நவராத்திரி கவிதைகள் 10
நவராத்திரி கவிதைகள் 10 (7/10/19) (06.10.2019அன்று சென்னையில் நிகழ்ந்த “முப்பெருந் தேவியர்” எனும் தலைப்பிலான கவியரங்கில் தலைமையேற்றுப் பாடிய கவிதை) பட்டாக இருள்போர்த்து பராசக்தி நடக்கின்ற பண்டிகைதான் நவராத்திரி பக்கத்தில் கலைமகளும் அலைமகளும் கைகோர்த்து பவனிவரும் சுபராத்திரி எட்டாத உயரங்கள் எட்டிடவே செய்கின்ற ஏகாந்த நவராத்திரி எந்திரத்தில் மந்திரத்தில் தந்திரத்தில் விக்ரஹத்தில் ஏந்திழையாள் வரும்ராத்திரி கட்டான குழலோடு பொட்டோடு மலரோடு கற்பகத்தாள் வரும்ராத்திரி கயிலையிந்த மயிலையென கபாலிவந்து அமர்கின்ற குளக்கரையின் அருள்ராத்திரி எட்டடுக்கு மாளிகைக்கும் ஏழைகளின் குடிசைக்கும் ...
நவராத்திரி கவிதைகள் 9
நவராத்திரி கவிதைகள் 9(6/10/19) வெண்ணிறப் பாற்கடல் மத்தியிலே வெண்ணிலவாக எழுந்தவளாம் தண்ணந் துழாயணி கேசவனின் திருமார் பினிலே அமர்ந்தவளாம் எண்ணிய யாவையும் நிகழ்ந்திடவே என்றும் இன்னருள் பொழிபவளாம் வண்ணத் திருமகள் திருவடிநம் வாசலில் வைத்தால் வாழ்ந்திடுவோம் பாம்பணை துயில்கிற பேரழகி பிள்ளைகள் பசியைப் போக்கிடுவாள் தேம்பும் மனங்களை தேற்றிவைத்து தேடரும் செல்வங்கள் ஆக்கிடுவாள் தாம்புக் கயிற்றினில் கட்டுண்ட தாமோதரனின் மனையரசி ஆம்நம் அன்பினில் சிறைப்படுவாள் ஆயிரம் நன்மைகள் அளித்திடுவாள் செக்கச் சிவந்த தாமரையே சிம்மா சானமாம் அவளுக்கு ...
நவராத்திரி கவிதைகள் 8
நவராத்திரி கவிதைகள் 8(6/10/19) காலை திருவாரூர் மாலை திருக்கடவூர் கோலங்கள் காணக் கிடைத்ததே – சீலமாய் அங்கே கமலாம்பா இங்கே அபிராமி மங்கலத்தே ஆழும் மனம் . யோகா சனத்தே இருந்தாள் கமலாம்பா ஏகாந்த மாக அபிராமி – ஆகா விழிகண்ட காட்சி விரித்துரைப்பார் யாரோ மொழிகொண்டு சேர்க்குமோ மாண்பு. புற்றிடங் கொண்டார் பொருந்தும் கமலாம்பா மற்றிங் கமுதீசர் மாண்பரசி – குற்றங்கள் நீக்கிடுந் தாயர் நயனக் கனிவன்றோ காக்கும் நமையே கனிந்து. ஆரத்தி நேரம் அவளே ...
நவராத்திரி கவிதைகள் -7
நவராத்திரி கவிதைகள் 7(5/10/19) சூரியனை சந்திரனை சூடுகிற தோடாக்கி சுந்தரி நீ நிற்கிறாய் சூட்சுமங்கள் நிகழ வைத்து சாட்சியங்கள் இல்லாமல் சுடராக ஒளி பூக்கிறாய் காரியங்கள் அத்தனையும் கணப்பொழுதில் ஆக்கிவிட்டு கல் வடிவில் ஏன் நிற்கிறாய் காண வரும் பக்தர் நலம் பேணுகின்ற அபிராமி காண்பதெல்லாம் நீ ஆகிறாய் காரிகையே உன்னுடைய காலசையும் ஜதியினிலே கூத்தனவன் புன்னகைக்கிறான் காலகாலன் மனம்நெகிழும் காதலிலே நீபோடும் கட்டளைக்கே ஆட்படுகிறான் பேரிகையின் ஒலியெல்லாம் பேரழகே உனைப்பாடும் பெரியவிழா நவராத்திரி பேணுமொரு தாயாகி ...
நவராத்திரி கவிதைகள்- 6
நவராத்திரி கவிதைகள் 6(3/10/2019) புத்தகம் என்பது கோயிலென்றே -அதை ...
நவராத்திரி கவிதைகள்- 4
நவராத்திரி கவிதைகள் 4(2/10/19) தோகை விரித்திடும் பொன்மயில் அழகில் தென்படும் பசுமை அவள்கொடைதான் வாகைகள் சூடிட நீதியும் எழுகையில் வெறிகொண்டு தொடர்வது அவள் படைதான் யாகங்கள் யாவிலும் ஆடிடும் கனல்மிசை ஏகி நடப்பது அவள் நடைதான் நாகத்தின் படத்திலும் நாதத்தின் இசையிலும் நாளும் அசைவது அவள் இடை தான் சூத்திரம் எழுதிய ஞானியர் நெஞ்சினில் சூட்சுமம் ஆனவள் பராசக்தி பாத்திரம் நிரம்பிடும் தானிய வகைகளில் பவித்திரம் ஆனவள் பராசக்தி காத்திடும் வலிமையின் காருண்ய ரூபமாய் கண்ணெதிர் தெரிபவள் ...