Blog

/Blog

இப்படித்தான் ஆரம்பம்-29

தமிழிலக்கியத்தில் கையறு நிலைக் கவிதைகள் காலங்காலமாகவே உள்ளன. புரவலன் மறைந்த நாட்டில் நின்று கொண்டு புலவர்கள், முல்லையும் பூத்தியோ என்று கேள்வி எழுப்பினார்கள். தசரதன் மறைவு குறித்து கம்பன் எழுதிய கவிதை, எக்காலத்துக்கும் யாருக்கும் பொருத்தம் என்று கவிஞர் தன் கட்டுரை ஒன்றில் எழுதியிருக்கிறார்.   “நந்தா விளக்கனைய நாயகனே நானிலத்தோர்    தந்தாய்!தனியறத்தின் தாயே! தயாநிதியே!    எந்தாய் !இகல்வேந்தே ! இறந்தனையே!    அந்தோ!மற்றினி வாய்மைக்கு யாருளரே!” இது காந்திக்கும் பொருந்தும்,காமராஜருக்கும் பொருந்தும் என்பார் கவிஞர். கையறு நிலைக்கவிதைகளின் நெடும்பரப்பில் பாரதியும் பங்கேற்றான்.ஓவியர் ரவிவர்மா மறைந்த போது,    ...

வீரன் சிரிக்கிற கோலம்

கற்பகச் சோலையின் வண்ணத்துப்பூச்சிமேல் கல்லை எறிகிற வேடன்-இவன் சொப்புச் சமையலில் உப்புக் குறைவென சீறி விழுகிற மூடன் அற்பத் தனங்களின் பெட்டகம் ஒன்றினை ஆக்கிச் சுமக்கிற பாலன் -இவன் செப்பும்மொழியினில் செப்பம் கொடுத்தவன் செந்தூர் நகர்வடி வேலன் கானலின் ஓட்டத்தை கங்கையின் ஊட்டமாய் கண்டு உளறிய பேதை-இதில் வானப் பரப்பிடை வாழ்ந்திடும் மேகத்தை வாங்கியதாய் ஒரு  போதை ஊனின் சுகங்களில் ஊறிய நெஞ்சமும் ஊரைப் பகைத்திட்ட வேளை-நல்ல ஞான விடியலை நெஞ்சில் கொடுத்தது நாயகன் கந்தனின் லீலை ஓலமிடும் நெஞ்சில் ஓமெனும் நாதத்தை ஓங்கிடச் செய்தவன் யாரோ-அந்த நீலமயில்மிசை சூரியனாய் வந்து நேரில் ...

இப்படித்தான் ஆரம்பம் -28

ஜனநாயக சோஷலிசத்தின் தளகர்த்தராக காமராஜரைக் கண்ட கவிஞரின் கண்கள், அந்தக் கோட்பாட்டின் முதல் எதிரியாக ராஜாஜியை வரித்துக் கொண்டது. எனவே ஜனநாயக சோஷலிசத்தை வற்புறுத்திப் பாடுகிற இடங்களிலெல்லாம், கவிஞர் ராஜஜியைத் தாக்கவும் தவறவில்லை. 1965ல்  கோவையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில், இரண்டு பெண்களை ஒப்பிட்டு ஜனநாயக சோஷலிசத்தை விளக்க கவிஞர் முற்படுகிறார். ஒருநாள் வீட்டில் கவிஞர் ஓய்வாகப் படுத்திருந்தாராம். இருப்பவர்கள், இல்லாதவர்கள் இடையிலான  பள்ளத்தை  மாற்றுவது  பற்றிய  பெருங்கனவில்  கவிஞர் இருந்தாராம். அப்போது இருகைகள்  தன்  முகத்தைத்  தழுவக் கண்டு கண்கள் திறந்தாராம். இனி கவிஞரே தொடர்கிறார் ‘கழுத்து முதலாகக் கால்வரைக்கும் ஒருசீராய்ப் பருத்திருக்கும் என்மனைவி பக்கத்தில் நின்றிருந்தாள் முதலாளித் தத்துவத்தை முழுவடிவில் பார்த்ததுபோல் ...

