31. சிறகு முளைக்கும் ஒருநாள்…
தன் பதிமூன்று வயது மகளுக்க மிதிவண்டி ஓட்டப் பழக்கிவிட்டுக் கொண்டிருந்தார் அவர். வயதுக்கு மிஞ்சிய உயரம். கால்களுக்குப் பெடல் எஞ்சியும் எட்டாமலும் இருந்ததில் அவ்வவ்போது தடுமாற்றம். சைக்கள் சற்றே சாய்கிற போதெல்லாம், “அப்பா, விட்டுடாதீங்கப்பா” என்று அலறுவாள் மகள். “விட மாட்டேன்! தைரியமா ஓட்டு” சைக்கிளைப் பிடித்துக்கொண்டே, கூட ஓடுவார் அவர். தினமும் காலையில் இந்தப் பயிற்சி நடக்கும். நாட்கள் நகர்ந்தன. “அப்பா! விட்டுடாதீங்கப்பா!” என்று அலறுவது குறைந்தது. அவ்வவ்போது மெல்லிய குரலில் சொல்வதோடு சரி. தன் ...
30. சிறுதொழில் செய்பவரா நீங்கள்?
“ஆமாம். என்ன சொல்லப் போறீங்க? என் தொழிலில் நான்தான் ராஜா” என்கிற எண்ணம், இந்தக் கட்டுரையின் தலைப்பைப் பார்த்துமே தலை தூக்குகிறதா? சந்தேகமேயில்லை. நீங்கள் சிறுதொழில் செய்பவர்தான். யாரெல்லாம் சிறுதொழில் செய்கிறார்கள்? ஏன் சிறுதொழிலுக்கு வருகிறார்கள்? இந்த இரண்டு கேள்விகளுக்கும், நிர்வாகவியல் நிபுணர் ஒருவர் தந்த பதில்கள் முக்கியமானவை. “தன் மீதுள்ள நம்பிக்கை, முழுமையான சுதந்திரம், இந்த இரண்டும்தான் ஒருவர் சுய தொழில் தொடங்கக் காரணம். இந்த இரண்டின் அளவும் அதிகமாவதுதான் அவர் தனது தொழிலைக் கைவிடவும் ...
29. வெற்றி இரண்டு விதம்
வழியில் வருகிற வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு வெற்றி காண்பது ஒருவிதம். மற்றவர் கண்களுக்கு எளிமையாய்த் தென்படும் விஷயங்களில்கூடப் பெரிய வாய்ப்புகளைக் கண்டறிந்து, அதன் வழியே வெற்றிபெறுவது இன்னொருவிதம். பாறைகள் குவிந்த கிடக்கிற இடம், பார்ப்பவர் கண்களின் தன்மைக்கேற்ப கலைக்கூடமாகவோ குவாரியாகவோ மாறுகிறது. ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில், விவசாயத்திற்கும் பயனில்லாத வெற்றிடம், சிலர் கண்களில் மட்டும் ஓய்வு நேர இல்லங்கள் உருவாக்குவதற்குரிய இடமாகத் தெரிகிறது. மறந்துவிடாதீர்கள்! ஒரு பொருளோ, இடமோ, மனித ஆற்றலோ நிகழ்காலத்தில் என்னவாக இருக்கிறது ...
28. அந்த முதல் வெளிச்சம்
விசுவரூப எடுத்து நிற்கும் விஞ்ஞான யுகத்தில், நம் மனதில், நம்மையும் அறியாமல் ஒரு பெருமை தோன்றும். “அடடா! செல்ஃபோன் வந்தாச்சு! இமெயில் வந்தாச்சு! குளோனிங்கூட வந்தாச்சு! சும்மா கற்கால மனுஷன் மாதிரி குகைக்குள்ளே வாழாம புதுசு புதுசா எத்தனை கண்டுபிடிச்சிருக்கோம்!” உண்மைதான். ஆனால், இந்தக் கண்டுபிடிப்புகள் எல்லாமே கற்கால மனிதன் கொடுத்த கொடை என்பதை மறந்துவிடக்கூடாது. ஆதிமனிதன் பிறந்தபோது மூளியாயிருந்தது பிரபஞ்சம். கீழே கிடந்த இரண்டு கற்களை என்னவென்று பார்த்தான். அது ஆர்வம். இரண்டையும் உரசினால் ஏதோ ...
27. டி.வி. பார்க்காத கடவுள்
அமெரிக்கப் பள்ளி ஒன்றில், மூன்றாம் வகுப்பு மாணவர்களிடம், அவர்கள் புரிந்து கொண்ட கடவுளைப் பற்றி எழுதச் சொன்னார்கள். எட்டு வயதான டேனி டட்டன் என்ற குழந்தை என்ன எழுதியது தெரியுமா? “கடவுளின் முக்கியமான வேலைகளில் ஒன்று, மனிதர்களைப் படைப்பது. கடவுள் பெரியவர்களைப் படைப்பதில்லை. குழந்தைகளைத்தான் படைக்கிறார். சின்னச் சின்ன அங்கங்களை உருவாக்குவது அவருக்கு எளிதாக இருக்குமில்லையா? அதற்காக! ஆனால் குழந்தைகளுக்கு நடக்கவும் பேசவும் கற்றுத்தர கடவுளுக்கு நேரமில்லை. அதனால் அம்மா அப்பாவிடம் குழந்தைகளை விட்டுவிட்டார். ஏசு, கடவுளின் ...
ஊரிசையில் நேரிசையும் கவிஞர் புவியரசு குறித்த சர்ச்சையும்
கவிஞர்கள் கவியன்பன் பாபு, மீனாட்சிசுந்தரம் ஆகியோர் இணைந்து வடித்த “ஊரிசையில் நேரிசை” நூலுக்கு கவிஞர் புவியரசு அவர்கள் வழங்கிய வாழ்த்து மடல் சார்ந்த விவாதங்கள் இன்று இரு முனைகளில் மையம் கொண்டுள்ளன. ஒன்று, புவியரசு அவர்களின் பாடல்கள் வெண்பா வடிவில் இருந்தாலும் தளை தட்டுகின்றன என்பதை மேற்குறித்த இரு கவிஞர்களும் தங்கள் எதிர்வினையில் சுட்டினர். அத்துடன் “தளைதட்டினாலென்? தலைதட்டினால் என்?” என்னும் வரி தங்கள் வெண்பாக்களில் தளைதட்டுவதாக சொல்கிறதோ என்றும் தாம் ஐயுறுவதாய் குறிப்பிட்டனர். இந்த விவாதத்தில் ...