Blog

/Blog

சுருட்டபள்ளி சிவன்

உண்ட மயக்கம் மாலவனின் பாற்கடலில் மிக்க வருமலைகள் ஓலமிட்டால் கண்ணுறங்க ஒண்ணாதே-கோலமிக்க தேவியவள் பூமடியில் தேவதேவன் கண்ணுறங்க மேவிவரும் மௌன மயக்கு. நால்வர் தமிழ்கொடுத்த ஞானக் கிறக்கமோ மாங்கனி தந்த மயக்கமோ-ஆலத்தை உண்ட மயக்கமோ உத்தமியாள் பேரழகைக் கண்ட மயக்கமோ கூறு நாயன்மார் வீடுகளை நாடி நடந்தவரின் தூய உபசரிப்பில் தான்திளைத்தும்-நேயரை ஆட்டிப் படைத்தும் அருள்கொடுத்தசோர்வினிலே நீட்டிப் படுத்தாயோ நீ. பெண்டு தனைக்கேட்டு பிள்ளைக் கறிகேட்டு திண்ணனவன் கண்களையுந் தான்கேட்டு-மண்மிசையே சுந்தரர்க்காய் வீதிகளில் சுற்றித் திரிந்துவிட்டு நொந்துபடுத் தாயோ நவில். தாழ்சடைகள் அம்மை திருமடியி லேபுரள ஆழ்துயிலில் உள்ளதோர் ஆபத்து-ஆழிசேர் கங்கை ...

நிலவும் நானும்…

நீட்டிய விரலுக்கும் நிலவுக்கும் நடுவே நீண்டது ஆயிரம் தூரம்-என் நினைவில் ஆயிரம் பாரம் ஒளி காட்டிய பரிவும் கூட்டிய குளிரும் காலம் முழுதும் வாழும்-அந்த போதையில் இதயம் ஆழும் எங்கே எப்படி நான்போனாலும் நிலவின் பார்வையில் இருப்பேன் -அதன் நிழலாய் பூமியில் நடப்பேன் பொங்கும் வெய்யில் பொழுதிலும் நிலவின் பொன்முகம் எண்ணிக் கிடப்பேன் -அது பூக்கும் அந்தியில் உயிர்ப்பேன் நட்சத்திரங்களின் நளினக் குலுக்கல்கள் நெஞ்சில் பதிவதும் இல்லை-அதை நேர்படப் பார்ப்பதும் இல்லை ஒரு முட்புதர் பாதையில் முல்லைக்காடு ...

எழிலே என் அபிராமியே

கல்லையும் கனிவிக்கும் கடைவிழி பதிந்ததால் கவிபாடிச் சபையேறினேன் கள்ளென்ற போதையும் முள்ளென்ற வாதையும் காணாமல் ஆளாகினேன் நில்லென்று சொல்கையில் நின்றதால் குழிவிழல் நிகழாமல் கடந்தேகினேன் நிகழ்பவை யாதென்று நினைத்திடும் முன்னரே நன்மைகள் நிதங்காண்கிறேன் அல்லென்ற நிறத்தினாள் அம்பிகை கரத்தினால் அள்ளினாள் உயிர்வாழ்கிறேன் அன்னையள் யாருக்கும் முன்னையள் அருளினால் அச்சத்தின் பிடிநீங்கினேன் சொல்லொன்று விதைத்ததால் சூட்சுமம் கொடுத்ததால் சுழன்றாலும் நிமிர்கிறேனே சுடர்வீசும் விளக்கோடு கதைபேசும் ஜோதியே சுபவாமி அபிராமியே எத்தனை வலைகளோ  எத்தனை தடைகளோ எப்படித் தாண்டினேனோ எத்தர்கள் பிடிவிட்டு சித்தர்கள் அடிதொட்டு எவ்விதம் ஓங்கினேனோ எத்தனை சபைகளோ எத்தனை களங்களோ எப்படி ஏறினேனோ ...

மேஸ்குலின் கிங்

இருபது வருடங்களுக்கு முன்னால் கோவையில் ஓர் இலக்கியக் கூட்டம். உளறுவதே உரைப்பொழிவு என்று திட்டவட்டமாக நம்பிய ஒரு பெண்மணி மேடையில் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தார். அவையினருக்கு, அது உளறல் என உரைக்கத் தொடங்குவதற்கு முன்னரே முன்வரிசையிலிருந்து பெரியவர் ஒருவர் எழுந்து “பிடி பிடி”என்று பிடிக்கத் தொடங்கிவிட்டார். உள்ளூர்க்காரர்களில் பலருக்கும் அவரைத் தெரிந்திருந்தது.பேசிய பெண்மணி வெளியூர்க்காரர்.வெலவெலத்துப் போய்விட்டார். அந்தப் பெரியவரின் பெயர் அம்மையப்பா.அவருக்குத் தரப்பட்டிருந்த பட்டம், “ஆண்மையரசு”. ஆண்மையரசு என்றால் ஏதோ சித்த வைத்திய சமாச்சாரம் என்று நீங்கள் நினைத்துவிடக்கூடாது. ...

மரங்கள் – சில குறிப்புகள்

  எழுதப் படாத என் கவிதையை ரசித்து தூரத்து மரங்கள் தலையசைத்தன. தட்டுப்படாத பிரம்பின் அசைவுக்குக் கட்டுப்படுகிற குழந்தைகள் போல ஒரே சீராகக் கிளைகள அசைந்தன. பசிய மரங்களின் பேச்சுக் குரலாய் சலசலத்தன தளிர்களும் இலைகளும். நொடிக்கொரு தடவை நிமிர்வதும் வளைவதும் அடிமண்ணுக்குள்ஆழப்பதிவதும் செடியாய் இருக்கும் வரைக்கும்மட்டுமே. வேர்கள் பரப்பிய மரங்களுக்கிங்கே வேலைகள் பெரிதாய் எதுவுமில்லை. நிழலுக்கொதுங்கி நிற்பவர் மீது அக்கறை அலட்சியம் இரண்டுமில்லை. போதி மரங்களை, புளிய மரங்களை, வேப்ப மரங்களை, அரச மரங்களை, மனிதர்களெல்லாம் ...

எதிர்ப்பார்ப்பு

  கப்பல் வருகிற திசையைப் பார்த்துக் கண் விழித்திருக்கும் கலங்கரை விளக்கம். வெளிச்சக் கூக்குரல் வீசி வீசித் திரை கடல் முழுவதும் தேடிப் பார்க்கும். தொலைந்துபோன பிள்ளையைத் தேடும் தாயின் தவிப்பு அதிலே தெறிக்கும். நிதான கதியில் நகர்ந்து வருகிற கப்பலைப் பார்த்தால் குதியாய் குதிக்கும். “இதோ பார்! இதோ பார்” என்கிற தவிப்பு கடலலை இரைச்சலில் கேட்டதோ? இல்லையோ? நிலத்தில் ஊன்றி நிற்கிற போதும் நிலை கொள்ளாமல் நடுங்கிச் சிலிர்க்கும். கண்டு கொள்ளாமல் கப்பல் நகரும். ...
More...More...More...More...