மண்ணாந்தை
நுண்மான் நுழைபுலம் என்ற சொற்றொடருக்கு சத்திய சாட்சியாக விளங்குபவர் பெரும்புலவர் பா.நமசிவாயம் அவர்கள். மதுரை அருகிலுள்ள திருப்புத்தூரில் வாழ்ந்து வருகிறார்.மற்றவர்களை வேண்டுமானால் வசித்து வருகிறார் என்று சொல்லலாம்.இவரை வாழ்ந்து வருகிறார் என்றுதான் சொல்ல வேண்டும். விநாடிக்கு விநாடி,வாழ்வை ரசித்து வாழ்பவர் அவர்.பெரும்புலவர்.பா.நமசிவாயம் அவர்களை நடுவராகக் கொண்டு,பேராசிரியர் சாலமன் பாப்பையா,பேராசிரியர் சோ.சத்தியசீலன் போன்றோர் அணித்தலைவர்களாகப் பேசி வளர்ந்தார்கள். பெரும்புலவரின் மிகப்பெரிய பலங்களில் ஒன்று,நுட்பமான நகைச்சுவை.எப்போதும் சிரித்த முகமும் கூப்பிய கைகளுமாய் வரவேற்பார்.பேராசிரியர் அன்பழகனின் ஜாடை இருக்கும். அவருடைய நேரடி மாணவரும் கூட.இவர் வாழ்ந்து ...
யார் சொல்வது?
யாருக்கும் தெரியாத திசையொன்றிலே-எந்த யாழோடும் பிறவாத இசைகேட்கிறேன் வேருக்கும் தெரியாமல் பூப்பூத்ததே-அதன் வாசத்தை மறைக்கத்தான் வழிபார்க்கிறேன் நான்மட்டும் என்னோடு உறவாடியே-பல நாளல்ல,வருடங்கள் கழிந்தோடின வான்முட்டும் மகுடங்கள் வரும்போதிலும்-அந்த வலிநாட்கள் மனதோடு நிழலாடின தழும்பில்லாக் காயங்கள் நான்கொண்டது- அவை தருகின்ற பாடங்கள் யார்கண்டது எழும்போதும் எங்கேயோ வலிக்கின்றது-அது எதனாலோ இதமாக இருக்கின்றது இவன்மூடன் எனச்சொன்ன காலமுண்டு-பின் இளம்மேதை எனச்சொன்ன காலமுண்டு சிவனென்ன சொல்வானோ அறியேனம்மா-என் சிறுமைகள் பெருமைகள் உணரேனம்மா பொல்லாத அச்சத்தில் இரவெத்தனை-அட பொய்யான கனவான உறவெத்தனை நில்லாத ஏக்கத்தில் நினைவெத்தனை-இதில் நிஜமாக நான்வாழ்ந்த ...
மீட்டர் இல்லாத வாழ்க்கை
கஸ்தூரிமான் படத்தில் பாதிரியார் வேடத்தில் நடித்த போது இருசக்கர வாகனம் ஓட்டுவதுபோல் ஒரு காட்சி. மலையாளப்படத்தில் பாதிரியார் ஓட்டியது ஸ்கூட்டரா மோட்டார்பைக்கா என்று தெரியவில்லை.இந்த சந்தேகத்தை ஜெயமோகனிடம் கேட்டபோது எப்போதும் போலவே “அப்படியா?”என்றார். பிறகு இணை துணை இயக்குநர்களிடம் கேட்டபோது “அது டி வி எஸ் 50 சாரே” என்றார்கள். கொஞ்சம் ஆசுவாசமாக இருந்தது. சைக்கிளுக்குப் பிறகு ஓரளவு ஓட்டிப் பழகியிருந்த வாகனம் அதுதான். ஒருவேளை ஸ்கூட்டர்,மோட்டார்பைக் என்றிருந்தால் டூப் போட வேண்டி வந்திருக்கும். என் பங்குதாரர் வேணுகோபாலிடம் ஒரு டி வி எஸ் 50 இருந்தது. படப்பிடிப்புக்கு முதல்நாள் அதில் ஒத்திகை பார்க்க கோவையின் ரேஸ்கோர்ஸ் பகுதிக்குக் கிளம்பினேன்.என் காருக்கு அப்போதிருந்த ...
