நிலாப்பாட்டு
கம்பன் கவியாய் கலையெழிலாய் அம்புலி சிரித்திடும் அழகாக அம்மன் வீசிய தாடங்கம் அதைத்தான் நிலவென்பார் பொதுவாக மின்னல் இழைகளின் கோலங்கள் முழுமை பெறுவதே முத்துநிலா தென்றல் கடைந்த வான்தயிரில் திரளும் வெண்ணெய் பட்டுநிலா கனவில் சூரியன் காணுகிற காதல் முகமே அழகுநிலா மனதில் தினமும் பௌர்ணமியாய் மல்லிகை மலர்த்தும் முழுமைநிலா கோள்களாம் அகல்களின் ஒளியினிலே கார்த்திகை தீபம் ஏற்றும்நிலா நாள்கள் என்கிற நாடகங்கள் நகையுறக் கண்டே நகரும்நிலா கார்த்திகைப் பெண்களின் முலைப்பாலாய் கந்தன் கனியிதழ் வழிந்தநிலா கார்நிறக் ...
திருக்கடையூர்-பாடசாலைப் பசங்கள்
திருக்கடையூரில் பிச்சைக்கட்டளை எஸ்டேட் சார்பில் தேவாரப் பாடசாலை ஒன்றையும் தாத்தா நடத்தி வந்தார்கள்.திருமுறைகள், அபிராமி அந்தாதி ,திருப்புகழ் போன்றவற்றைப் பயிற்றுவிக்கும் வகுப்புகள் தினமும் நடக்கும்.பயிற்சி முடிவில் சான்றிதழ்கள் தரப்படும். பயிற்சி பெற்றவர்கள்,கோயில்களில் ஓதுவார்களாகப் பணிக்குச் சேரலாம்.பல ஆண்டுகள் தங்கிப்பயில வேண்டிய குருகுலமாக இருந்தது அது. திருத்தணி சுவாமிநாதன் கூட்தொடக்கத்தில் அங்கே பயின்றவர்தான். பாடாசாலைக்கென்றே தேவார ஆசிரியர், புல்லாங்குழல் வித்வான் ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர். படிக்க வரும் பசங்களுக்கு உணவு, தங்குமிடம், ஆடைகள் ,அனைத்தும் இலவசம். ரத்தினம் பிள்ளை என்பவர் ...
திருக்கடையூர்-“சாப்பிட வாங்க”
சென்னையில் உள்ள உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கர் ஒருமுறை என்னிடம்,கோவைக்காரர்களுடன் சாப்பிட உட்காரும்போது ஒரு சிரமம்.வேண்டாம் வேண்டாம் என்றாலும் வற்புறுத்தித் திணிக்கிற “அக்ரஸிவ் ஹாஸ்பிடாலிடி” உண்டு என்றார். அந்த வார்த்தை எனக்குப் புதுசு.ஆனால்,திருக்கடையூரில்எங்கள் தாத்தா வீட்டில் இந்த விதமான விருந்தோம்பலை எல்லா நாட்களும் பார்க்கலாம்.விருந்தாளிகள் சாப்பிட மறுக்கும் போது,விருந்தோம்பலை ஒரு நிகழ்த்துகலையாகவும் வன்முறையாகவும் நிகழ்த்துவார் எங்கள் தாத்தா, கனகசபைப்பிள்ளை. எங்கள் தாத்தா கனகசபைபிள்ளை திருக்கடவூரில் பெரிய நிலச்சுவான்தார். அபிராமி அம்பாள் ஆலயத்தின் பரம்பரை அறங்காவலர் குடும்பம் எங்களுடையது .350 ...
No Title
அந்த சதுரங்கம் முடிந்துவிட்டதுஅவர்களின் பக்கம் விடிந்துவிட்டது வெட்டுப்பட்ட காய்கள்,வழியில்தட்டுப்பட்டதால் இந்தத் தகவல் தெரிந்தது குறுக்கும் மறுக்குமாய் குதிரைகள்திரிந்தனமதங்கொண்ட யானைகள் மிதித்து எறிந்தனகட்ட ஒழுங்குகள் காப்பாற்றப்படாததால்சட்ட ஒழுங்கு சிதைந்து போனது அந்த சதுரங்கம் முடிந்துவிட்டதுஅவர்களின் பக்கம் விடிந்துவிட்டது தளபதி ராஜா ராணிக் காய்களின்தலைகளைப் பார்த்ததாய் தகவல் கிடைத்ததுபலகை முழுவதும் படர்ந்த குருதியைஉலக நாசிகள் முகர்ந்துபார்த்தன முன்படை வெட்ட முனைப்புடன் சென்றவர்தன்படை வெட்டால் தரையில் விழுந்தனர்பின்படை ஒன்று பகடைகள் உருட்டிநன்படை சாய்த்ததாய் நம்பகத் தகவல்அந்த சதுரங்கம் முடிந்துவிட்டதுஅவர்களின் பக்கம் விடிந்துவிட்டது ...