Blog

/Blog

நவராத்திரி கவிதைகள் (14)

1.குமரித் தெய்வம் சின்னஞ் சிறுமியிவள்- நம் செல்வக் குமரியிவள் என்னில் நிறைந்திருக்கும்-ஓர் இன்பக் கவிதையிவள் தன்னந் தனிமையிவள்-உயர் தாய்மைக் கனிவு இவள் பொன்னில் எழுதிவைத்த -ஒரு புன்னகை ஜோதியிவள் வாலைக்குமரியிவள்- நம் வாழ்வின் பெருமையிவள் மூலக் கனலாகி- நிற்கும் மந்திர ரூபம் இவள் நீலக் கடலருகே-வாழும் நித்திய கன்னியிவள் காலம் உணராத -பெரும் காதல் கனவு இவள் மூன்று கடல்கள் தொழும்-ஒரு மோனத் தவமும் இவள் நான்கு மறைகளுக்கும்-நல்ல நாயகத் தெய்வம் இவள் தோன்றும் புலனைந்தும் -நின்று ...

அதே முகம்……அதேசுகம்…..

15.10.2009 திருக்கடையூர் அதே முகம்……அதேசுகம்…..அன்று தொலைந்ததே அதே இதம் நெஞ்சில் நிறைந்ததே அவள் பதம் பிறவி பலவாகப் பார்த்த முகம் -என்கனவில் பலநேரம் பூத்த முகம்மறந்து கிடந்தாலும் தேடும் முகம்-ஒருமறுமை இல்லாமல் சாடும் முகம் தீப ஒளியோடு தெரிந்த முகம் -என்திசைகள் எல்லாமே அறிந்தமுகம்நாபிக்கமலத்தில் எழுந்தமுகம் – என்நாடி நரம்பெங்கும் நிறைந்த முகம் அமிர்தலிங்கத்தில் லயித்த முகம்- அவன்அருந்தும் நஞ்சோடித் தடுத்த கரம்குமுத மலர்போலக் குளிர்ந்த முகம்-திருக்கடவூர் தலம்காக்கக் கனிந்த முகம் திறந்தும் திறவாத விழியழகும்-அருள்துலங்கும் இதழோடும் ...

உதிக்கின்ற செங்கதிர்…

2009 அக்டோபர் 15. திருக்கடையூரை நெருங்க நெருங்க அதிகாலை வேளையில் செந்நிலவாய் எழுந்தது சூரியன்.அங்கேயே நிகழ்ந்தது அபிராமி தரிசனம் புதிரின் விடைபோலப் புலரும் இளங்காலை…. கதிரை நிலவாக்கினாள் அதிரும் மனம் ஓய அருளும் அபிராமி அகிலம் எனதாக்கினாள் பதங்கள் அசைந்தாட பட்டர் தமிழ்பாட இருளை ஒளியாக்கினாள் இதயம் அவள்கோயில் எதுவும் அவள்பூசை எனையும் களியாக்கினாள் அகலின் முனையோடு ஒளிரும் சுடரோடு அழகு நகைகூட்டினாள் இகமும் இனியேது பரமும் இனியேது எல்லை அவள்காட்டினாள் சுகங்கள் இவன்வாழ்வில்-சுமைகள் அவள்தாளில் நொடியில் ...

குற்றாலக் கதகதப்பில்

நீரலையின் சாட்டைகொண்டு ஆடுகிறாள் அன்னை நேரவரும் யாவரையும் சாடுகிறாள் அன்னை பேரொலியின் தாளமிட்டுப் பாடுகிறாள் அன்னை பாய்ந்துவந்து எனையணைக்கத் தேடுகிறாள் அன்னை ஆடுகிறாள் அன்னை-அவள் -தேடுகிறாள் என்னை வான்கருணை அருவியாக வந்து இறங்கும்-அதில் ஊன்நனைந்து உயிர்நனைந்து உள்ளம் மயங்கும் நான்தொலைந்து போக அங்கே நேரம் அரும்பும் தேன்பொழிந்து தேன்பொழிந்து தேங்கி நிரம்பும் நேரம் அரும்பும்-தேன் -தேங்கி நிரம்பும் வினைகரைக்கும் கருவியைத்தான் மேனியென்கிறோம் விரைந்துவிழும் அருவியைத்தான் ஞானியென்கிறோம் கனவினிலே காணும் இன்பம் கானலென்கிறோம் கண்னெதிரே விழும் அருவி காளியென்கிறோம் ...

காசிக்காற்று

காசிநகரில் கங்கை வீசும் நதியலைகள் பேசும் மொழிநமசி வாயம் கீசுகீசெனவே பூசலிடுங்கிளிகள் பாஷை அதுநமசி வாயம் ஆசைவிடும்தருணம் ஆகிவரும் மரணம் வாசல் வரும்நமசி வாயம் பாசம் விடும்மனதும் பாரம் சுடும்நொடியில் ஈசன் குரல்நமசி வாயம் இமைகள் கதவடைய இதயம் மடையுடைய அமைதி அதுநமசி வாயம் சுமைகள் சிறகசைய சுடலை விறகெரிய சுடரும் ஒளிநமசி வாயம் இமயம் மனவெளியில் எழும்பும் ஒருநொடியில் நிரம்பும் பனிநமசி வாயம் சமயம் அமைந்துவர சுயங்கல் உணர்ந்தவுடன் கனியும் கனிநமசி வாயம் கடலில் புயலசைய ...

சோடா தமிழர் பானமா ?

நண்பர் சுகா எழுதிய கட்டுரை ஒன்றைக் குழுமத்தில் படித்த நண்பர் துகாராம், சோடா தமிழர் பானமா என்ற கேள்வியை எழுப்பினார்.அது தமிழர் பானமே, கோலி சோடாவில் அடைபட்டிருப்பது தமிழர் மானமே என்று நிறுவி நான் எழுதிய ஆய்வுக் கட்டுரை(?). இது தொடர்பாக வழங்கப்படும் கவுரவ டாக்டர் பட்டங்கள் கண்டிப்பாக ஏற்கப்பட மாட்டாது ஓடா நீர்நிலை உலர்மரக் கோடை பாடாப் புள்ளினம் பயிலாப் புல்வெளி நீடார் வெம்மை நீங்கிடத் தமிழர் சோடா பருகிச் சுகம் பெறுவாரே” என்னும் பழம்பாடல் ...
More...More...More...More...