Blog

/Blog

5. தோல்வி என்பது அபிப்பிராயம்தான்

தோல்வி என்பது ஓர் அபிப்பிராயம் என்றார் ஓர் அறிஞர். தோல்வி, ஒரு வெற்றியின் தொடக்கம் என்பது ஒருவகை அபிப்பிராயம். இது ஒருவகை முடிவின் அடையாளம் என்பது இன்னொரு வகை அபிப்பிராயம். ஏற்பட்ட தோல்வியை, பாடமாக எடுத்துக் கொண்டு புதிதாகத் தொடங்குவதா, அவமானமாக எடுத்துக்கொண்டு ஒதுங்குவதா என்பதில்தான் வளர்ச்சிக்கான வாய்ப்பும் வாய்ப்பின்மையும் இருக்கிறது. வெற்றி பெறவேண்டும் என்ற விருப்பம் இருக்கும்வரை எந்தத் தோல்வியும் பொருட்படுத்தத்தக்கதல்ல. சிலர் சின்னத் தோல்விகளுக்கே எல்லாவற்றையும் இழந்துவிட்டதாய் எண்ணிக் கலங்குவார்கள். மனிதன் உயிருடன் இருக்கும்வரை, ...

4. வெற்றியின் அளவுகோல்கள் என்ன?

நீங்கள் எந்த வேலை பார்ப்பவராய் இருந்தால் என்ன? நீங்கள் எந்த வயதில் இருந்தால் என்ன? நீங்கள் எங்கு வசிப்பவராய் இருந்தாலும் என்ன? உங்கள் வாழ்க்கை வெற்றியை நோக்கி நகர்கிறதா என்று முதலில் உங்களுக்குத் தெரியவேண்டியது அவசியம்! அதற்கு எமர்சன் தருகிற எளிய அளவுகோல்கள் இங்கே! அடிக்கடி சிரித்து மகிழும் வாய்ப்பை நீங்கள் விரும்பி ஏற்றால், அறிவாளிகளின் மதிப்புக்கும் குழந்தைகளின் அன்புக்கும் நீங்கள் ஆளாகியிருந்தால், உங்களை விமர்சிப்பவர்களும் மதிக்கும் விதமாய் உங்கள் செயல்திறன் அமைந்தால், போலி நண்பர்களின் துரோகத்தைத் ...

3. ஒபாமா சொல்லும் மாற்றம் உங்கள் வாழ்விலும்தான்!

மாற்றங்களின் யுகம் தொடங்கிவிட்டது என்கிற தோற்றத்தை அமெரிக்கா எங்கும் அலைபோல எழுப்பியிருக்கிறார் ஒபாமா. உண்மையில் இன்று ஒவ்வொரு மனிதருக்கும் மாற்றமே ஆயுதம். மாற்றமே கேடயம். மாற மறுக்கும் யாரையும் மிதித்துக்கொண்டு போகும் வேகத்தில் மாற்றங்களுக்கான அவசியங்கள் வேக வேகமாய் வந்துகொண்டிருக்கின்றன. உங்கள் வாழ்விலும் சில விஷயங்களை உடனடியாக மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியத்தையும் அவசரத்தையும் உணர்கிறீர்கள்தானே! அவசரப்பிரகடனம் செய்யுங்கள்: தினசரி வேலைகளில், குடும்பத்திலும் நிறுவனத்திலும் ஆகிற செலவுகளில் உடனடியாக செய்ய வேண்டிய மாற்றங்களைப் பட்டியலிட்டு, சம்பந்தப் பட்டவர்களுக்கு ...

2. “நீங்கள்” என்றோர் அதிசயம்

1. உங்கள் அனுமதியில்லாமல் நீங்கள் கொண்டிருக்கும் அமைதியை யாராலும் குலைக்க முடியாது. 2. உங்கள் வளர்ச்சியை மற்றவர்களால் தற்காலிகமாகத்தான் தடை செய்ய முடியும். அது நிரந்தரமாக நின்றுபோனால் அதற்கு நீங்கள்தான் காரணமாக இருப்பீர்கள். 3. நீங்களாக நின்றுவிடும்போதுதான் வெற்றியோ வளர்ச்சியோ நின்றுவிடுகிறது. 4. ஒரு சிக்கலில் இருந்து நீங்கள் தப்பிக்க நல்ல வழி, அதைத் தீர்ப்பதுதான்! 5. பயன்படும் விதமாக வடிவமெடுக்கும் வரையிலும் பகிர்ந்துகொடுக்கும் வரையிலும் நீங்கள் கொண்டிருக்கும் எந்தத் திறமையும் பயனற்றதுதான். 6. வாழ்க்கையிடமிருந்து நீங்கள் ...

1. உங்கள் வாழ்வின் மூன்று சக்திகள்!

வாழ்க்கையைப்பற்றி ஆழமாக யோசித்தால், உங்களை சக்திமிக்க மனிதராக ஆக்கக்கூடிய அம்சங்கள் மூன்று என்று சொல்லத் தோன்றுகிறது. நமது நம்பிக்கை மாத இதழின் மனிதவள மேம்பாட்டு இயக்கமாகிய ‘சிகரம் உங்கள் உயரம்’ தொடங்கப்பட்டபோது, ஒவ்வொருவருக்கும் வேண்டிய அந்த மூன்று அம்சங்களையே அமைப்பின் நோக்கமாக ஆக்கினோம். அந்த மூன்று அம்சங்கள் இவைதான்: பணம், பரிவு, பக்குவம். உங்களுக்கு வருகிற பணம், அடுத்தவர்களின் பொறாமையைத்தானே அதிகரிக்க முடியும்? உங்கள் ஆளுமையை எப்படி அதிகரிக்கும்? என்ற கேள்வி உங்களில் சிலருக்கு எழலாம். பணம் ...

நினைத்தது போலவே வெற்றி!-1

உங்களையே நீங்கள் கேட்டுப்பார்க்க வேண்டிய கேள்வி இதுதான். உங்களால் ஆளுமைமிக்க மனிதராக விளங்க முடிகிறதா? இந்தக் கேள்வியைப் படித்தவுடனேயே உங்கள் நண்பர்கள் – உங்களுக்கு வேண்டியவர்கள் – உங்களைப் பற்றிச் சொல்லும் பாராட்டு மொழிகளும், உங்களுக்குக் கீழே பணிபுரிபவர்கள் உங்களிடம் காட்டும் பணிவும் உங்கள் நினைவுக்கு வரும். “ஆமாம்! நான் ஆளுமைமிக்க மனிதர்தான்” என்று ஒரு குரல் உள்ளே எழும். இவை, உங்களுக்குள் இருக்கும் ஆளுமைப்பண்பின் ஆரம்ப அறிகுறிகள்தான். இதுவரை சந்தித்திராத ஒரு மனிதரைப் பார்க்க நேர்கையில், ...
More...More...More...More...