Blog

/Blog

இப்படித்தான் ஆரம்பம்-35

கண்ணதாசன் என்று சொன்ன மாத்திரத்தில் நம் நினைவுக்கு வருகிற மற்றோர் அம்சம், புலனின்பம். வாழ்வின் சுகங்களை நிதானமாய் ரசித்து அந்த அனுபவங்களை இலக்கியமாய்ப் படைத்தவர் கண்ணதாசன்.அவசரத்துக்கு கள், ஆவேசத்திற்கு பெண் என்ற வகையைச் சேர்ந்தவரல்ல அவர். காதலிலும் போதையிலும் அவர் ஈடுபட்ட விதமே அலாதியானது.வானில் முழுநிலவு ஒளிவீச, அதன் ஒளிக்கீற்று விழுகிற முற்றத்தில் மஞ்சம் விரித்து, பண்ணிசை ஒலிக்க. பெண்ணொருத்தி பரதம் ஆட கையில் கிண்ணமேந்தி நிற்கிற பொழுது பொங்குகிற எண்ணங்கள் அவரை ஆனந்த உலகுக்கே அழைத்திச் செல்கின்றன. “வெண்ணிலா ...

இப்படித்தான் ஆரம்பம் – 34

இந்தியாவின் இணையற்ற பெருமைகளைப் பட்டியல் போடும் பாரதி, தத்துவக் கோட்பாடுகளின் தூல வடிவமாக வாழ்ந்தவர்களையே பட்டியலில் சேர்க்கிறான். மானுட தத்துவத்தைக் கலையாக்கிய கம்பன், கலைநேர்த்தி என்னும் தத்துவத்திற்கு சான்றான காளிதாசன், என்ற வரிசையில் வேதாந்த தத்துவத்தின் வடிவாய் வாழ்ந்த ஆதிசங்கரரை குறிப்பிடுகிறான் பாரதி. கம்பன் என்றொரு மானுடன் வாழ்ந்ததும் காளிதாசன் கவிதை புனைந்ததும் உம்பர் வானத்துக் கோளையும் மீனையும் ஓர்ந்தளந்ததோர் பாஸ்கரன் மாட்சியும் நம்பரும் திறலோடொரு பாணினி ஞாலம் மீதினில் இலக்கணம் கண்டதும் இம்பர் வாழ்வினிறுதிகண்டு உண்மையின் ...

இப்படித்தான் ஆரம்பம்-33

அர்த்தமுள்ள இந்துமதம் எழுதினாலும் கவிஞர் சமய உணர்வுகளுக்கு  அப்பாற்பட்டவர் என்பதற்குப் பல சான்றுகள் உண்டு.திருக்குரானை தமிழில் மொழிபெயர்க்க அவர் முற்பட்டார். அது குறித்து சிலர் அதிருப்தி தெரிவித்ததும் அப்பணியை நிறுத்திக் கொண்டதோடு இசுலாமிய சகோதரர்களுக்கு வருத்தம் தெரிவித்து நாளிதழ்களில் விளம்பரம் வெளியிட்டார். எனினும் இஸ்லாம் தமிழில் எனும் பிளாக் கவிஞர் மொழிபெயர்த்த முதல்பகுதியை  வெளியிட்டு  மகிழ்ந்துள்ளது. திறப்பு எல்லையிலா அருளாளன்இணையில்லா அன்புடையோன் அல்லாஹ்வைத் துணைகொண்டுஆரம்பம் செய்கின்றேன். * * * உலகமெலாம் காக்கின்றஉயர்தலைவன் அல்லாவே தோன்றுபுகழ் அனைத்திற்கும்சொந்தமென ...

