நாயகி ஆளுகிறாள்
திருக்கடவூர் எனக்குத் தாய்வழிப்பாட்டனாரின் ஊர் . எங்கே இருந்தாலும் கனவிலும் நனவிலும் அந்த ஊரோ வீடோ மின்னிக் கொண்டிருக்கும் வைத்தீசுவரன் கோயிலில் 16 ஆண்டுகளுக்கு முன்னால் ஏடெடுத்துப் பார்த்த போது கடந்த பிறவியில் திருக்கடவூரில் நான் பிறந்ததாக வந்தது. இந்த முறை திருக்கடவூருக்குப் போய்க் கொண்டிருந்த போது அந்த சம்பவம் நினைவுக்கு வந்தது) எத்தனை திசைகள் போனால் என்ன இதுதான் என்வீடு வித்தகி ஆள்கிற கடவூர் என்தலம் என்றது பனையேடு நித்தமும் நித்தமும் நினைவினில் மின்னும் நாயகி ...
பாலைக்காற்று
கோலாலம்பூர் கம்பன் விழா மேடையில் இருந்த போது கிடைத்த செய்தி கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் மனைவியார் மரணமடைந்த செய்தி. விழாவில் முதல்நாள் பங்கேற்று அடுத்த சில மணிநேரங்களில் விமானம் ஏற இருந்த கவிப்பேரரசு வைரமுத்து அவர்களை மேடையில் இருந்த வண்ணமே தொடர்பு கொண்டேன். அவருக்கு ஏற்கெனவே செய்தி தெரிந்திருந்தது. கவிஞர் சவுந்தரா கைலாசம் மறைந்த செய்தியையும் அவர் தெரிவித்தார். இருவருக்கும் கோலாலம்பூர் கம்பன் விழாத் திரள் அஞ்சலி செலுத்தியது. சென்னை வந்த பிறகு திருவான்மியூர் வான்மீகி ...
சாபல்யம் அவள்பதமே
அவள்தான் அவள்தான் அடைக்கலம் அருளே அவளின் படைக்கலம் கவலை முழுதும் எரித்திடும் கருணை அவளின் சூத்திரம் சாகச மனம்செய்யும் சேட்டைகளில் அவள் சாட்சி மாத்திரமே சாட்டை அடிகளும் வாட்டி வதைக்கையில் சாபல்யம் அவள்பதமே ஆகாயம் அவள் ஆடுகளம் அதில் அல்லென ஆடுகிறாள் ஆயிரம் ஆயிரம் விண்மீன் நடுவே நிலவென்று தோன்றுகிறாள் கோணல் மனங்களின் கோடுகளை அவள் கோலங்கள் செய்வாளோ கோடி வினைகளும் மூள்கையிலே ஒரு பார்வையில் எரிப்பாளோ கேணியில் அமுதம் ஊறிடச் செய்பவள் கடவூர் ஆளுகிறாள் ...
தனியாய்க் காணுவதோ
நேற்றொரு பாதையில் நடக்கவிட்டாள்-இன்று நான்செல வேறொரு திசையமைத்தாள் காற்றினில் இலைபோல் மிதக்கவிட்டாள்-இளங் காட்டுப்புறாவின் சிறகளித்தாள் ஆற்றின் வெள்ளங்கள் கடக்கவிட்டா ள்-அவள் அமிலக் கொதிப்புகள் குளிரவிட் டாள் ஊற்றெழும் வினைப்பயன் தூரவைத்தாள்-அந்த உத்தமி தன்னிழல் சேரவைத்தாள் சூரியன் போகிற வழிபார்த்தே -ஒரு சூரிய காந்தி திரும்புதல் போல் காரியம் பலப்பல பார்த்தபடி-அவள் காருண்ய முகத்தினைப் பார்க்கச் சொன்னாள் சூரியன் போவதோ ஒருவழிதான் -எங்கள் சூலினி எங்கணும் பரந்துபட்டாள் நேர்வரும் எதனிலும் நிற்பவளை-அட நானெங்கு தனியாய்க் காணுவதோ வீணையின் நாதத்தில் சிரிப்பவளை-அந்த வெய்யிற் சூட்டில் தெறிப்பவளை பூநிழல் வழியெங்கும் விரிப்பவளை-மனப் புண்களில் ...
அம்பிகை வந்ததென்ன
வானங் கறுத்தது வானங் கறுத்தது வஞ்சி முகம் போலே-இடி கானமிசைத்தது கானமிசைத்தது காளிகுரல் போலே தேனுமினித்தது தேனுமினித்தது தேவியவள்போலே -இனி நானுந் தொலைந்திட நீயுந் தொலைந்திடு நங்கையருளாலே தேகத்தின் இச்சைகள் தூண்டி விடுவது தாயவள் மாயையன்றோ-உள்ளே நாகத்தின் வேகத்தில் ஓடிடும் சக்தியும் நாயகி சாயையன்றோ தோகையின் வண்ணத்தில் தோன்றிடும்பேரெழில் மாதங்கி ரூபமன்றோ-இடப் பாகத்தைத் தந்தவன் தேகத்தை ஆள்வதும் பைரவி லீலையன்றோ மூர்க்கம் வளர்த்திடும் மோதல் பலகண்டு மூக்கறு பட்டதென்ன-அவள் தீர்க்க விழிநெஞ்சில் தோன்றிய பின்னரென் வாக்கெடு பட்டதென்ன ஆக்கும் எதனையும் காக்கும் துணையென அம்பிகை வந்ததென்ன போக்கு வரவுகள் ஆக்கவும் சேர்க்கவும் பேரருள் செய்வதென்ன ஆலத்தை உண்டவன் நீலத் திருக்கண்டம் அம்பிகை கைவண்ணமோ-முழு மூலத்தை ஆக்கிடும் சீலத்தை ...
யாரிவளோ
மாத்திரைப் போதவள் முகந்தெரியும்-ஒரு மின்னற் பொழுதினில் மறைந்துவிடும் ஊர்த்துவம் ஆடிடும் சலங்கையொலி-மிக உற்றுக் கவனிக்கக் காதில்விழும் தீர்த்தக் கரைகள் எங்கணுமே -எங்கள் தேவியின் காலடி பதிந்திருக்கும் வார்த்தைகள் தேடிடும் வேளையிலே-அவள் வண்ணப்பொன் அதரங்கள் முணுமுணுக்கும் சந்நிதி சேர்கிற வேளையினில்-நெஞ்சின் சஞ்சலம் கண்களில் பொங்குகையில் என்கதி என்னென்று ஏங்குகையில்-அவள் இன்பக் குறுநகை கண்ணில் படும் சின்னக் குழந்தையின் சொல்வழியே-அவள் சொல்ல நினைத்தது சொல்லப்படும் என்னை அழுத்திடும் பாரமெல்லாம்-அவள் எண்ணும் பொழுதினில் வெல்லப்படும் தூண்டில் முனையினில் மண்புழுவாய்-பின் தூண்டிலில் சிக்கிய செங்கயலாய் நீண்டிடும் எந்தன் தவிதவிப்பை-வந்து நிர்மலை மாற்றிடும் நேரமிது தீண்டும் நெருப்பினில் சுட்டெடுத்துப்-பசுந் தங்கமென் றாக்கிட எண்ணம்கொண்டாள் தாண்டவ நாயகன் பக்கம்நின்றும்-நம்மை தாய்மை ...