14. அணுகுமுறை சரியாயிருந்தால் வெற்றி நிச்சயம்
“அரைக் கிணறு தாண்டியவர்கள்” மீதியுள்ள தூரத்தைத் தாண்டும் முன் எதனால் விழுகிறார்கள்? முழுக்கிணற்றையும் தாண்ட முடியாது என்று தாங்களாகவே முடிவுசெய்து கொள்வதால்தான் என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள். மனித மூளைக்குள் பல விஷயங்கள் காட்சி வடிவில் பதிவாகியிருப்பதாக, டாக்டர் காரி பிரிப்ரம் என்கிற புகழ்பெற்ற நரம்பியல் சார்ந்த உளவியல் நிபுணர் சொல்கிறார். அதாவது, ஒரு விஷயத்தை உங்கள் கற்பனையில் காட்சிபூர்வமாக அமைத்து, மூளையில் பதிவு செய்துகொண்டால், சாதிக்க முடியும் என்கிற நேர்மறையான அணுகுமுறை மூளையில் ஆழப் பதிந்துவிடுகிறது. அந்த ...
13. அம்பைத் தொடுக்க அரை நிமிஷம்!
சில சாதனைகளைப் பார்க்கிறபோது எல்லாம் வெகுசீக்கிரமாக நடப்பதுபோல் தெரிகிறது. குறி பார்த்து அம்பை விடுகிற மனிதன், அனாயசமாகச் செய்துமுடிப்பதுபோல் படுகிறது. ஆனால், அந்த அரை நிமிட அரங்கேற்றத்தின் பின்னணியில் ஆறு வருட அவஸ்தையும் அயராத பயிற்சியும் இருந்திருக்கும். சொல்லப்போனால், நம் திறமை மீது நமக்கு முழு ஆளுமையும் நம்பிக்கையும் இருப்பதன் அடையாளமே, அந்தச் செயலை அனாயசமாகச் செய்துமுடிப்பதுதான். நம்மால் ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கும்போதுதான் செய்கிற தொழிலை ரசிக்க முடியும். சிறிதளவு சந்தேகம் இருந்தாலும் அது ...
12. இடைவேளை இல்லாத வாழ்க்கை!
நீங்கள் எவ்வளவு சுறுசுறுப்பானவராக இருந்தாலும் சரி, ஏதாவது ஒரு நேரத்தில், எதையும் செய்யாமல் “சிறிது நேரம் சும்மா இருக்கலாம்” என்று தோன்றும். அதுபோன்ற நேரங்களில் என்ன செய்யலாம் என்பது பற்றி உளவியல் நிபுணர்கள் ஆராய்ச்சி செய்து, வித்தியாசமான வழிகளைச் சொல்லி இருக்கிறார்கள். அந்த இடைவேளை அவசியமானதா-? அனாவசியமானதா? கண்டுபிடிக்கலாம், வாருங்கள்! உங்களை ஒருமுறை கேளுங்கள்! இந்த இடைவேளை இப்போது தேவையா என்று உங்களை நீங்களே கேளுங்கள். சில நேரங்களில், கடுமையாக வேலை செய்து களைத்திருந்தால், ஓர் இடைவேளை ...
11. நீங்கள் அதை நிறுத்துங்கள்; அது உங்களை நிறுத்தும் முன்!!
“மனுஷன்னா பலவீனம் இருக்கத்தான் செய்யும்” என்று சொல்லிக்கொண்டே வேண்டாதவற்றை விடாப்பிடியாகப் பற்றியிருப்பவர்கள் சிலருண்டு. “அது” என்றால் போதைப் பழக்கமாகத்தான் இருக்கவேண்டுமென்று அவசியமில்லை. அரட்டையில் ஆர்வம், அனாவசியப் பதட்டம் என்பது போன்ற பலவீனங்களில் தொடங்கி, புகை, போதை போன்ற பலதும் இதிலே அடங்கும். உங்கள் பலவீனம் என்ன என்று உங்களிடம் வெளிப்படையாகச் சொல்லுமாறு நெருக்கமானவர்களை வற்புறுத்துங்கள். முதுகுக்குப் பின்னால், முணுமுணுத்து வந்ததை முகத்துக்கு நேராக சொல்லத் தூண்டுங்கள். அடுத்து, அந்தப் பழக்கத்தை ஏன் அகற்ற வேண்டும் என்றொரு பட்டியலை ...
10. உங்களுக்கு சாதகமான ஜாதகமா?
நம்பிக்கையூட்டும் விஷயங்களை விடுத்து, ‘ஜாதகம்’ என்ற மூடநம்பிக்கைக்குள் பாதை செல்கிறதே என்று யோசிக்கிறீர்களா? ஜாதகத்தை வைத்து ஒருவரது வாழ்க்கையின் மகிழ்ச்சி, வெற்றி தோல்விகளை கணித்துவிடமுடியும் என்று சோதிடம் கூறுகிறது. 9 கிரகங்களின் நிலையை வைத்தே பலன்கள் கூறப்படும். அதேபோன்று, 9 முக்கிய அம்சங்களை மனோதிடத்துடன் வாழ்க்கையில் பின்பற்றினால் வெற்றி நிச்சயம். 1.நேரம்: வியாபாரத்தில் எவ்வளவு தொகை முதலீடு செய்கிறீர்கள் என்பதைவிட எவ்வளவு நேரத்தை அதற்கென முதலீடு செய்கிறீர்கள் என்று கவனிக்க வேண்டும். வியாபாரம் தொடர்பாக செயல்பட சிந்திக்க ...
9. பெரிய பெரிய ஆசை
கமர்கட்டுக்கும், லாலி பாப்பிற்கும் ஆசைப்படும் குழந்தைகளே இப்பொழுது கம்ப்யூட்டருக்கும், ஒலிம்பிக்ஸிற்கும் ஆசைப்படுகிறார்கள். தகுதிகளை வளர்த்துக்கொண்டிருக்கும் பருவத்திலேயே அவர்களுக்கு இவ்வளவு பெரிய ஆசை இருக்கிறது. தகுதிகளை, படிப்பு, அனுபவம், பொது அறிவு எனப் பல பிரிவுகளில் வளர்த்துக் கொண்டுள்ள நாம் இன்னும் எவ்வளவு பெரிய இலக்குகளுக்கு ஆசைப்பட வேண்டும். வாழ்வது ஒருமுறை. அதில் மன திருப்தியுடன் சாதித்தோம், சம்பாதித்தோம்.. ஏழை எளியவர் நான்கு பேருக்கு உதவினோம் என்ற சந்தோஷத்தை எல்லாம் ருசி பார்க்க வேண்டாமா? எப்படிப்பட்ட லட்சியம்: இளங்கலை, ...