Blog

/Blog

கர்ணன்-5

    பாரத யுத்தம் நெருங்கிடும் நேரம் பாண்டவர் தூதன் பரந்தாமன் மாபெரும் கலகம் செய்திட வந்தான் மாதவன் கேசவன் யதுபாலன்   குந்தியின் அரண்மனை சென்றவன் அவளது கடந்த காலத்தைத் தோண்டிவிட்டான் அன்றவள் நதியில் வீசிய மகன்தான் கர்ணன் என்பதைக் கூறிவிட்டான் கதறிய குந்தியை அமைதிப் படுத்தி காரியக் காரன் தூண்டிவிட்டான் எதிர்வரும் போரில் இரண்டு வரங்களை கேட்டிடச் சொல்லிப் போகவிட்டான்   மைந்தனின் அரண்மனை வாசலில் வந்து மாதவள் நின்றாள் அழுதபடி வந்தவள் தாயென ...

கர்ணன்-4

கிழக்கில் கதிரவன் உதிக்கையில் மகனாம் கர்ணன் துதிப்பான் உவகையிலே நமக்கும் அந்த அனுபவம் கிடைக்கும் கண்ணதாசன் கவிதையிலே (ஆயிரம் கைகள் நீட்டி-பாடல்) சூரிய வணக்கம் செய்கிற வேளையில் குரலொன்று கேட்டது வாசலிலே காரியம் ஒன்று நடத்திட இந்திரன் வந்தான் யாசகன் வடிவினிலே வந்தவன் பகைவன் என்பதைத் தந்தை வகையாய்ச் சொன்னான் மகனுக்கு எந்தப் பொருளையும் இல்லை என்கிற எண்ணம் இல்லையே இவனுக்கு ஒட்டிப் பிறந்த கவச குண்டலம் தானம் கேட்டான் இந்திரனே வெட்டி எடுத்து அடுத்த நொடியே ...

கர்ணன்-3

பக்தியும் பணிவும் பொங்கிடும் மனதுடன் பணிந்தே கர்ணன் நிற்கின்றான் சக்தியின் களஞ்சியம் பரசுராமனின் குருகுலம் தனிலே கற்கின்றான் தந்தையை கொன்றவன் ஷத்ரியன் என்பதில் தாங்க முடியாக் கோபத்திலே அந்தணருக்கே வில்வித்தை போதனை பரசுராமனின் கூடத்திலே   தானெந்த குலமென்று தெரியாத தனால் மாணவன் ஆனான் கர்ணனுமே ஆனந்த மாக போதனை வழங்கி ஆதரித்தான் பரசு ராமனுமே மாணவன் மடியில் தலைவைத்துக் கிடந்தான் முனிவன் ஒருநாள் மதியத்திலே ஆணவ இந்திரன் சதிசெய்ய வந்தான் அங்கொரு வண்டின் வடிவத்திலே   ...

கர்ணன்-2

பாண்டவர் கௌரவர் எல்லோருக்கும் போதனை வழங்கும் ராஜகுரு ஆண்டிடும் அரசர் தொழுதிடும் துரோணர் வில்வித்தை தனிலே வீரகுரு பாண்டவ இளவல் பார்த்திபன் அர்ச்சுனன பயின்ற வில்வித்தை அரங்கேற்றம் நீண்டது வரிசை நிறைந்தனர் அரசர் எங்கும் வீரர்கள் நடமாட்டம் வித்தை காட்டினான் விஜயன் அங்கே வந்தவர் எல்லாம் வியந்தனராம் இத்தகு வீரனை எதிர்ப்பவர் உண்டோ எனும்குரல் கேட்டு பயந்தனராம் மொத்த சபையும் மவுனம் காக்க முழங்கி எழுந்தான் கர்ணனுமே பித்தா நீஎன்ன அரசனா என்றதும் தலைகவிழ்ந்தானே வீரனுமே சிங்கம் ...

கர்ணன்-1

நாட்டியப்பள்ளி ஒன்றில் கர்ணன் குறித்த நாட்டிய நாடகம் கேட்டார்கள்.  கூடுமானவரை ஒரே சந்தத்தில் இருந்தால் நல்லதென்று சொன்னார்கள். ஆறு அத்தியாயங்களாய் எழுதிக் கொடுத்தேன். வலைபூவில் சுலபத் தவணை முறையில் இடுவதாகத்திட்டம்..                              விநாயகர் வணக்கம் ஆனைமுகன்! எங்கள் ஆனைமுகன்!-எங்கும் ஆனந்தம் நிலவிட அருள்வானே ஞானமுனி அந்த வியாசன் சொல்ல பாரதம் மலைமேல் புனைந்தானே தானெனும் எண்ணம் துளியும் இலாமல் தந்தம் ...

அவள்தான்

 பாடிடச் சொன்னவள் அவள்தான் -இந்தப் பாதையைத் தந்தவள் அவள்தான் தேடிய வெளிச்சமும் அவள்தான்-உள்ளே தெரிகிற ஜோதியும் அவள்தான் வீணையை மீட்டிடும் விரலாய்-என் விதியினை ஓட்டிடும் குரலாய் காணென்று காட்டிடும் அருளாய்-என் கண்முன்னே வருபவள் அவள்தான் அண்டத்தைப் பிண்டத்தில் அமைத்தாள்-அதில் ஆயிரம் அதிசயம் சமைத்தாள் கண்டத்தில் நீலத்தைத் தடுத்தாள்-எனைக் கண்டதும் களுக்கென்று சிரித்தாள் பாய்கிற கடலலை அவளே-வரும் பாய்மரக் கப்பலும் அவளே தாயவள் எங்கணும் ஜொலிப்பாள்-அவள் திருக்கடையூரினில் இருப்பாள் தாடங்கம் தானந்த இந்து-பிற கோள்களும் அவளின்கைப் பந்து நாடகம் நடத்திட நினைத்தாள்-அவள் ...
More...More...More...More...