Blog

/Blog

பனைமரங்களின் கனவு

காற்றிலாடும் பனைமரங்கள் கனவுகண்டன கற்பகமாய் மலர்வதுபோல் நினைவுகொண்டன நோற்பதுபோல் ஒற்றைக்காலில் நின்றிருந்தன நனவாகும் நமதுகனா என்றிருந்தன சாமமாகும் போதுகூட விழித்திருந்தன சாவிலாத வாழ்வுகாணத் துடித்திருந்தன தாமதமேன் என்றுசொல்லித் தவித்திருந்தன தூயமகன் வரவையெண்ணி சிலிர்த்திருந்தன உதயவேளை தன்னிலங்கே ஒருவன் தோன்றினான் ஓலைகளைப் பறித்தெடுத்துக் கொண்டுபோயினான் பதப்படுத்தி ஆணிதொட்டு வரையலாயினான் புண்ணியப்பூங் கவிதைகளைப் புனையலாயினான் தேனலைகள் புரண்டெழுந்து திசைநனைத்தன தெய்வங்களும் இறங்கிவந்து தமிழ்படித்தன கானம்பாடும் பறவைகளும் குரல்கொடுத்தன கம்பநாடன் என்றுசொல்லி சிறகசைத்தன ஓலைகளில் அமுதவாரி ஊற்றெழுந்தது உலகமெங்கும் கவிதையின்பக் காற்றெழுந்தது காலம்நின்று பார்த்துவிட்டுக் கால்நடந்தது தேரெழுந்தூர்த் தச்சன்செய்த தேரசைந்தது பனைமரங்கள் அவனிடத்தில் பக்தி கொண்டன பாட்டரசன் தொட்டவையோ முக்தி கொண்டன கனவு நனவானதெனக் கண்டு கொண்டன கவியமுதை ஓலைகளில் மொண்டுதந்தன கம்பநாடன் விழிமலர்கள் கருணைநல்கின கவிதைகள்தான் பனையின்நுங்கில் சுவையும்நல்கின அன்றுமுதல் பனைமரங்கள் உயரமாயின விண்ணிலுள்ள கம்பனுக்கு விசிறியாயின ...

குடும்பப் பாட்டாய் மாறிய காதல் பாட்டு

உலகின் அன்னை என்ற தலைப்பில் அன்னை தெரசா பற்றிய என் பாடல்களடங்கிய முதல் இசை ஆல்பம் வெளிவந்து பரவலான வரவேற்பைப் பெற்றிருந்த நேரமது. சுஜாதா,ஸ்வர்ணலதா, ஹரிணி போன்றவர்கள் உருக்கமாகப் பாடியிருந்தார்கள். என்னை ஊக்குவிப்பதற்காக கவிஞர் வைரமுத்து ஒரு முன்னுரையும் பேசித்தந்திருந்தார்.அதன்பிறகு தொடர்ச்சியாக பக்தி கேசட்டுகளுக்கு எழுதிக் கொண்டிருந்த போது, முழுவதும் காதல் பாடல்களைக் கொண்ட ஆல்பம் ஒன்று தயாரிப்பதென்று முடிவானது. “காதல் வரும் காலம்”என்பது அந்தப் பிறக்காத குழந்தைக்கு சூட்டப்பட்ட பெயர். “உயிரெல்லாம் உருகிட உருகிடப் புதுசுகம் ...

டைட்டில் சாங்

ரொம்ப வருஷங்களுக்கு முன்னர்,ஒரு தொலைக்காட்சித் தொடருக்கு பாடல் எழுத அழைத்தார்கள்.”முக்கியமான பாட்டுங்க…இந்தியத் தொலைக்காட்சியில் முதல்முறையாக ஜேசுதாஸ் ஒரு சீரியலுக்கு பாடப் போறாரு.நீங்கதான் பாட்டு எழுதப் போறீங்க.டூயட் சாங்”என்றார்கள்.. சீரியல் பேரு என்னங்க? அது இன்னும் வைக்கலீங்க..ஆங் சொல்ல மறந்துட்டேன்.அதுக்கு ஒரு டைட்டில் சாங்கும் வேணும் அப்ப டைட்டில் தெரியணுமில்லீங்களா! அது சொல்றோம் சார்! முதல்ல டூயட் எழுதுங்க!இது காமெடி சீரியல் . அதனாலே டூயட் சாங் கொஞ்சம் காமெடியா இருக்கணும். கே.எம்.ராஜு மியூசிக்.அட்ரஸ் சொல்றோம்..வந்துடுங்க.. லுங்கியும் பனியனுமாக ...