இப்படித்தான் ஆரம்பம் – 27

காமராஜர் மீது கண்ணதாசன் கொண்டிருந்த பக்தி அபாரமானது. காமராஜர் மீதிருந்த ஈர்ப்பும், திராவிட இயக்கம் மீதிருந்த வெறுப்பும் சேர்ந்து கொண்டது. கவிஞரின் பாட்டுடைத் தலைவனாய் விளங்கினார் காமராஜர். “முழந்துண்டு சட்டைக்கும் முதலில்லாத் தொழிலாளி   பழனிமலை ஆண்டிக்குப் பக்கத்தில் குடியிருப்போன்  அரசியலைக் காதலுக்கு அர்ப்பணிப்போர் மத்தியிலே  காதலையே அரசியலில் கரைத்துவிட்ட கங்கையவன்” என்ற வரிகளும்,  “ஆண்டி கையில்ஓடிருக்கும் அதுவும் உனக்கிலையே” என்ற வரியும் காமராஜ் நேசர்களால் காதலுடன் உச்சரிக்கப்படுபவை. காமராஜரின் தலைமைப் பண்பு பற்றிய கவிஞரின் பிரமிப்பு, லால்பகதூர் ...

இப்படித்தான் ஆரம்பம் – 26

“அடிக்கடி கட்சி மாறுகிறீர்களே” என்று கவிஞர் கண்ணதாசன் அவர்களிடம் கேட்டபோது, “நான் மாறவில்லை! என் தலைவர்கள் மாறுகிறார்கள்!” என்று சொன்னார். அவருடைய மற்ற அரசியல் அறிவிப்புகளைப்போலவே தமிழகம் இதையும் வேடிக்கையாக எடுத்துக் கொண்டதுதான் வருத்தமான விஷயம். தாங்கள் வகுத்த கொள்கைகளிலிருந்து தலைவர்களே முரண்படுகையில் அந்தத் தலைவர்களுடன் கவிஞர் முரண்பட்டார் என்பதுதான் அந்த வாக்குமூலத்தின் பொருள். கவிஞர் கண்ணதாசன் மேற்கொண்ட அரசியல் மதிப்பீடுகளும், மாற்றிக்கொண்ட நிலைப்பாடுகளும் அவசரப்பட்டு எடுத்த முடிவுகள்போல் தோன்றக் கூடும். உணர்ச்சி வேகம் உந்தித் தள்ளி ஒவ்வொரு முடிவையும் அவர் எடுத்தார் என்று கருதுவதில் நியாயமிருக்கிறது. ஆனால் தீர யோசித்தால் அறஞ்சார்ந்த ...

இப்படித்தான் ஆரம்பம்-25

ஒரு மனிதன் தன்னையே ஆய்வு செய்கிறபோது கிடைக்கிற தெளிவு ஆயிரமாயிரம் அறநூல்களை வாசிப்பதால் வருகிற தெளிவைக்காட்டிலும் தெளிந்தது. உடல்நலனை ஆய்வு செய்ய மனிதனின் இரத்தமும் கருவிகளும் பயன்படுகின்றன. இந்த எச்சங்களாலும் ஒருவனைத் தக்கான், தகவிலன் என்று வரையறை செய்ய இயலும். அதேபோல மனிதனின் செயல்களே அவனைஅளப்பதற்கான கருவிகள். உணர்ச்சியின் கைப்பொம்மையாய் உலவுவதும், அறிவின் துணைகொண்டு ஆளுவதுமான இரண்டு வழிமுறைகளில் மனிதன் எதைத் தேர்வு செய்கிறான் என்பதை அவன் ஆய்வு செய்ய மறக்கும்போதுதான் அவனைப் பற்றி அடுத்தவர்கள் அதிகம் பேசுகிறார்கள். கவிஞர் கண்ணதாசன், தன்னை ஆய்வு ...
More...More...More...More...