இப்படித்தான் ஆரம்பம் -9
கடைக்கோடி மனிதனின்மனசு வரைக்கும் கண்ணதாசன் ஊடுருவியிருப்பதுபோல் இன்னொரு கவிஞர் ஊடுருவியிருப்பாராஎன்பது சந்தேகமே.கண்ணதாசனின் இந்த வெற்றிக்கு என்ன காரணம் என்று பலமுறை யோசித்திருக்கிறேன். மனித சமூகத்திற்கு எப்போதுமே இரண்டுபேர் தேவை.ஓர் உல்லாசி.ஓர் உபதேசி.தமிழ்ச்சூழலில் இந்த இரண்டுமாக இருந்தவர் கண்ணதாசன்.மிதமிஞ்சிய உல்லாசங்களே உபதேசங்களை உருவாக்குமல்லவா? இன்றும் சமூகம் வாழ்வைத் துய்ப்பவனை வியப்போடு பார்க்கிறது.வாழ்க்கை என்றால் என்னவென்று விளக்குபவனை மதிப்போடு பார்க்கிறது. வியப்போடும் மதிப்போடும் கண்ணதாசனை ஆராதித்த பீளமேடு கவியரசு கண்ணதாசன் கலை இலக்கியப் பேரவை நண்பர்கள் கண்ணதாசனைப் போலவே வெள்ளந்தி ...
இப்படித்தான் ஆரம்பம்-8
“ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் ஏதோவொரு தருணத்தில் என்னுடைய பாடல் எதிரொலிக்கும்”என்றார் கவியரசு கண்ணதாசன்.தன் வாழ்வின் எல்லாத்தருணங்களிலும் கண்ணதாசனின் பாடல் ஒலிப்பதாய் உணர்ந்த பலரை நான் பார்த்திருக்கிறேன். இலக்கிய அமைப்புகள் சார்பாகக் கண்ணதாசன் விழாக்கள் நடத்துவதில் ஆரம்பித்து,சசி போன்ற நிறுவனங்கள் துணையுடன் நடத்திய கண்ணதாசன் விழாக்கள்,மற்றும் உலகின் பல நாடுகளில் கண்ணதாசனைப் பற்றிப் பேசிய அனுபவங்கள்,அனைத்துமே எனக்கோர் உண்மையை உணர்த்தின. தமிழ்மக்கள்,தங்கள் அந்தரங்கத்தில் நுழைந்த கவிஞராகக் கண்ணதாசனைக் கான்கிறார்கள். தங்கள் தனிவாழ்வின் அனுபவங்களை,வளமான தமிழால் பாடிய கவிஞராக மட்டுமின்றி,வாழ்வு ...
இப்படித்தான் ஆரம்பம்-7
பீளமேடு, தொழிலாளர்கள் நிறைந்த பகுதி.கண்ணதாசன் பேரவையிலிருந்த பலரும் தொழிலாளர்களே.அவர்கள் வாழ்க்கைமுறை எனக்குப் பரிச்சயமில்லாத ஒன்று.ஹாஃப் நைட்,ஃபுல் நைட் என்றெல்லாம் பலதும் சொல்வார்கள்.சிங்கை முத்து,பேரவைக்காக அறை ஒன்றைக் கொடுத்திருந்தார்.அதுவரை பைந்தமிழ் அச்சகத்தில்தான் பேரவை நண்பர்கள் கூடுவார்கள்.நான் வாரம் ஒருமுறையாவது அங்கே செல்வதுண்டு. காலையில் மில்லுக்குப் போகும்முன் காளிதாஸ் சைக்கிளை உருட்டிக் கொண்டே பேரவைக்கு வருவார்.அவர் வருகிற போது பேரவை நண்பர்கள் யாரும் இல்லாவிட்டால் பிரச்சினையில்லை”பொட்டாட்டம்” மில்லுக்குப் போவார்.பேரவை உறுப்பினர் ஒருவரைப்பார்த்தாலும் காளிதாசுக்குள் கண்ணதாசன் இறங்கி விடுவார்.கோட்டையை விட்டு வேட்டைக்குப் ...
