Blog

/Blog

26. வேலை இழக்க நேர்கிறதா?

உலகெங்கும், பொருளாதாரப் பின்னடைவின் விளைவாக பலருக்கும் வேலை வாய்ப்பு பறி போகிறது. குறிப்பாக, தனியார் நிறுவனங்களில் இந்தநிலை பெருமளவில் இருக்கிறது. ஆட்குறைப்பு, நிறுவனத்தின் உற்பத்தியோ, தொழிலோ குறைவதால் ஏற்படுகிறது. இதற்குப் பெரிய அளவில் தீர்வுகள் எதுவும் தென்படவில்லை. அலுவலர் அல்லது ஊழியரின் செயல்திறன் நன்றாகவே இருந்தாலும், தொழில்சூழல் சரியாக இல்லாத போது வேலையை விட்டு விலக்குவது தவிர்க்க முடியாத ஒன்றாகவே ஆகிவிட்ட சூழலில், வேலையை இழக்க நேரும் தனிமனிதர்கள் இந்தச் சூழலை எப்படியெல்லாம் எதிர்கொள்ளலாம்? யாருக்காவது வேலை ...

25. தள்ளிப் போடாமல் இருப்பது எப்படி?

இந்தக் கேள்வியை யாரிடமாவது கேட்டு பதில் பெறலாம் என்று பரபரப்பாக இருக்கிறதா? பொறுங்கள் – கொஞ்சம் தள்ளிப் போடுங்கள்!! என்ன – முதலுக்கே மோசமாக இருக்கிறதா? யாரையாவது கேட்பதற்கு முன்னால் உங்களையே சில கேள்விகள் கேட்டுக் கொள்ளுங்கள். 1. வேறு முக்கியமான வேலை வந்தததால் எடுத்த வேலையைத் தள்ளிப் போடுகிறீர்களா? இல்லை சோம்பல் காரணமாகத் தள்ளிப் போடுகிறீர்களா? 2. நேரத்தை வீணடிப்பதென்பது நம்மையும் அறியாமல் நிகழக்கூடிய விஷயம்தான். ஒரு நாளில் எந்த நேரத்தை எப்படி வீணடித்தீர்கள் என்பதை தினமும் டயரியில் ...

24. எதிர்வரும் நாளை எதிர்கொள்ளத் தயாரா…?

ஒவ்வொரு நாளிலும் ஏதோவொரு சுவாரசியம் இருக்கத்தான் செய்கிறது. வாழ்வின் ஒவ்வோர் அங்குலமும் அர்த்தத்தாலும் அழகாலும் அபூர்வமான நிகழ்வுகளாலும் நிரம்பியிருக்கிறது. சாதாரண நாள் என்று ஒன்று அந்த உலகம் தோன்றிய நாள் தொட்டு உதிக்கவேயில்லை. நம்மில் இருக்கும் உணர்வும் உற்சாகமும் திட்டமிடுதலும், செயல்படுத்துதலும்தான் ஒரு நாளில் நாம் என்னபெறுகிறோம் என்பதைத் தீர்மானிக்கிறது. ஒவ்வொரு நாளையும் எதிர் கொள்ள அதற்கு முதல் நாளே நாம் தயாராக வேண்டும். இதில் மிக முக்கியம், ஒரு நாளோடு நம்மை எப்படித் தொடர்பு படுத்திக் ...

23. உங்கள் குழந்தைகளும் சாதிப்பார்கள்! – 2

சின்னக் குழந்தைகளை மட்டுமின்றி பதின் பருவத்துக்கு முன்னும் பின்னும் இருக்கும். குழந்தைகளை நாம் எப்படி நடத்துகிறோம் என்பதில் தங்களை பெரியவர்கள் எப்படி எடைபோடுகிறார்கள் என்பது வெளிப்படுகிறது. குழந்தைகளிடம் இயல்பாக, இனிமையாக நீங்கள் விருந்தினர்கள் முன்னிலையில் நடந்து கொண்டால் விருந்தினர்களும் அதுபோல் நடந்து கொள்வார்கள். வீட்டுக்கு வருபவர்கள் பலரும், ஏதோ விசாரணைக் கமிஷன் நீதிபதிகள் போல் குழந்தைகளிடம் பரீட்சை பற்றியும் மதிப்பெண் பற்றியும் மட்டுமே கேட்பார்கள். இவை தவிர குழந்தைகளின் உலகத்தில் எத்தனையோ, விஷயங்கள் இருக்கின்றன. எனவே குழந்தைகளை ...

23. உங்கள் குழந்தைகளும் சாதிப்பார்கள்! – 1

ஒரு குழந்தைக்கு, தன்னைப்பற்றிய அபிப்ராயமும், தன் தகுதிகள் குறித்த அறிமுகமும் பெற்றோர்களின் பாராட்டிலிருந்தோ வசவில் இருந்தோ பிறக்கிறது. சின்னத்தவறொன்றுக்கு “அட மக்குப் பயலே!” என்று தலையில் குட்டு வாங்கும்போது குட்டு, தலையில் பதிகிறது. ஒரு மக்கு என்கிற எண்ணம் மூளையில் பதிகிறது. அக்கறையாலும் அன்பாலும், குழந்தை திருந்த வேண்டும் என்ற தவிப்பிலும்தான் எல்லாப் பெற்றோரும் கண்டிக்கிறோம். ஆனால் குழந்தைகள் மனதில் என்ன பதிவை விடுகிறோம் என்பதுதான் முக்கியம். உங்கள் குழந்தை சராசரியாகப் படிக்கிறதா? இன்னும் படுக்கையை நனைக்கிறதா? ...

22. உழைக்கத் தெரிந்த உள்ளம்!

உலகின் மிகச்சிறந்த வெற்றியாளர்களின் உயர்வுக்குப் பின்னால் இடைவிடாத உழைப்பே காரணமாய் இருக்கிறது. இதை அடிமனதில் அடிக்கோடிட வேண்டும் என்றால் உங்களுக்கு வியப்பாக இருக்கும். ஏன் தெரியுமா? அடுத்தவர்களின் உழைப்பை அண்ணாந்து பார்த்து “ஆஹா” என்று பாராட்டும் பலரும், அவரவர் உழைப்பு என்று வரும்போது அலட்சியம் காட்டுகிறார்கள். கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெரியவர், கோவையில் சில உறவினர்கள் மூலம் தன் மகனை நிறுவனமொன்றில் வேலைக்குச் சேர்த்தார். முதல் நாள் அலுவலகத்தில் விட்டு விட்டு அவர் சொன்ன அறிவுரையைக் கேட்க ...
More...More...More...More...