இப்படித்தான் ஆரம்பம்-32

கவிஞர் எழுதத் தொடங்கி இருபத்தைந்தாண்டுகள் ஆனபோது தெய்வ வணக்கத்துடனும் தன்னடக்கத்துடனும் ஒரு கவிதை எழுதினார் அவர். அதிலொரு பிரகடனமும் செய்தார். இருபத்தைந்தாண்டுகள் எழுதினேன் என்பதால் என்னையான் போற்றவில்லை இன்னுமோர் காவியம் எண்ணுவேன் எழுதுவேன் இலக்கியம் தூங்கவில்லை என்றார். ஆனாலும் தொடக்க காலந்தொட்டே சில குறுங்காவிய முயற்சிகளைக் கவிஞர் மேற்கொண்டுள்ளார்.அவற்றுள் குறிப்பிடத்தக்கவை, மாங்கனி மற்றும் ஆட்டனத்தி ஆதிமந்தி. இவற்றில் முன்னே பழுத்தது மாங்கனி. கல்லக்குடி வழக்கில் தண்டிக்கப்பட்டு 1954 ல் சிறையிலிருந்த போது ஆறு நாட்களில் இதை எழுதினாராம் கவிஞர். சிறையிலிருக்கும் போது கடிதம் கட்டுரை காவியம் என்று பலவும் எழுதும் பழக்கம் தலைவர்களால் தொடங்கிவைக்கப்பட்டதுதானே. ...

இப்படித்தான் ஆரம்பம் – 31

கவிஞர் கண்ணதாசன் கோலோச்சிய களங்களில் கவியரங்கமும் ஒன்று. கவியரங்கம் என்னும் வடிவத்தை மக்கள் மத்தியில் கொண்டு  சென்றவர்களில் கவிஞரும்  கலைஞரும்  குறிப்பிடத்தக்கவர்கள். கவிஞர் காங்கிரஸ் இயக்கத்திற்குச் சென்ற பிறகு அங்கும் இந்த  வடிவத்தை  பிரபலப்படுத்தினார்.  கவியரங்குகளில் கவிஞரால் பாடப்பெற்று பல ஊர்கள்  பாடல் பெற்ற தலங்கள் ஆயின. தொன்மையான  சிறப்புகள்  கொண்ட  மதுரையைப்  பாடுகிற போதெல்லாம் கவிஞருக்குள் உற்சாகம்  பொங்கிப்  பிரவாகமெடுத்தது. அது  புதிய  கற்பனைகளைக்  கொண்டு  சேர்த்தது. நக்கீரனை மதுரையில் சிவபெருமான் நெற்றிக்கண்ணால் எரித்தது  பற்றி  திருவிளையாடல்  புராணம் பேசுகிறது. ஏன் சிவபெருமான் எரித்தார் என்பதற்கு கவிஞர், பரஞ்சோதி முனிவரும் சொல்லாத காரணமொன்றைச் சொல்கிறார். ‘மங்கையர்தம் கூந்தலுக்கு வாசமுண்டோ மணமென்பது இயற்கையிலே வருவதுண்டோ ...

இப்படித்தான் ஆரம்பம்-30

விடுதலைப் போராட்டத்திற்குப் பிற்பட்ட காலத்தில் தேசிய உணர்வு தீபோல் பரவிய சூழல் சீன யுத்தத்தின் போதும் பாகிஸ்தான் யுத்தத்தின் போதும் ஏற்பட்டது. இந்த இரண்டு  தருணங்களிலும், சந்நதம்  கொண்டு  சங்கெடுத்து  முழங்கினார்  கவிஞர். தன்னுடைய கவிதைகளின்  மூன்றாம் தொகுதியை  மங்கலமானதொரு வாழ்த்து கவிதையுடன் தொடங்குவார். பெற்றவர் வாழ்க!பெரியவர் வாழ்க! உற்றவர் வாழ்க !உறவினர் வாழ்க! கொற்றவன் கோட்டைக் கொடிமரம் வாழ்க! கொல்புலித் தானை கூட்டங்கள் வாழ்க ! தானைத்தலைவர் தனித்திறம் வாழ்க! தலைவர் அமைச்சர் சால்புற வாழ்க! என்று வாழ்த்து மலர்கள் வரிசையாய் பூத்துக் குலுங்கும் அந்தக் கவிதையில், எங்கள் பகைவர் எமையணுகாமல் தங்கள் பூமியில் தழைத்துயிர் வாழ்க என்று பாடியிருப்பார் ...
More...More...More...More...