ஜனநாயக சமையல்

ஜாலங்காட்டி நடக்குது ஜன நாயக சமையல்-பல காய்கறிகள் கலந்துபோட்டு கூட்டணி அவியல் கேழ்வரகின் நெய்பிசைந்து கசகச துகையல் கடுகுபோல படபடக்கும் கோபத்தின் பொரியல் உப்புபோலத் தொட்டுக்கிட ஜாதி ஒழிப்பு-அட ஊறுகாயப் போல்பழசு ஊழல் ஒழிப்பு அப்பளம் போல் நொறுங்குதுங்க மக்கள் நெனப்பு-கறி வேப்பிலையப் போலொதுங்கும் ஏழை பொழப்பு ஆறிப்போன வாக்குறுதி சோறுவைக்கலாம் வேகாத பருப்பக்கூட வேக வைக்கலாம் ஊசிப்போன கொள்கையோட கூட்டு வைக்கலாம் ஊருக்கெல்லாம் இலையின்கீழ நோட்டு வைக்கலாம் பந்தியெல்லாம் பதைபதைக்க குழம்ப ஊத்தறான் பாவிமக்க குழம்பத்தானே ...

நாஞ்சில்நாடன் ஒரே ஆளெனில் நக்கீரரும்தான்

சிவபெருமானுடன் மோதிய நக்கீரரும்,திருமுருகாற்றுப்படை பாடிய நக்கீரரும்,திருஈங்கோய்மலை எழுபது பாடிய நக்கீரதேவ நாயனாரும் ஒருவர்தானா,வெவ்வேறு ஆட்களா என்கிற கேள்வி காலங்காலமாய் விவாதிக்கப்பட்டு வருகிறது. பக்திப்பெருக்கெடுக்கும் நக்கீரரும் பயங்கர கோபக்காரரான நக்கீரரும் ஒரே ஆளாக இருக்க முடியாது என்கிற எண்ணம்தான் இதற்குக் காரணம்.நாஞ்சில் நாடனின் படைப்புகளைப் பார்க்கும்போது நக்கீரர் ஒரே ஆளாக இருக்கக்கூடும் என்றே தோன்றுகிறது . பழகும்போது பரிவும் பண்பும் மிக்க மென்மையான மனிதரான நாஞ்சில் அறம்சாராதவற்றைச்சாடும்போது வேகம் கொள்ளும் விதம் வியப்பளிக்கிறது. செவ்விசை,செவ்விலக்கியங்களின் தீராக் காதலர் நாஞ்சில்.நல்ல ...

விஷ்ணுபுரம் விருதின் விஸ்வரூபம்

சிறுகதைகள்,நாவல் ஆகிய இரட்டைக் குதிரைகளிலும் வெற்றிச் சவாரி செய்யக்கூடியவர்கள் மிகச்சிலர். அந்த மிகச்சிலரில் குறிப்பிடத்தக்க மூத்த எழுத்தாளர் திரு.ஆ.மாதவன். ஆழ்ந்த உறக்கத்தில்,இரண்டு கனவுகளின் இடைவெளியில் மனதில் மின்னலிடக்கூடிய வரிகள் அவருடையவை. பேறு காலத்தில் ஒரு பூனையுடன் நெருங்கிப் பழகுகிற பெண்ணொருத்திக்கு,தனக்குப் பிறக்கப் போவதே ஒரு பூனைதான் என்று தோன்றிவிடுகிறது. குழந்தை பிறந்ததும்,தாதி,”மஹாலட்சுமிபோல் ஒரு பெண்குழந்தை” என்பது இவள்செவிகளில் “மஹா லட்சணமாய் ஒரு பூனைக்குழந்தை” என்பதாக விழுந்து விடும்.இவள் ஒரு கதையின் நாயகி இறந்த தன் தாயாருக்காக அயல்நாட்டிலிருந்து ...
More...More...More...More...