Blog

/Blog

ஜீவநதியொன்று….

திருவடித் தாமரை மலர்ந்தது தேன்துளி என்னுள் நிறைந்தது குருவடிவாக அருளுருவாக குளிர்மழை இங்கு பொழிந்தது-என் கொடும்வினை எல்லாம் கரைந்தது   சுடுமணல் வழியினில் தினம்நடந்தேன்-ஒரு தருநிழல் தேடியே தினம்நடந்தேன் திருமுகம் அறிந்ததும் மனம் குளிர்ந்தேன்-உன் அருளெனும் சுனையினில் உயிர்நனைந்தேன் தாவரம் ஒன்றின் தவிப்படங்க ஜீவநதியொன்று தரையிறங்க அடடா…இதுஎன்ன அதிசயமோ அதுதான் அதுதான் ரகசியமோ வினைகளின் வலையினில் நேற்றின்சுகம் புதிரென்று விரட்டிடும் பார்த்த சுகம் கதவுகள் திறந்ததும் காற்றின்சுகம் குழலினில் மிதந்திடும் பாட்டின் சுகம் ஏங்கிடும் வாழ்வினில் ஏதுசுகம் ...

ஆடலில் பேசிடுவான்

கீற்று நிலாவினில் பாலினை ஊற்றிக் கிறுக்கன் தலைசுமந்தான் ஊற்றி விடுமென்ற அக்கறை இன்றி ஊர்த்துவம் ஆடுகிறான் ஈற்றினை அறியா வான்வெளியெங்கும் ஈசன் ஆடுகிறான் போற்றி யிசைக்கிற விண்மீன் திரள்களின் பாட்டினுக் காடுகிறான் நாதம் இவனது நாபியில் பிறந்தது நாளும் புதிய ஸ்வரம் பாதம் அசைந்திட பூமி சுழலுது பொழுதுகள் இவனின் வரம் வேதம் இவனது வார்த்தையில் மலர்ந்தது வானம் இவனின் தவம் மோதி அலைகிற பேரலை யோசிவன் மூச்சினில் உருண்டு வரும் சாத்திரம் கிரியைகள் சார்புகள் அனைத்தையும் ...

லிங்க பைரவி

பைரவி வந்தாள் பைரவி வந்தாள் பத்துத் திசையதிர ஷங்கரி வந்தாள் ஷாமளை வந்தாள் எங்கள் உளம் குளிர கண்ணொரு மூன்றிலும் மின்னும் நெருப்புடன் அன்னை உருவெடுத்தாள் எண்ணிய காரியம் யாவும் நடத்திட இங்கு குடிபுகுந்தாள் யோகத் தலமல்லவா-இது தியானத் தலமல்லவா மோகத்திருவுருவாய்- எங்கள் பைரவி வந்தமர்ந்தாள் லிங்க வளாகத்திலே-ஒரு ரௌத்திரக் கோலத்திலே பொங்கும் ஒளியாக-அன்னை பேரருள் செய்ய வந்தாள் கேட்ட வரம் கொடுப்பாள் -அன்னை கேடுகள் நீக்கிடுவாள் ஆட்டங்கள் ஆடிடுவாள் -அன்னை அச்சந் தொலைத்திடுவாள் ஊட்டங் கொடுத்திடுவாள்-அன்னை ...

சத்குரு பிறந்தநாள்-செப்டம்பர் 3

நீவந்த நாளின்றுதானோ-இதை நீசொல்லி நான்நம்புவேனோ வான்வந்த நாள்தானே நீவந்தநாள்-மலரில் தேன்வந்த நாள்தானே உன் பிறந்தநாள் ஆதார சுருதிக்கு ஆண்டேது நாளேது அய்யாநீ அதுபோன்ற சங்கீதமே பேதங்கள் ஏதொன்றும் பாராத திருவேநீ பிரபஞ்சங்கள் முழுமைக்கும் பூபாளமே முடிவேதும் இல்லாத ஆகாயமே-உன் மடிமீது நான்கூடப் பூமேகமே படியாத என்னெஞ்சம் படிகின்ற இடமாகும் மலராக அசைகின்ற உன்பாதமே- உன்பார்வைஒளியாக என்னெஞ்சம் அகலாக என்னுள்ளே ஒருஜோதி உருவானதே என்மோகப் புயல்வீச என்தேகம் அலைபாய நீதந்த ஒளிமட்டும் நிலையானதே நீதந்த பாதைதான் நான்செல்வது-அதில் நான்வீழும் ...

நெரூர்-சதாசிவ பிரம்மேந்திரர் சந்நிதியில்

முன்பொரு பிறவியில் முகம்பார்த்தேன் -உன் மோன நெருப்பிலென் வினை தீர்த்தேன் பின்னரும் பிறவிப் பிணிசேர்த்தேன் -உன் பொன்னிழல் சேர்ந்திடும் வழிகேட்டேன் கருவூர் குடிபுகும் உயிருக்கெல்லாம்- நல்ல கதிதர உனக்குத் திருவுளமோ நெரூரில் அமர்ந்த நல்லொளியே- உன் நெஞ்சினில் எனக்கும் ஓரிடமோ திக்குகள் அம்பரம் என்றிருந்தாய்-கொண்ட தேகத்தின் எல்லைகள் தாண்டிநின்றாய் பக்கபலமே சதாசிவமே-எங்கள் பிரம்மேந்திரனே அருள்தருவாய் மின்னல் தெறிக்கும் அருள்நாதம்-அன்று மணலில் எழுதிய உன்கீதம் நின்று நிலைக்கும் அவதூதம் -உன் நிசப்தம் தானே சதுர்வேதம் 2 ஞான சதாசிவமே ...

வரமா சாபமா வார்த்தைகள்??

சொல்லால் கனத்தமனம் சூனியத்தால் இன்பமுறும் நில்லா நினைவுகள் நின்றுவிடும்-பொல்லாக் குரங்கு மனமிதுவுங் குன்றேறி நிற்கும் விரல்பறிக்கும் ஞானக் கனி. சச்சரவுக் கிச்சையாய் சாடுகிற சாட்டையும் உச்சரிக்கும் சொல்லென் றுணர்வோமே-நச்சரிக்கும் வார்த்தைகளைச் சாடி வரிசையிலே வாவென்று சீர்த்தமதி சொன்னால் சுகம் பாலை சுடுமென்றல் பழையகதை: மௌனத்தின் சாலையிலே சூளையும் சோலைதான் – லீலையிதை ஆக்குபவள் யாரென் றறியாமல் ஆடினால் பாக்குவைக்க நேரும் பழிக்கு. நாவு புரள்கையிலே நாமும் புரள்கின்றோம் கோவில் புறாபோலக் கூச்சலிட்டு-ஆவலாய் சேர்த்துவைத்த சொந்தம் சுடுதணலாய் ஆவதும் ...
More...More...More...More...