1. முக்கிய முடிவுகள் எடுப்பது எப்படி?
நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சவால், முடிவுகள் எடுப்பதுதான். நிறுவனத்தின் வணிக நிலை மற்றும் செயல்பாடுகளின் அடிப்படையில் சில யூகங்களை செய்து நிர்வாகி தனிமனிதராக சில சமயம் முடிவுகள் எடுப்பதுண்டு. இது மிகவும் பழைய முறை. நிறுவனம் பெரிதாக வளர வளர பலரும் சேர்ந்து கூட்டு முடிவுகளை எடுக்கும் சூழல் ஏற்படுவதுண்டு. இதற்கென்று சில நவீன அணுகுமுறைகள் ஏற்பட்டன. அ) ஒவ்வொரு துறையின் தலைவரும், தங்கள் துறையின் உத்தேசமான செயல்திட்டத்தை முன்கூட்டியே வழங்குவது இந்த உத்தேச செயல் ...
38. ஏன் வேண்டும் உற்சாகம்?
வாழ்வில் உற்சாகமாய் இருங்கள் என்று சுய முன்னேற்ற நூல்கள் சொல்கின்றன. சூப்பர் வைஸரும் சொல்லுகிறார். நண்பர்களும் சொல்கிறார்கள். நடிகர்களும் சொல்கிறார்கள். யார் சொல்கிறார்களோ இல்லையோ, தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினிகள் தவறாமல் சொல்கிறார்கள். சொல்பவர்கள் சொல்லட்டும். முதலில் நீங்கள் முடிவெடுங்கள். நீங்கள் உற்சாகமாகவும் நம்பிக்கையோடும் இருக்க வேண்டியது யாருக்காக? உங்கள் ஊக்கத்தை தூக்கி நிறுத்துவது யாருக்காக? நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தின் ஆதாயத்திற்காகவா? உற்சாகமாய் நீங்கள் சொல்லும் ஜோக்குகளால் உங்களுடன் இருப்பவர்களுக்கு செலவில்லாமல் பொழுதுபோகவா? உங்கள் உற்சாகம் யாருக்காக? ...
37. கடவுளும் நீங்களும்
1. கடவுளுக்கும் உங்களுக்கும் நடுவே இடைவெளி விழுந்ததாய்க் கருதுகிறீர்களா? அப்படியானால் ஒன்று மட்டும் உறுதி. நகர்ந்து போனது நீங்களாகத்தான் இருக்கும். 2. காரியங்களைச் செய்ய கடவுளின் துணையைக் கேளுங்கள். ஆனால் அவரே எல்லாவற்றையும் செய்ய வேண்டுமென்று எண்ணாதீர்கள். 3. அடிப்படை விஷயங்களில்கூட அலட்சியமாய் இருந்துவிட்டு, பிறகு கடவுளின் மீது பழி போடாதீர்கள். கடவுளை நம்புங்கள். ஆனால் கார்க் கதவைப் பூட்டுங்கள். 4. நீங்கள் என்னவாக இருக்கிறீர்களோ அது கடவுள் உங்களுக்குத் தந்த பரிசு. நீங்கள் என்னவாக ஆகிறீர்களோ, ...
36. சமகால வெற்றிக்கு சாணக்ய சிந்தனைகள்
(கி.மு. 283 முதல் கி.மு. 350 வரை வாழ்ந்த சாணக்யரின் சிந்தனைகள் இந்தக் காலத்திற்கும் எவ்வளவோ பொருந்துகின்றன. அவரின் சில சிந்தனைகள் – நமக்காக) 1. வளைந்து கொடுப்பதால் வீழ்ச்சிகள் தவிர்க்கப்படுகின்றன. எப்போதும் நிமிர்ந்தே இருப்பது மரங்களைப் போலவே மனிதர்களுக்கும் ஆபத்து. 2. உங்கள் ரகசியங்களை யாரோடும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். உங்களாலேயே அதை ரகசியமாக வைக்க முடியாதபோது மற்றவர்களாலும் முடியாது. 3. விஷமில்லாத பாம்பாக இருந்தாலும் சீறுவது அவசியம். 4. பெரும்பாலான நட்புகளின் பின்னணியில் ஏதேனும் சுயநலம் ...
34.சம்பாத்தியம் உங்கள் சாமர்த்தியம்!
பணம் சம்பாதிப்பது சிலருக்கு வாழ்நாள் போராட்டம். சிலருக்கோ சுலபமான விஷயம். “நீங்கள் சுலபமாக சம்பாதிப்பது எப்படி” என்று அவர்களைக் கேட்கிறபோது, கிடைக்கிற பதில் வித்தியாசமானது!! “குறிப்பிட்ட தொகையை சம்பாதிக்கும் வரை சிறிது காலம் மட்டும் சிரமப்பட்டேன். பிறகு அந்தத் தொகையை சாமர்த்தியாக முதலீடு செய்தேன். முதலீடு வளர்ந்தபோது என் நிலையும் பல மடங்கு உயர்ந்தது” என்கிறார்கள். இதை நாம் குருட்டு அதிர்ஷ்டம் என்று கூறிவிட்டு போகலாம். சாமர்த்தியம் என்று அடையாளம் கண்டு பின்பற்றியும் பார்க்கலாம். சரியாக முதலீடு ...
33.கேட்கத் தெரிகிறதா உங்களுக்கு?
“கேளுங்கள் கொடுக்கப்படும்” மனிதகுலம் கண்ட மகத்தான வாசகங்களில் இதுவும் ஒன்று. எல்லா சமயங்களும், எல்லா கலாச்சாரங்களும், வெவ்வேறு மொழிகளில் இதையே சொல்கின்றன. பொதுவாக நாம் ஒன்றை புரிந்துக் கொள்ள வேண்டும். குழந்தைப் பருவத்தில் நம்மிடமிருந்து வெளிப்படும் இயல்புகளை, வயதாக வயதாக, குலத்துடன் வளர்ந்து வரும்போது அது நமக்குப் பலவகைகளில் உறுதுணையாய் இருக்கிறது. கேள்வி கேட்கிற குணம் அப்படியரு குணம். உங்களுக்கு என்னத் தேவையோ, அதை வெளிப்படையாய் கேட்கிற குணம் ஒவ்வொரு குழந்தையிடமும் உண்டு. சில வேளையில் பொறுமை ...