விநாடியும் ...
More...More...More...More...