Blog

/Blog

எடை கூடிய கவிதைகள்-யாழியின் என் கைரேகை படிந்த கல்

படைப்புத் தொழிலில் ஈடுபட்டிருந்த மும்முரத்தில் தான் காணத் தவறிய பிரபஞ்ச ரகசியங்களைக் கண்டறிய கடவுள் செய்த ஏற்பாடு,கவிதை. கவிதையின் கண்கள் வழியாக கவிஞனுக்கு நிகழும் தரிசனங்கள் அசாத்தியமானவை.அத்தகைய பதிவுகளுக்கேற்ப ஒவ்வோர் எழுத்து வகையும் ஒவ்வொரு வசதியைக் கொண்டிருந்தன.குறியீடுகளாலும் படிமங்களாலும் சங்க இலக்கியம் காட்டிய காட்சிகள் ஒருவகை. கடவுள் என்னும் பெருந்தூணில் சாய்ந்து, தன்னுள் ஆழ்ந்து-ஆய்ந்து, சமய இலக்கியங்கள் கண்டவையும் காட்டுவித்தவையும் ஒருவகை. இந்த சங்கிலிக் கண்ணியில் நவீன கவிதை வாழ்க்கையின் பகிரங்க வெளிகளினூடாக ஊடுகதிர்போல் பரவி உணரப்படாத ...

ராஜ ராஜ சோழன்……தந்தையாக!!

தஞ்சை பெருவுடையார் கோயிலில் 14.11.2010.அன்று நடைபெற்ற 1025ஆவது ஆண்டு சதய விழா கவியரங்கில், “கவிஞர்கள் பார்வையில் இராசராசன் ‘என்னும் பொதுத்தலைப்பில்-தந்தையாக என்னுந் தலைப்பில் பாடிய கவிதை. தலைமை :இசைக்கவி ரமணன். சிந்தையெலாம் சிவபக்தி செழித்திருக்க செயலெல்லாம் மக்கள்நலம் சிறந்திருக்க விந்தையெலாம் வியக்கின்ற விந்தையாக வாழ்ந்திருந்த புவியரசன் ராஜராஜன் தந்தையென்று வாழ்ந்திருந்த தகவு பற்றி தடந்தோளில் வளர்த்திருந்த மகவு பற்றி சந்தமிகு செந்தமிழில் சொல்ல வந்தேன் சரித்திரத்தின் தகவுகளை சேர்த்து வந்தேன் தன்னைப்போல் வையகத்தைக் காப்பதற்கு திருமகனாம் ராஜேந்திரன் ...

உண்ணாமுலை உமையாள்

சின்னஞ் சிறியவளை-ஒளிச் சுடராய்த் தெரிபவளை பென்னம் பெரியவனின்-இடப் பாகம் அமர்பவளை மின்னல் கொடியழகை-உண்ணா முலையாம் வடிவழகை உன்னும் பொழுதிலெலாம்-அவள் உள்ளே மலருகிறாள் கன்னங் கரியவளை-அருட் கனலாய் ஒளிர்பவளை இன்னும் புதியவளை-கண்கள் இமையா திருப்பவளை பொன்னில் பூணெழுதும்-முலை பொலியும் பேரருளை என்னென்று காணவந்தேன்-அவள் என்னில் நிறைந்து நின்றாள் மூலக் கனலினுள்ளே-புது மோகம் வளர்ப்பவளாம் காலக் கணக்குகளை-ஒரு கணத்தில் எரிப்பவளாம் சோலைப் புதுமலராம்-அவள் ஜோதித் திருவடிவாம் மேலென்ன சொல்லுவதோ-உண்ணா முலையாள் மகிமையெல்லாம் அண்ணா மலைத்தலமே -எங்கள் அன்னையின் இருப்பிடமாம் பண்ணார் ...

போனவர்கள் வந்தால்……? கவியரங்கக் கவிதை

19.07.2009 ல் ஈரோடு சி.கே.கே.அறக்கட்டளை ஏற்பாட்டில கவியரங்கம். “போனவர்கள் வந்தால்?” என்பது பொதுத்தலைப்பு. எனக்கான தலைப்பு :நேருபிரான். கவியரங்கத்தலைமை : “நாவுக்கரசர்” நெல்லை கண்ணன் அவர்கள். மண்ணைவிட்டுப் போய்விட்ட தலைவர் தம்மை மகத்துவத்தால் புகழ்படைத்த அறிஞர் தம்மை விண்ணைவிட்டு மறுபடியும் வரச்சொல்கின்ற வித்தையினை நிகழ்த்தத்தான் இங்கே வந்தோம்; பண்ணைவிட்டுப் பாட்டிசைக்கும் கலைஞன் போல தும்பைவிட்டு வால்பிடிக்கும் உழவன்போல கண்ணைவிற்றுச் சித்திரங்கள் வாங்குகின்ற காரியத்தில் நமக்கிணையாய் யாரும் உண்டா? அற்புதங்கள் நிகழ்த்தத்தான் அவனி வந்தார் அரசியலில் புதுவெளிச்சம் அள்ளித் ...

பேசாதவை பேசினால் – சூடாமணி

கோலாலம்பூரில் கண்ணதாசன் அறவாரியம் நிகழ்த்திய கம்பன் விழாவில் , “பேசாதன பேசினால்”என்ற தலைப்பில்,கவிஞர் இளந்தேவன் தலைமையில் கவியரங்கம் நடந்தது.”சூடாமணி பேசினால்” என்பது எனக்களிக்கப்பட்ட கிளைத்தலைப்பு. அந்தத் தலைப்பில் நான் வாசித்த கவிதை இது: சூடாமணி பேசுகிறேன்;கொஞ்சம் சூடாகப் பேசுகிறேன்; மெச்சி நீங்கள் கொண்டாடும் மெல்லியலாள் சீதையெனை உச்சிமேல் வைத்துக் கொண்டாடியதை உணர்வீரா? மற்ற அணிகலன்களுக்கு மேலாக வீற்றிருக்கும் கொற்றத்தை எனக்களித்த கம்பனைநான் வணங்குகிறேன்; தீக்குளித்தாள் சீதையென்று தமிழ்க்கம்பன் பாடிவைத்த பாக்களிலே கண்டு பதைபதைக்கும் பெரியோரே; உண்மை தெரியுமா ...

ஓசை கொடுத்த நாயகி

ஆசை கெடுப்பவளாம்-அவள் ஆட்டிப் படைப்பவளாம் பேசிச் சிரிப்பவளாம்-நல்ல பேரைக் கொடுப்பவளாம் ஈசனின் பாகத்திலே-அவள் என்றும் இருப்பவளாம் ஓசை கொடுப்பவளாம்-நெஞ்சின் உள்ளில் சிரிப்பவளாம் பாலைக் குடித்த பிள்ளை-வந்து பாடித் தொழுகையிலே ஆலங் குடித்தவனே-தங்கத் தாளங் கொடுத்தானாம் நீல நிறத்தழகி-அங்கே நேரில் சிரித்தாளாம் தாளம் பிறந்திடவே-நல்ல ஓசை கொடுத்தாளாம் காலக் கணக்குகளும்-அவள் கைவசம் உள்ளதடா மூலக் கருவறையில்-அவள் மோகம் சுடருதடா வேலைக் கொடுத்தவளே-நல்ல வார்த்தை கொடுப்பவளாம் கோலக்கா கோயிலிலே-நல்ல காட்சி கொடுப்பவளாம் மின்னல் எழுந்ததுபோல்-நம் முன்னவள் தோன்றிடுவாள் ஜன்னல் திறந்ததுபோல்-பல ...
More...More...More...More...