Blog

/Blog

மழை மனசு

அருவிகள் நடந்த வழித்தடமிருக்கும் மலையின் மீது தழும்புகள் போல. கரும்பாறைகளில் கசிவின் தடயங்கள் இராணுவ வீரனின் கண்ணீர் போல. மெல்லிய கீற்றாய் பறவையின் பாடல் நேற்றைய கனவின் நிழலைப்போல. மெளனப் பூக்கள் மலர்கிற உச்சியில் கனல்கிற அமைதி கடவுளைப் போல. வெளிப்படாத செளந்தர்யம் இன்னும் கருவிலிருக்கும் குழந்தையைப் போல். துளையிடப்பாடாத புல்லாங்குழலில் தூங்குகின்ற இசையைப் போல. இத்தனை அழகிலும் இழையுதென் இதயம் மலைமேல் பெய்கிற மழையைப்போல ...

எனது கவிதைகள்!

  நெற்றியில் துளிர்க்கும் வியர்வைத் துளிகளை ஒற்றியெடுக்கிற கைக்குட்டைகளாய் வேற்று முகமின்றி… எதிர்ப்படும் எவரையும் பற்றிக்க கொள்கிற பிஞ்சுவிரல்களாய் உயிரில் உறைந்த உண்மைகளெல்லாம் உருகி வழிந்ததில் பெருகும் வெள்ளமாய் பரிவு வறண்ட பாலைவனத்திடைப் பயணம் மேற்கொள்ளும் பிள்ளையின் தாகமாய்…                                                                            எனது கவிதைகள்! கரைகளைக் கடந்து, கனிவின் பரப்பில் நடையிடத் துடிக்கும் நதியின் புலம்பலாய் குமுறும் அன்பை, கமண்டலத்துக்குள் அடக்க நேர்கிற அகத்திய அவஸ்தையாய், அலைகள் தினமும் அறைந்து போனதில் கரைந்து கிடக்கிற கடற்கரை மணலாய் கல்லடிபட்ட ...

ஈகை

உன்… தோள்பை நிறையத் தங்கக்காசுகள். ஈதலுக்கானதோர் கர்வமில்லாமல் விரல்களை இழுத்து வலியப் பிரித்து எல்லார் கையிலும் திணித்துப் போகிறாய். கொடுப்பது உனக்குக் கடமை போலவும் வாங்கிக் கொளபவர் வள்ளல்கள் போலவும் பணிவும் பரிவும் பொங்கப் பொங்கத் தங்கக் காசுகள் தந்துகொண்டிருக்கிறாய். திகைத்து நிற்பவர் கண்களிலிருந்து தெறிக்கிற மின்னல்கள் ரசித்தபடியே பொன்மழை பொழியும் மேகமாய் நகர்கிறாய். கைகள் வழியக் காசு கொடுக்கையில் ஒன்றோ இரண்டோ தவறி விழுந்தால் பதறி எடுத்துக் தூசு துடைத்து வணங்கிக் கொடுத்து வருந்தி நிற்கிறாய். ...

சிரிக்கத்தெரிந்த சிவன்

சிரிக்காதவர்கள், அல்லது சிரிப்பார்கள் என்று நாம் நினைக்காதவர்கள் சிரித்தால் வியப்பாகத்தான் இருக்கும். 90ஐ நெருங்கிக் கொண்டிருக்கும் தமிழ்ப்பேரறிஞர் ம.ரா.போ.குருசாமி அவர்களிடம் திருவள்ளுவரின் நகைச்சுவை பற்றிக் கேட்டபோது, ‘இருக்கு! ஆனா போலீஸ்காரர் சிரிச்ச மாதிரி இருக்கு!’ என்றார். நகைச்சுவை என்பது சூழல்களால் தீர்மானிக்கப்படும் விஷயம்தான்.பல தலைமையாசிரியர்கள் சிரிப்பதில்லை என்பது, பொதுவான நம்பிக்கை. மாணவர்களுடன் சேர்ந்து ஆசிரியர்களையும் நிர்வாகம் செய்ய வேண்டியிருப்பதால் கூட இருக்கலாம். ஆனால் தலைமைப்பீடங்களில் இருப்பவர்கள் பலரும் நகைச்சுவையாகப் பேச முயல்வார்கள். அதில் துளிக்கூட நகைச்சுவை அம்சமே இருப்பதில்லை.ஆனால் உடனிருப்போர் சிரித்து உருளுவார்கள். அதற்கும் ...

கோலமயில் அபிராமியே

ஊர்கொடுத்த வரிகளை உதடுகளில் தாங்கியே உலகத்தைச் சுற்றி வந்தேன் உரங்கொடுத்த உணர்வினை வரங்கொடுத்த பலரையும் உள்ளத்தில் ஏற்றி நின்றேன் பேர்கொடுக்கும் பண்புகள் பிறர்தந்த பரிசோநீ பிறவியில் தந்த கொடையோ பழக்கத்தில் வந்தவர் நெருக்கத்தில் இணைந்திடும் பெற்றிமை உந்தனருளோ நார்தொடுக்கும் பூக்களாய் நான்கற்ற தமிழினை நல்கினேன் வேறொன்றில்லை நாவிலும் தாளிலும் நடமாடும் தமிழன்றி நானொன்றும் செய்ததில்லை யார்கொடுத்த புண்ணியம் என்பதை அறிகிலேன் யானென்று ஆடமாட்டேன் யாதிலும் நிறைகின்ற மாதவச் செல்வியே எழிலரசி அபிராமியே தீண்டாத வீணையில் தீராத ஸ்வரங்களாய் தொடர்கின்ற ...

2010 கண்ணதாசன் விருதுகள்

கோவை கண்ணதாசன் கழகம் வழங்கும் கண்ணதாசன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ரூ.50,000 ரொக்கப் பரிசும் பட்டயமும் கொண்ட இந்த விருதுகள் கடந்த ஆண்டு, திரு.நாஞ்சில் நாடன் அவர்களுக்கும், பாடகர் அமரர் டி,ஆர்.மகாலிங்கம் அவர்களின் புதல்வியும் பாடகியுமான திருமதி டி.ஆர்.எம்.சாவித்திரி அவர்களுக்கு வழங்கப்பட்டது. 2010 ம் ஆண்டுக்கான  விருதுகள்  கவிஞர் கல்யாண்ஜி அவர்களுக்கும், அமரர்  சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின்  புதல்வர்  டாக்டர். சீர்காழி சிவசிதம்பரம் அவர்களுக்கும்  வழங்கப்படுகிறது. இது அமரர் சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் பவள விழா ஆண்டு என்பது குறிப்பிடத் தக்கது. கவியரசு ...
More...More...More...More...