வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்!
5.தோல்வி சகஜம்… வெற்றி-? தோல்வி சகஜமென்றால் வெற்றி, அதைவிட சகஜம்! இதுதான் வெற்றியாளர்களின் வரலாறு. இந்த மனப்பான்மை வளருமேயானால் தோல்வி பற்றிய அச்சம் துளிர்விடாது. இதற்கு நடைமுறையில் என்ன வழி? இதைத்தான் உங்களுடன் விவாதிக்கப்போகிறேன். உலகில் பெரும்பாலானவர்கள் செயல்படாமல் இருக்கக் காரணம், தகுதியின்மை அல்ல. தோல்வி அடைவோமோ என்கிற அச்சம்தான். தோல்வி பற்றிய அச்சம் நமக்குக் கூடாதென்றால், முதலில் தோல்விக்கும் வெற்றிக்கும் இருக்கிற சம்பந்தத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும். நாம் எதைச் செய்தாலும் அதற்கு இரண்டே வழிகள்தான். ஒன்று ...
வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்!
4. இவர் நீங்களாகவும் இருக்கலாம்! அவர் ஒரு பெரிய தொழிலதிபர். சர்வதேசப் புகழ்பெற்ற பிரமுகர். சுயமுன்னேற்றம் குறித்து இளைஞர்கள் மத்தியில் பேசியும் எழுதியும் வருபவர். விமானப் பயணங்களை அடிக்கடி மேற்கொள்வார். அப்படி ஒரு பயணத்தின்போது, விமானப் பணிப்பெண் அவரிடம் வந்தார். தலைமை விமானி, தன்னுடைய விருந்தினராக அந்தத் தொழிலதிபரை ‘காக்&பிட்’டிற்கு அழைப்பதாகக் கூறியதைக் கேட்டதும் தொழிலதிபருக்கு ஆச்சரியம். காக் – பிட்டிற்குள் நுழைந்த அவரை சிரித்த முகத்துடன் வரவேற்றார் விமானி. “நான் கல்லூரி மாணவனாக இருந்தபோது உங்கள் பேச்சைக் ...
வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்!
3. வாழ்க்கைப் பயணத்திற்கு வரைபடம் உள்ளதா? புதிய மாநகரம் ஒன்றில் போய் இறங்கியதுமே நாம் செய்கிற முதல் காரியம், அந்த ஊரின் வரைபடத்தை விரித்து வைத்துக்கொள்வதுதான். நாம் இருக்கும் இடத்திலிருந்து போக வேண்டிய இடம் வரையில், விரலை நகர்த்திப் பார்த்து திருப்திப்பட்டுக் கொள்வோம். அப்போதே வந்த காரியம் பாதி முடிந்தது என்கிற நிம்மதி ஏற்படும். இதற்கே இப்படியென்றால், வாழ்க்கைப் பயணத்திற்கு வரைபடம் முக்கியமில்லையா? வாழ்க்கை என்றதும் பிறப்பு முதல் இறப்புவரை எனறு புரிந்துகொண்டு தத்துவார்த்தமாக எண்ணத் தொடங்க ...
வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்!
2.“முடியாது” என்று சொல்லமுடிகிறதா உங்களால்? “ஓ! அப்படீங்களா… அதுக்கென்ன பண்ணிடலாம்! நிச்சயம்! என்னங்க. அதெல்லாம் ஒண்ணும் பிரச்சினையில்லை! உங்களுக்குச் செய்யலாமா? நல்லதுங்க.. வெச்சுடறேன்!” தொலைபேசியை வைத்த மாத்திரத்தில், “வேற வேலை இல்லை! இருக்கிற வேலை போதாதுன்னு இது வேறே” என்று முணுமுணுத்துக்கொண்டே புதிய வேலை ஒன்றை வேண்டா வெறுப்பாகத் தொடங்குபவரா நீங்கள்? அப்படியானால், “முடியாது” என்று சொல்லமுடியாதவர் நீங்கள். பெரும்பாலும், மற்றவர்கள் தவறாக எண்ணிக்கொள்வார்கள் என்கிற பயத்தில்தான் நம்மால்முடியாத வேலைகளையும் இழுத்துப்போட்டுக் கொண்டு கொண்டு சிரமப்படுகிறோம். “நீங்க ...
வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்!
நமது வீட்டின் முகவரி – 18 “அலுவலகத்தில் ஏற்படும் கருத்துவேறுபாடுகள் என்னைப் பதற்றமடையச் செய்கின்றன” என்றார், என்னைச் சந்தித்த ஒரு நண்பர். கருத்துவேறுபாடுகள் தவறானதல்ல. தனி மனிதர்கள் ஒரே இடத்தில் சேரும்போது, ஒரேவிதமான கருத்தைக் கொண்டிருப்பது சாத்தியமில்லை. ஆனால், கருத்து வேறுபாடுகள் வீண் பிடிவாதத்தாலோ அகங்காரத்தாலோ விளைந்தால், அது அலுவலக சூழலைப் பாதிக்கும். கருத்துவேறுபாடுகளில் பெரும்பான்மையானவை தவறாகப் புரிந்துகொள்வதன் விளைவாகவே ஏற்படுகின்றன. கணவன் மனைவி இருவரும் காரில் போய்க் கொண்டிருந்தனர். கணவரைப் பார்த்து, “சோர்வாக இருக்கிறீர்களே! காபி ...
வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்!
நமது வீட்டின் முகவரி – 17 “மேலாளர் கீழாளர் பேதங்கள் இல்லாமல் மெய்யாள வந்த பெருமான்” என்று கவிஞர் கண்ணதாசன் ஒரு முறை முருகக் கடவுளைப் பற்றி எழுதினார். இது முருகனுக்குப் பொருந்தும். முதலாளிக்கும் பொருந்துமா? இந்த சந்தேகம் அலுவலக நிர்வாகங்களில் அடிக்கடி எழக்கூடியதுதான். தனக்குக் கீழ் வேலை பார்ப்பவர்களை நணபர்களாக்கிக் கொள்வதோ, மேலதிகாரிகளை நண்பர்களாக்கிக் கொள்வதோ அலுவலகச் சூழலுக்கு அவசியம்தானா? இது குறித்து மேலைநாடுகளில் பெரும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதுண்டு. 1982இல், மார்ட்டிமர்ஃபீன்பர்க் என்கிற உளவியல் ஆய்வாளர் ...