7.நேனோ பெயர் ஏனோ?
குறைந்த விலையில் சிறந்த தரம் என்பது சாத்தியமே இல்லாத விற்பனை சாமர்த்தியம் என்பது பொதுவான எண்ணம். சொல்லப் போனால், பாமரர்களை நம்பும் வியாபாரங்களில் பேசப்படுகிற ஆசை வார்த்தைகள் என்றும் அவற்றை சொன்னவர்கள் உண்டு. கோடாரி உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் ஒரு குண்டூசி வாங்கினால்கூட அந்த செலவு வாடிக்கையாளர்கள் தலையில்தான் விழும் என்பது நுகர்வோர்களின் நம்பிக்கை. இதையெல்லாம் கடந்து, நியாயமான விலை, நிகரில்லாத தரம் என்பதை ஒரு நிறுவனத்தின் கோட்பாடாக மக்களை நம்பவைப்பதும், அதன்படியே நிற்பதும், சந்தையில் நிற்கும் ...
6.கேள்விக்கு என்ன பதில்?
இன்றைய மார்க்கெட்டிங் துறையை சவால் மிக்கதும் சுவாரஸ்யம் மிக்கதுமாக ஆக்கியிருப்பது எது தெரியுமா? வாடிக்கையாளர்கள் பார்வையாளர்களாக இருந்த நிலை மாறி, வாடிக்கையாளர்கள் கண்காணிப்பாளர்களாக மாறியிருப்பதுதான். நுகர்வோர் விழிப்புணர்வு என்பது வாடிக்கையாளர்களை எதையும் எளிதில் நம்பாத நிலைக்கு ஆளாக்கியிருக்கிறது. ஓர் ஆராய்ச்சியாளரின் கவனத்துடன் அவர்கள் தகவல்களை ஆய்வு செய்கிறார்கள். போட்டித் தயாரிப்புகளின் சிறப்பம்சங்களைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஒரு தயாரிப்புக்கு அதன் தரத்தின் அடிப்படைடியில் முக்கியத்துவத்தையும் நம்பகத்தன்மையின் அடிப்படையில் முன்னுரிமையயும் தருகிறார்கள். முன்பெல்லாம், ஒரு நாற்காலி வாங்கப் போகிற இடத்தில்கூட ...
5.தரமான அனுபவம் தாருங்கள்
தயாரிப்புகளில் அவ்வப்போது கொண்டுவரும் மாற்றங்களை மார்க்கெட்டிங் செய்வதுதான் சந்தையின் சவால்களில் முக்கியமானது. குளிர்பான உலகம் என்னும் குதிரைப் பந்தயத்தில் மாறி மாறி முந்துபவை இரண்டு. கோக் மற்றும் பெப்ஸி. போன நூற்றாண்டின் இறுதிப் பொழுதுகளில், இந்த சவால் உச்சத்துக்குப் போன போது, கோக் தன்னுடைய தயாரிப்பில் ஒரு சிறு மாற்றம் செய்து, “நியூ கோக்” என்ற பெயரில் வெளியிட்டது. இதில் நடந்த விஷயம் என்ன தெரியுமா? ஏறக்குறைய பெப்ஸியின் சுவைக்கு நெருக்கமாய் தன் தயாரிப்பின் சுவையை கோக் ...
4.உங்கள் செல்வாக்கு வட்டம்
“யுத்தம் என்று வரும்போது, அதில் எல்லாமே எளிது. ஆனால் எது மிகவும் எளிதோ அதுதான் மிகவும் கடினம்”. இது சீனப்பழமொழி. ஒரு தயாரிப்பு, பயன்படுத்த மிகவும் எளிது என்பதே வாடிக்கையாளர்களுக்கு சொல்லப்படுகிற செய்தி. ஆனால் அந்தத் தயாரிப்பை அவ்வளவு எளியதாய் வடிவமைக்க எவ்வளவோ கடினமான நிலைகளை அவர்கள் கடந்து வந்திருக்க வேண்டும். மார்க்கெட்டிங் என்பது, ஒரு தயாரிப்பைக் கையாள்வது எவ்வளவு சுலபம் என்பதை கஷ்டப்பட்டு சொல்கிற காரியம். சந்தைப்படுத்துவதில், சரியான உத்திகள் கையாளப்பட்டால் அதுவரை எத்தனை சிரமப்பட்டிருந்தாலும் ...
3.எது உங்கள் சந்தை?
1967. அகமதாபாத்துக்கு வந்தார் அந்த இளைஞர். துணிக்கடைகள் முன்பு தன் காரை நிறுத்தி, துணிச் சுருள்களைத் தானே தோள்களில் சுமந்து உள்ளே வருவார். துணிக்கடை முதலாளிகளிடம் தன்னை அறிமுகம் செய்து கொள்வார். “ரொம்ப சாதாரணமான குடும்பத்திலிருந்து வருகிறேன். நான், என் சகோதரர்கள், இன்னும் சில நண்பர்கள் ஒன்று சேர்ந்து நரோடாவில் ஆலை தொடங்கி உள்ளோம். நாளொன்றுக்கு 5000மீட்டர்கள் துணி உற்பத்தி செய்கிறோம். துணிகளை ஹோல்சேலாக வாங்குபவர்கள், புகழ்பெற்ற ஆலைகளின் மிரட்டலுக்கு பயந்து எங்கள் துணிகளை வாங்க மறுக்கிறார்கள். ...
2. அபிப்பிராயங்களால் மெருகேறும் உங்கள் ஆளுமை!
மார்க்கெட்டிங் துறையில் களத்தில் குதிப்பதற்கு முன்னால், நிஜத்தைத் தெரிந்து கொள்ள நிறைய நேரம் செலவிடுங்கள். உங்களைப் பற்றிய நிஜங்கள் உங்கள் அனுபவத்திலும் மூத்தவர்களிடமிருந்து கிடைக்கும். சில சமயம் மிக மிக சிறியவர்களின் வார்த்தைகளிலிருந்தும் கிடைக்கும். பொதுவாக, முன்பின் தெரியாத குழந்தைகளிடம் மூன்று நான்கு நிமிடங்களுக்குள் உங்களால் பழகிவிட முடிகிறதென்றால், மார்க்கெட்டிங் துறையில் மளமளவென்று முன்னேறுவீர்கள் என்று அர்த்தம். குழந்தைகள், புதிய விஷயங்களை எப்போதும் தேடுகின்றன. அதிலும் சுவாரஸ்யமான விஷயங்களை விரும்புகின்றன. நீங்கள் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்து சில ...