இப்படித்தான் ஆரம்பம் – 19
அழுத்தமாக ஒட்டிக் கொள்ளும் தரமான கோந்து தயாரிக்கும் நிறுவனம் ஒன்று, தன் பொதுப்பங்குகளை அறிவிக்க முற்பட்ட போது தங்கள் நிறுவனத்தின் தயாரிப்பை மட்டுமின்றி பங்குகள் அறிவிப்பதையும் குறிக்கும் வி தமாக விளம்பரம் வெளியிட விரும்பியது. நவீன ஓவியர் ஒருவரை அர்த்தநாரீசுவரர் ஓவியத்தை வரையச் சொல்லி அதன்கீழ் ஒரு வாசகம் எழுதினோம்….The Ultimate Bond என்று. ஒவ்வொன்றுக்கும் உச்சப் படிமம் ஒன்றுண்டு. ஒருங்கிணைப்பின் உச்சப் படிமம் அர்த்தநாரீசுவரர். Bond என்கிற ஆங்கிலச் சொல்லின் இரண்டு அர்த்தங்கள் இங்கே கைகொடுத்தன. யானைகளின் உச்சம் ஐராவதம் என்பதாலும், பசுக்களின் உச்சம் காமதேனு என்பதாலும், “யானைகளில் நான் ஐராவதமாயிருக்கிறேன், ...
இப்படித்தான் ஆரம்பம் – 18
“அவள் ஒரு தொடர்கதை”திரைப்படத்தின் கதாசிரியர் திரு.எம்.எஸ்.பெருமாள். அமரர் சுகி.சுப்பிரமணியன் அவர்களின் புதல்வர்.திரு.சுகி.சிவம் அவர்களின் மூத்த சகோதரர். சென்னை தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும், வெவ்வேறு மாநிலங்களில் நிலைய இயக்குநராகவும் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அவரிடம் பேசிக்கொண்டிருந்த போது “தெய்வம் தந்த வீடு” பாடல் பற்றி அபூர்வமான தகவல் ஒன்றைச் சொன்னார். தன் சம்பாத்தியத்தால் குடும்பத்தைத் தாங்குகிற இளம்பெண், ஊதாரியாகவும், ஊர்சுற்றியாகவும் குடிகாரனாகவும் இருக்கும் அண்ணனை வீட்டிலிருந்து வெளியேற்றுகிறாள்.அண்ணன் கதாபாத்திரம் ஆர்ப்பாட்டமாக வெளியேறுவதுதான் கதை. அங்கே ஒரு பாடல்வைக்க வேண்டுமென ...
இப்படித்தான் ஆரம்பம் – 17
கவியரசர் கண்ணதாசன் மறைந்து சிலநாட்களுக்குப் பின், ஒரு கச்சேரிக்கான விமர்சனத்தில், தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார் கலை விமர்சகர் சுப்புடு. “கண்ணதாசனை தமிழில் புதிய சாகித்யங்கள் நிறைய எழுதுமாறு நான் கேட்டுக் கொண்டிருந்தேன். செய்து தருவதாக சொல்லியிருந்தார். அதற்குள் மறைந்து விட்டாரே’ என்று ஆதங்கப்பட்டிருந்தார் அவர். தமிழ் இசைமரபுக்கு மிகவும் புதிதான அம்சங்களை திரைப்பாடலிலேயே செய்தவர் கண்ணதாசன் என்பதால் தான் அப்படிக்கேட்டுக் கொண்டதாக சொன்ன சுப்புடு, “விரக தாபம் என்கிற விஷயம் இசைப்பாடல்களில் எழுதப்பட்டு வந்த விதத்தையும் கண்ணதாசன் கையாண்ட புதுமையையும் ...
இப்படித்தான் ஆரம்பம்-16
“எட்டாம் வகுப்புவரை எட்டத்தான் என்பெற்றோர் விட்டார் பின்னென்னை ஏழ்மையிலே விட்டார்” என்கிறார் கவிஞர் கண்ணதாசன். ஆனாலும் இலக்கண அறிவில் அவர் யாருக்கும் சளைத்தவரில்லை. வெண்பா தவிர மற்ற வடிவங்களில் எல்லாம் விளையாடியிருக்கிறார். குறிப்பாக அறுசீர் விருத்தத்தில் மன்னன். சினிமாவிலும் இலக்கண அதிசயங்களை வலிக்காமல் புகுத்தியவர் அவர். அதற்கோர் உதாரணம், அந்தாதி….ஒரு வாசகத்தின் கடைசிச்சொல் அடுத்த வாசகத்தின் ஆரம்பமாக இருப்பதே அந்தாதி…. இலக்கியத்தில் பொன்வண்ணத்தந்தாதி, கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி, அபிராமி அந்தாதி என்று பலவகைகள் உண்டு மூன்று முடிச்சு படத்தில் முக்கோணக் காதலில் மூன்று பேரும் பாடும் விதமாக அவர் எழுதிய அந்தாதிப் பாடல் வெகு பிரபலம். “வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள்” என்கிற பாடல் நம்மில் பலரும் நன்கறிந்ததுதான்.இருவருக்கு வசந்தகால நதியாகத் தோன்றுவது ஒருவருக்கு ...
இப்படித்தான் ஆரம்பம்-15
கண்ணதாசனின் கவித்துவம் கனல்வதற்கு முக்கியக் காரணம், வார்த்தைகள் வந்து விழும் அனாயசம். இந்த அனாயசத்தையும் எளிமையையும் விளக்க முடியாமல் இன்று பலரும் திணறுகிறோம். கண்ணதாசன் பாடல்களில் எளிமையாக வந்து விழும் வார்த்தைகளுக்குள் நூல்பிடித்துக் கொண்டே போனால் அது நம்மை வைரச்சுரங்கங்களிலே கொண்டுபோய் சேர்த்து விடுகிறது. நீண்ட நாட்களுக்குப்பின் “கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா” பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தேன். பொதுவாக காதல் பாடல்களில் வரும் வர்ணனைகள் பெண்ணை ஆதர்சப் பெண்மையாகவும், தாய்மையின் தழலாகவும் சித்தரிப்பது ரொம்ப அபூர்வம். சீதைக்கு, வனவாசத்தில் ...