இப்படித்தான் ஆரம்பம்-6
கனவுகளுடன் தொடங்கப்படும் அமைப்புகள் காற்றில் கலைவதும்,காற்றில் கட்டப்படும் சீட்டுக்கட்டு மாளிகைகள் காலூன்றி எழுவதும்,புதிதல்ல.பீளமேடு கவியரசு கண்ணதாசன் கலை இலக்கியப் பேரவை தொடங்கப்பட்ட நாட்களில் எனக்கு அதன்மேல் பெரிய நம்பிக்கை இருக்கவில்லை. முதல்காரணம்,அதற்குத் தலைவர்,உள்ளூர் அரசியல் பிரமுகர்.இரண்டாவது காரணம்,அந்த அமைப்பில் பெரும்பங்கு வகித்த ஆலைத்தொழிலாளர்கள். அரசியல் பிரமுகர்கள் ஏற்கெனவே தங்களை ஓர் அரசியல் அமைப்பில் ஈடுபடுத்திக் கொண்டிருப்பார்கள். ஆலைத் தொழிலாளர்கள் ஏதேனுமோர் அரசியல் சித்தாந்தத்தின் ஆளுகைக்குள் இருப்பார்கள். எனவே கலை இலக்கிய அமைப்பொன்றைத் தொடங்கிவிட்டார்களே தவிர தொடர்வார்களா என்கிற ...
ஓசை எழுப்பும் உள்மனமே
வீசிய பந்தின் விசைபோலே வெய்யில் நாளின் திசைபோலே ஏசிய வார்த்தையின் வலிபோலே எழுதி முடியாக் கவிபோலே பேசிட முடியாத் தீவிரமாய் பேறுகாலத்தின் ஆத்திரமாய் ஓசை எழுப்பும் உள்மனமே உண்மைகள் தூங்கட்டும் உன்னுடனே எல்லாச் சொல்லையும் சொல்வதெங்கே எல்லாக் கனவையும் காண்பதெங்கே நில்லாப் பொழுதுகள் மீள்வதெங்கே நினைவுகள் அனைத்தையும் வாழ்வதெங்கே கல்லால் எறிந்த காயங்களே கண்ணைக் கட்டிய மாயங்களே பொல்லா விடுகதைப் பொழுதுகளே போதிக்க என்னென்ன பாடங்களே உலகை வெல்வதும் ஒருபொழுது உவகை மிகுவதும் ஒருபொழுது நிலைகள் குலைவதும் ...
இராமனிடம் சில கேள்விகள்
சித்திர மாடத்தின் மேலிருந்து-அந்தச்சீதைதன் தாய்மடி பார்த்திருந்தாள்எத்தனை நெஞ்சுரம் காகுத்தனே-உன்அத்தை மடியினில் நடந்துவந்தாய் கல்லாய்க் கிடந்த அகலிகையும்-உன்கால்துகள் பட்டதும் பெண்ணானாள்முள்ளாய் முளைத்த தாடகையும்-உன்மோதுகணை பட்டேன் மண்ணானாள்? நாத மொழிகேட்ட சபரியுமே-உனைநேர்கொண்டு பார்த்ததில் வீடுபெற்றாள்காதல் மொழிசொன்ன சூர்ப்பநகை-உன்கண்களில் பட்டென்ன பாடுபட்டாள் காதல் நெருப்பில் சிலகாலம்-கொடுங்காட்டு நெருப்பினில் சிலகாலம்ஆதரவில்லாமல் தென்னிலங்கை- மண்ணில்அச்ச நெருப்பினில் சிலகாலம் கற்பின் பெருங்கனல் சானகியும்-அய்யோகண்ட துயரங்கள் பார்த்துவிட்டாய்அற்புதப் பெண்ணவள் வாடும்படி-நீஅக்கினி யில்இட்டு வாட்டிவிட்டாய் வாலியை மட்டுமா?யாரையும்நீவாழ்வினில் நேர்படக் கொல்வதில்லைகால்ன் எனுமம்பை ஏவுகிறாய்-எவர்கண்களின் முன்னும்நீ செல்வதில்லை எல்லாம் மறைபொருள் ...