பூமியில் உலவிய புல்லாங்குழல்
(2011 பிப்ரவரி 16&25 தேதிகளில் கும்பகோணத்திலும் தஞ்சையிலும் நடைபெற்ற மீலாது நபி விழாவில் ஆற்றிய உரைகளின் சில பகுதிகள்) நபிகள் நாயகம் எழுதப்படிக்கத் தெரியாதவர் என்றும், அவர் வழியே இறைவாசகங்கள் அருளப்பட்டன என்றும் இசுலாம் சொல்கிறது. கோடிக்கணக்கானவர்கள் பின்பற்றும் ஒரு மார்க்கத்தின் மறைநூலை வெளிப்படுத்தியவர் எழுதப்படிக்க அறியாதவர் என்பதில் முக்கியமான ஓர் அம்சம் இருக்கிறது. புல்லாங்குழல் இசையின் பிறப்பிடமாக இருப்பதற்குக் காரணமே அதிலுள்ள வெற்றிடம்தான். தன்னுள் இருக்கும் அந்த வெளியினால்தான் உள்நுழையும் வளியை புல்லாங்குழல் இசையாக்குகிறது. “வண்டு ...
ஒண்ணேகால் இருக்கை
ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ்ஸின் ஏசி கோச்சில் பெரும்பாலும் எனக்கு ஜன்னலோர இருக்கை அமைந்துவிடும்.அதுமட்டுமா.பெரும்பாலும் எனக்குப் பக்கத்து இருக்கை காலியாகத்தான் இருக்கும்.மாதம் இருமுறையாவதுஅதில் பயணம் செய்து வருபவன் என்பதால் அதிலுள்ள பணியாளர்கள் பலரும் எனக்குப் பழக்கமானவர்கள் கோவையிலிருந்து மயிலாடுதுறை போகும் அந்த ரயிலில் கரூர்,திருச்சி,தஞ்சாவூர்,கும்பகோணம்,மயிலாடுதுறை என்று அதன் சகல நிறுத்தங்களிலும் எனக்கு வேலையிருக்கும். காலையில் அந்தரயிலில் ஏறி கரூரிலோ திருச்சியிலோ கல்லூரிக்கூட்டங்களில் பேசிவிட்டு,மாலை அதே ரயிலில் திரும்புவதும் உண்டு.காதில் வயர்ஃப்ரீ எம்பீத்ரீயை மாட்டிக் கொண்டு கண்மூடி சாய்ந்தால் மகராஜபுரம் சந்தானம் ...
கர்ணன்-6
பாஞ்ச சன்னியம் முழங்க முழங்க பாரத யுத்தம் தொடங்கியது பாண்டவர் கௌரவர் சேனைகள் மோதிட குருஷேத்திரமே கலங்கியது அர்ச்சுனன் தேரை கண்ணன் இயக்கிட சல்லியன் கர்ணனின் சாரதியாம் கர்ணனை இகழும் சல்லியனாலே இருவருக்கிடையே மோதல்களாம் யுத்த களத்தினில் கர்ணனை விட்டு இறங்கி நடந்தான் சல்லியனே வித்தகன் கண்ணன் சொன்ன படியே கணைகள் தொடுத்தான் அர்ச்சுனனே கொடுத்துச் சிவந்த கர்ணனின் கைகள் குருதி துடைத்துச் சிவக்கிறதே அடித்த அம்பினில் உயிர்பிரியாமல் தர்ம தேவதை தடுக்கிறதே எய்த அம்புடன் கிடந்த ...