Blog

/Blog

கவிஞர்கள் திருநாள் விருது -2010

கவிஞர் வைரமுத்து அவர்களை நிறுவனர் தலைவராகக் கொண்ட வெற்றித் தமிழர் பேரவை நடத்தும் கவிஞர்கள் திருநாள் ஜூலை 13 காலை 10.00 மணியளவில் சென்னை டிரஸ்ட்புரம் பொன்மணி மாளிகையில் நிகழ்கிறது. 2010 ஆம் ஆண்டுக்கான கவிஞர்கள் திருநாள் விருது, முதுபெரும் பாடலாசிரியர் பூவை செங்குட்டுவன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. கவியரசு கண்ணதாசன் அவர்களின் பரிந்துரையால் கந்தன் கருணை திரைப்படத்தில் வாய்ப்புப் பெற்று,”திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலையில் எதிரொலிக்கும்” என்ற பாடல் மூலம் அறிமுகமானவர் திரு. பூவை ...

அந்தியின் சிரிப்பு

அந்தியிருளால் கருகும் உலகு கண்டேன் அவ்வாறே வான்கண்டேன் திசைகள் கண்டேன் என்றார் பாவேந்தர். படரும் இருளில் உலகு கருகுகிறது என்ற கற்பனை பற்றி இரவுலாவிகள் என்ன நினைக்கிறார்களோ தெரியவில்லை. கையில் ஒரு பழைய தாளை வைத்துக் கொண்டு, எரியும் மெழுகுவர்த்தியில் உரசினால்பரபர வென்று தீ பரவும்போதே தாள்கள் கரியாகி உதிரும். பெற்றோரோ மற்றோரோ எரித்த காதல் கடிதங்களை தண்ணீரில் கரைத்து விழுங்கி சரித்திரம் படைத்த காதலர்களை மரோசரித்ராவில் பார்த்திருக்கிறோம். காகிதம் கருகுகிற வேகத்தில் எங்கும் இருள் படர்ந்த ...

முன்னே பின்னே இருக்கும்

தமிழில் சில சொற்கள் மேம்போக்காகக் கையாளப்பட்டாலும் அடிப்படையில் அவற்றுக்கு வேறுபொருள் இருக்கும்.கன்னா பின்னா என்றொரு பிரயோகம் உண்டு. கன்னன் என்பது கர்ணனைக் குறிக்கும் சொல். பின்னா என்பது, அவனுக்குப் பின்னால்  பிறந்தவனாகிய  தருமனைக்  குறிக்கும்.. ஒருவரை  கர்ணமகராசா, தருமமகராசா என்றெல்லாம் புகழ்வதுதான் கன்னா பின்னா என்று புகழ்வது. (உடனே உங்களுக்கு ஏதேனும்  கவியரங்குகள்  நினைவுக்கு  வந்தால்  நான் பொறுப்பில்லை). கர்ணன் தன் அண்ணன் என்று தெரியாமலேயே தருமன் கடைசிவரை எதிர்க்கிறான். தருமன் தன் தம்பி என்று தெரிந்தும் கர்ணன் போர்க்களத்தில் எதிர்த்து நிற்கிறான் தருமன் ...

தமிழ் செம்மொழி மாநாடு கவியரங்க கவிதை – 25.06.10

    தமிழ்ச்செம்மொழி மாநாட்டில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தலைமையில் நிகழ்ந்த கவியரங்கில் வாசித்த கவிதை.அவையின் அப்போதைய கலகலப்புக்காக வாசித்த சில வரிகள் நீங்கலாய் மற்றவைஇங்கே இடம் பெறுகின்றன… பொதுத்தலைப்பு: கிளம்பிற்று காண் தமிழச் சிங்கக் கூட்டம் கிளைத்தலைப்பு:  அடையாளம் மீட்க கலைஞருக்கு மூவேந்தர் இங்கிருந்தார்; முத்தமிழை வளர்த்திருந்தார் தார்வேந்தர் அவர்கள் பணி தாயகத்தைத் தாண்டவில்லை பாரிலுள்ள தமிழர்களை – ஒரு பந்தலின் கீழ் கூட்டுவித்து ஓர்வேந்தர் செம்மொழியின் உயர்வுகளை முரசறைந்தார் – அந்தச் சீர்வேந்தர் கலைஞரென்று சாற்றிநிற்கும் வரலாறு கூடும் ...

இப்படித்தான் ஆரம்பம் – இன்னும் சில குறிப்புகள்

“அவனைப் பற்றியே ஆயிரம் கவிதைகள்  எழுதி எழுதிநான் எழுத்தை நேசித்தேன்” என்று நேருவைப்பற்றிச் சொன்னார்  கவிஞர். அவரை வாசித்து வாசித்தே தமிழின் பக்கம் வந்தேன். கவிஞரின் தனிக்கவிதைகள் வழியே அவரின் திரைப்பாடல்களுக்குள் பிரக்ஞையுடன் புகுந்தேன். அவரின் படைப்புலகுக்குள் புகுந்து பார்க்க இந்தக் கட்டுரைகள் ஒரு கைவிளக்காய் இருக்கலாம். ஆனால் உள்ளே போகிற நீங்கள் நான் காணாதவற்றையும் காண்பீர்கள். காட்டுவிப்பீர்கள். இந்தக் கட்டுரைகளில் கவிஞரின் உரைநடைக்குள்  நான்   செல்லவேயில்லை. அவரின் பயணங்களையும்  மன ஓட்டங்களையும் கவிதைகள் மற்றும் பாடல்கள்  வழியாகவே கண்டறியும் முயற்சி இது. அவர் எழுதிய பாடல்கள் சிலவற்றைக் கேட்கும்போது அவர் எழுதிக் கொடுத்த முறையை மாற்றி ஒலிப்பதிவு செய்திருந்தால் கூட அவரின் வரிகள் அவரைக் காட்டிக் ...

இப்படித்தான் ஆரம்பம் – 36

கவிஞரின் தேடல் உள்முகமாகக் குவியத் தொடங்கிய காலகட்டம் அவருடைய வாழ்வின் நிறைவு நிலையில் நிகழ்ந்தது. வாழ்வெனும் மாயப்பெருங்கனவை விலக்கி உதறி விழித்தெழுந்த நிலையில் அவருடைய மனப்பான்மை மலர்ந்தது . இமயம் வரைக்கும் என்பெயர் தெரியும் குமரிக் கடலென் குணம்சொல்லி ஆடும் அமெரிக்க வானம் என் அருமையைப் பாடும்.. ஆயினும் என்ன நண்பர்களே அமைதியைத் தேடி அலைகின்றேன் என்று அவர் சொன்னாலும்,தன்னையே தேடுகிற தவிப்பின் ஆரம்ப அடையாளங்களே அந்த அமைதியின்மை. அவருக்குள் இருந்த அபூர்வமான சக்தியைக் குறித்து நாம் ...
More...More...More...More...